Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
தாகத்தை தணிக்க மட்டுமல்ல தர்பூசணி... ஆண்களுக்கு அவசியமானது !

கோடைகாலமும் தர்பூசணியும்
இயற்கையானது அந்தந்த சீசனிற்கு ஏற்ப பழங்களையும், காய்கறிகளையும் விளைவிக்கிறது. கோடையில் உஷ்ணத்தை சமாளிக்க இயற்கை அளித்துள்ள மிகப்பெரும் கொடை தர்பூசணிப் பழம். இது உடலுக்குக் குளிர்ச்சியை தருவதோடு எண்ணற்ற நன்மைகளையும் தருகிறது.
தர்பூசணியில் உள்ள சத்துக்கள்
தர்பூசணி பழத்தில் இரும்பு சத்து அதிகம் காணப்படுகிறது. பசலைக்கீரைக்கு சமமான அளவு இரும்புச் சத்து அதிகம் உள்ளது. இதில் வைட்டமின் சி, வைட்டமின் ஏயும் காணப்படுகின்றன. வைட்டமின் பி6, வைட்டமின் பி1 உள்ளன. மேலும் பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகளும் காணப்படுகின்றன.
இயற்கை வயாக்கரா
தர்பூசணி பழம் ஓர் இயற்கையான 'வயாக்ரா' என்பது தான்.
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் ஏ&எம் புரூட்ஸ் அண்ட் வெஜிடபிள் இம்ப்ரூவ்மெண்ட் மையத்தின் இயக்குனரான பீமு பாட்டீல் என்பவர் தர்பூசணி பழம் குறித்து மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு வியக்கத்தக்க தகவல்கள் தெரியவந்துள்ளன. அதாவது, ஒரு வயாக்ரா மாத்திரையில் அடங்கியுள்ள சக்தி, தர்பூசணி பழத்திலும் இருப்பது தெரியவந்துள்ளது.
தர்பூசணியில் வெறும் தண்ணீர் சத்துதான் உள்ளது. அதில் வேறு சத்து எதுவும் இல்லை என்று கூறி வந்தவர்களுக்கு இந்த புதிய தகவல் ஒரு இன்ப அதிர்ச்சியாகும். தர்பூசணிக்கு ஆசையை' அதிகரிக்கும் ஆற்றலும் கூட உள்ளதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
தர்ப்பூசணியில் உள்ள ஃபைட்டோ - நியூட்ரியன்ட்ஸ் என்ற சத்துக்கள், உடம்பை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கின்றன. இதில் உள்ள மூலப்பொருட்கள் ரத்தம் வழியாக சென்று நரம்புகளுக்கு கூடுதல் சக்தியை தருகிறது.
தர்பூசணியில் உள்ள சிட்ரூலின்' என்ற சத்துபொருள், வயாகராவை போல் ரத்த நாளங்களை விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்குமாம்.
இதயநோயாளிகளுக்கும் நன்மை
தர்பூசணியை சாப்பிட்ட பிறகு, ஏற்படும் வேதியல் மாற்றம் காரணமாக சிட்ரூலின்', அர்ஜினைனாக' எனும் வேதிப்பொருளாக மாற்றப்படுகிறது. அது இதயத்துக்கும், ரத்த ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளையும் ஊக்குவிக்கிறது என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த சிட்ரூலின்-அர்ஜினைன் வேதி மாற்றமானது, சர்க்கரை நோய்க்காரர்களுக்கும், இதய நோயாளிகளுக்கும் கூட நன்மை செய்கிறதாம். இதில், முக்கியமானது என்னவென்றால், தர்பூசணியில் உள்ள மேல்பகுதி அதாவது, வெண்மை பகுதியில்தான் ஆண்மையை அதிகரிக்கும் சத்து உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
நம் ஊரில் தாகம் தணிக்க தர்பூசணி பழத்தின், சிவப்பு பகுதியை மட்டும், கத்தியால் செதுக்கி எடுத்து, விதைகளை நீக்கி விட்டு சாப்பிடுவார்கள். இல்லையெனில் பாழத்தை துண்டுகளாக்கி சிறிது உப்பும், மிளகுத்தூளும் அதன் மேல் தூவி சாப்பிடுவார்கள். மேலும் பழ ரசமாகவும் சாப்பிடுவார்கள். ஆனால் இந்த கட்டுரையை படித்த பின்னர் பழத்தின் சிவப்பு பகுதியை விட்டு விட்டு வெண்மை பகுதியைத்தான் அதிகம் சாப்பிடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications