For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விளையாட்டு வீரர்களுக்கு வாழைப்பழம் சிறந்தது!

By Mayura Akilan
|

Banana
விளையாட்டு வீரர்கள் ஊட்டச்சத்து பானம் அருந்துவதை விட வாழைப்பழம் சாப்பிட்டுவிட்டு சென்றால் அவர்களால் சிறந்த அளவில் தங்களின் திறமையை நிரூபிக்க முடியும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

பள்ளிப்பருவத்தில் கல்வியைப்போல விளையாட்டும் இன்றியமையாத ஒன்றுதான். அதனால்தான் விளையாட்டிற்கு என்று தனி வகுப்புகள் இன்றைக்கு இருக்கின்றன. அறிவு வளர்ச்சிக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ அதேபோல உடல் வளர்ச்சிக்கும், விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். விளையாட்டில் ஈடுபடும் வீரர்கள் வீராங்கனைகளுக்கு ஏற்ற உணவுகளை கொடுக்கவேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் நிபுணர்கள். எளிமையான உணவான வாழைப்பழம் விலை அதிகம் கொண்ட ஊட்டச்சத்து பானத்தை விட அதிக சக்தி நிறைந்தது என்று நிபுணர்கள் நிரூபித்திருக்கின்றனர்.

அதிகபட்சம் 2 ரூபாய் மட்டுமே கொண்டது வாழைப்பழம். விலை அதிகம் கொண்ட ஊட்டச்சத்து பானத்தில் இருப்பதை விட ஒரு வாழைப்பழத்தில் உற்சாகம் தரும் ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றனவாம்.பொட்டாசியம் சத்து நிறைந்த வாழைப்பழம் உயர்தர ஊட்டச்சத்துமிக்கது. இது ஓட்டம், சைக்கிள் போன்ற விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்றும் வீரர்களுக்கு அதிக அளவில் சக்தி அளிக்கக்கூடியது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இது ஸ்போர்ட்ஸ் டிரிங்க்ஸ் எனப்படும் கார்பனேட் பானத்தைக் காட்டிலும் வாழைப்பழம் ஆரோக்கியம் மிக்கது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். வாழைப்பழத்தில் ஆன்டிஆக்ஸிடென்ஸ் அதிகம் காணப்படுகின்றன. இந்த ஊட்டச்சத்துக்கள்தான் விளையாட்டு வீரர்களுக்கு கிரியாஊக்கியாக செயல்படுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.

விளையாட்டு வீரர்கள் உற்சாக பானத்தை அருந்துவதைக் காட்டிலும் சிறந்த கிரியா ஊக்கப்பொருளாக உள்ள வாழைப்பழத்தை சாப்பிடலாம் என்று இந்த ஆய்வினை மேற்கொண்ட வடக்குக் கரோலினா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் டேவிட் நியாமேன் கூறியுள்ளார்.

English summary

Bananas 'better than sports drinks for athletes' | விளையாட்டு வீரர்களுக்கு வாழைப்பழம் சிறந்தது !

Bananas beat sports drinks as energy source for athletes, a new study has revealed. The fruit, which is rich in potassium and nutrients, has always been a favourite for endurance runners and cyclists.
Story first published: Friday, July 13, 2012, 10:24 [IST]
Desktop Bottom Promotion