Latest Updates
-
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்!
சர்க்கரை நோயாளிகள் காலையில் சாப்பிட ஏற்ற சில தென்னிந்திய காலை உணவுகள்!
சர்க்கரை நோயாளிகள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல சுவையான மற்றும் ஆரோக்கியமான பல தென்னிந்திய காலை உணவுகள் உள்ளன. அந்த காலை உணவுகள் தான் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
South Indian Breakfast Recipes For Diabetics: இன்று சர்க்கரை நோயானது உலகளவில் மிகவும் கவலைக்குரிய ஒரு ஆரோக்கிய பிரச்சனையாக மாறி வருகிறது. சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது. மேலும் இந்த சர்க்கரை நோய் 2045 ஆம் ஆண்டிற்குள் பாதிக்கும் மேற்பட்டவர்களை, அதுவும் 20 வயதினர்களை தாக்கக்கூடிய ஒரு ஆரோக்கிய பிரச்சனையாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை நோய் என்பது இரத்த சர்க்கரை அளவில் ஏற்படும் ஏற்றஇறக்க நிலையாகும். இந்த சர்க்கரை நோயை சரியான உணவுப் பழக்கங்கள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவற்றின் மூலம் கட்டுப்பாட்டில் வைத்து நிர்வகிக்கலாம்.

ஒரு நாளில் காலை உணவு மிகவும் இன்றியமையாதது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகமிக முக்கியமானது. சர்க்கரை நோய் இருந்தால் நேரம் தவறாமல் உணவுகளை உண்ண வேண்டும். சர்க்கரை நோய் உள்ள பலருக்கு காலை உணவாக என்னலாம் சாப்பிடலாம் என்ற ஒரு கேள்வி மனதில் இருக்கும். அத்தகையவர்களுக்கு இக்கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் சர்க்கரை நோயாளிகள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல சுவையான மற்றும் ஆரோக்கியமான பல தென்னிந்திய காலை உணவுகள் உள்ளன. அந்த காலை உணவுகள் தான் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

1. சோயா தோசை
உங்களுக்கு தோசை பிடிக்குமானால், வழக்கமான தோசைக்கு பதிலாக, சோயா தோசையை சாப்பிடலாம். வழக்கமான தோசையை விட சோயா தோசையில் புரோட்டீன்கள் அதிகமாகவும், கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாகவும் உள்ளன. எனவே இது சர்க்கரை நோயாளிகளுக்கான ஒரு ஆரோக்கியமான காலை உணவாக இருக்கும். முக்கியமாக இந்த தோசை மிகவும் சுவையாக இருக்கும்.

2. ராகி ஊத்தாப்பம்
தென்னிந்தியாவில் ஊத்தாப்பம் மிகவும் பிரபலமான ஒரு உணவு. ஆனால் வழக்கமான ஊத்தாப்பதை விட ராகி ஊத்தாப்பம் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. ஏனெனில் ராகியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த ராகியுடன் விருப்பமான காய்கறிகளை சேர்த்து ஊத்தாப்பம் செய்தால், அது சர்க்கரை நோயாளிகளுக்கான ஒரு சிறந்த காலை உணவாக இருக்கும். வேண்டுமானால் ட்ரை செய்து பாருங்கள்.

3. வரகு உப்புமா
வரகு உப்புமாவில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இது சர்க்கரை நோயாளிகளுக்கான ஒரு அற்புதமான மற்றும் சுவையான காலை உணவாகும். வரகும் ராசியைப் போன்றது தான். ஆனால் இது ராகியை விட இன்னமும் ஆரோக்கியமானது மற்றும் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவானது. இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து செரிமான செயல்முறையை சீராக்குவதோடு, இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவும்.

4. சன்னா சுண்டல்
வெள்ளை சன்னா என்று அழைக்கப்படும் வெள்ளை நிற சுண்டலானது சர்க்கரை நோயாளிகளுக்கான அற்புதமான உணவுப் பொருள். இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவ என்பதால், சர்க்கரை நோயாளிகள் இதை தங்களின் உணவில் அடிக்கடி சேர்ப்பது நல்லது. ஆனால் ஒரு நாளைக்கு 1/2 கப்பிற்கு மேல் சாப்பிடக்கூடாது. இல்லாவிட்டால் அது நன்மைக்கு பதிலாக தீங்கை விளைவிக்கும்.
காலை வேளையில் தோசை, ஊத்தாப்பம், இட்லி சாப்பிட்டு போரடித்திருந்தால், வெள்ளை சுண்டலை இரவே ஊற வைத்து, மறுநாள் காலையில் அதை வேக வைத்து, வெங்காயம் போட்டு தாளித்து சாப்பிடலாம்.

5. கோதுமை தோசை
கோதுமையில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவு. எனவே சர்க்கரை நோயாளிகள் கோதுமை தோசையை செய்து காலை வேளையில் சாப்பிடலாம். முக்கியமாக இந்த கோதுமை தோசை செய்வது மிகவும் சுலபம். இதை நொதிக்க வைக்க வேண்டிய அவசியமில்லை. வீட்டில் கோதுமை மாவு இருந்தால், அதில் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு கலந்து, உடனே தோசையாக சுட்டு சாப்பிடலாம்.

6. ராகி களி
ராகியில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவு மற்றும் நார்ச்சத்து அதிகம் என்பதால் சர்க்கரை நோயாளிகள் தங்களின் காலை உணவாக ராகியை சேர்ப்பது நல்லது. உங்களுக்கு ராகி தோசை சாப்பிட பிடிக்காவிட்டால், ராகி மாவு இருந்தால், அதை நீரில் கரைத்து, ஒரு வாணலியில் ஊற்றி, அடுப்பில் வைத்து, கெட்டியாகும் வரை கிளறி இறக்கினால், சுவையான ராகி களி தயார். இந்த ராகி களி சுண்டல் குழம்பு, கறிக் குழம்பு ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

7. ஓட்ஸ் இட்லி
தற்போது ஓட்ஸ் மக்களிடையே பிரபலமான ஓர் உணவுப் பொருளாக உள்ளது. குறிப்பாக உடல் எடையைக் குறைக்க நினைப்போர், தங்களின் உணவில் ஓட்ஸை அதிகம் சேர்த்து வருகிறார்கள். ஆனால் சர்க்கரை நோயாளிகளும் ஓட்ஸை உணவில் சேர்க்கலாம். அதுவும் காலை உணவின் போது வழக்கமான இட்லியை சாப்பிடுவதற்கு பதிலா, ஒட்ஸ் மற்றும் சில காய்கறிகளைக் கொண்டு ஓட்ஸ் இட்லி தயாரித்து சாப்பிடலாம்.

8. பச்சை பயறு தோசை
சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏற்ற ஆரோக்கியமான காலை உணவுகளின் பட்டியலில் பச்சை பயறு தோசையும் அடங்கும். இந்த தோசையில் புரோட்டீன் ஏராளமான அளவில் உள்ளன மற்றும் இது உடலின் ஒட்டுமொத்த செயல்பாட்டிற்கும் மிகவும் உதவியாக இருக்கும்.



Click it and Unblock the Notifications