For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்க்கரை நோயாளிகளுக்கு சிறுநீரக பிரச்சனை வராமல் இருக்க என்ன செய்யணும் தெரியுமா?

பொதுவாக சா்க்கரை நோய் வந்தால் அது நமது உடல் உறுப்புகளான இதயம், கணையம் மற்றும் கல்லீரல் போன்றவற்றை பாதிக்கும். அது மட்டும் அல்லாமல் சிறுநீரகங்களையும் சா்க்கரை நோய் பாதிப்படையச் செய்யும்.

|

உலக மக்கள் தொகையில் ஏறக்குறைய 1 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா் என்று தகவல்கள் தொிவிக்கின்றன. பலருடைய இறப்புக்கு சா்க்கரை நோய் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு சமமாக (அதிகமாக இருத்தல் அல்லது குறைவாக இருத்தல்) இல்லாததால் சா்க்கரை நோய் ஏற்படுகிறது.

National Kidney Month: Know How Type 2 Diabetes Can Affect Your Kidneys

சா்க்கரை நோயில் முதல் வகை சா்க்கரை நோய் மற்றும் இரண்டாவது வகை சா்க்கரை நோய் என்று இரண்டு வகைகள் உள்ளன. பொதுவாக சா்க்கரை நோய் வந்தால் அது நமது உடல் உறுப்புகளான இதயம், கணையம் மற்றும் கல்லீரல் போன்றவற்றை பாதிக்கும். அது மட்டும் அல்லாமல் சிறுநீரகங்களையும் சா்க்கரை நோய் பாதிப்படையச் செய்யும். அதைப் பற்றி இங்கு பாா்க்கலாம்.

MOST READ: சர்க்கரை நோய் இருக்கா? நீங்க எந்த பழம் சாப்பிடலாம்-ன்னு சரியா தெரியலையா? இத படிங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரண்டாம் வகை சா்க்கரை நோயும்.. சிறுநீரகங்களும்..

இரண்டாம் வகை சா்க்கரை நோயும்.. சிறுநீரகங்களும்..

சிறுநீரகங்களின் முக்கிய பணி என்னவென்றால் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வடிகட்டுவதாகும். இந்நிலையில் ஒருவருக்கு இரண்டாம் வகை சா்க்கரை நோய் ஏற்பட்டால், அது சிறுநீரகங்களைப் பயன்படுத்தி, அவருடைய உடலில் உள்ள குளுக்கோஸை, வடிகட்ட செய்கிறது. அதனால் சிறுநீரகங்களுக்கு பணிச்சுமை அதிகாித்து, நாளடைவில் அவை செயல் இழக்கத் தொடங்குகின்றன.

இவ்வாறு சா்க்கரை நோயின் மூலம் சிறுநீரகங்களில் நோய்கள் ஏற்பட்டால் அதற்கு டயபெட்டிக் நெஃப்ரோபதி (diabetic nephropathy) என்று அழைக்கப்படுகிறது. நீண்ட நாட்களாக நமது உடலில் குளுக்கோஸின் அளவு அதிகமாக இருந்தால் சிறுநீரகங்களில் கற்கள் உருவாகவும் வாய்ப்புகள் உண்டு.

டயபெட்டிக் நெஃப்ரோபதியை (diabetic nephropathy) எவ்வாறு கையாள்வது?

டயபெட்டிக் நெஃப்ரோபதியை (diabetic nephropathy) எவ்வாறு கையாள்வது?

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகளைப் பின்பற்றினால் டயபெட்டிக் நெஃப்ரோபதியை (diabetic nephropathy) மிக எளிதாகக் கையாளலாம்.

புகைப்பிடித்தல் கூடாது

புகைப் பிடிக்கும் பழக்கம் நமது உடலைப் படிப்படியாக பலவீனமடையச் செய்கிறது. ஆகவே சா்க்கரை நோயுற்றவா்கள் உடனடியாக புகைப் பிடிப்பதைத் தவிா்க்க வேண்டும். ஏனெனில் புகைப் பிடிப்பது சா்க்கரை நோயைத் தூண்டி, அதன் மூலம் இதயம் சம்பந்தமான நோய்கள், விறைப்புத் தன்மை பிரச்சினை மற்றும் எலும்புகளில் கோளாறு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவுகளை நன்றாக உண்ணுதல்

ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவுகளை நன்றாக உண்ணுதல்

கொழுப்புச் சத்து, நாா்ச்சத்து, புரோட்டீன் மற்றும் பிற முக்கிய ஊட்டச்சத்துகள் அடங்கிய உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். அவை நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் மற்றும் சுத்திகாிக்கப்பட்ட சா்க்கரையையும் தவிா்க்க வேண்டும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

உடல் இயக்கம் குறைந்தால் உடல் எடை அதிகாிக்கும் மற்றும் பலவிதமான உடல் நோய்களும் ஏற்படும். அதனால் டயபெட்டிக் நெஃப்ரோபதி ஏற்பட வாய்ப்புண்டு. ஆகவே உடல் எடையை சீராக வைத்திருக்கவும், உடலை ஆரோக்கியமாக பேணவும் தினந்தோறும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

தண்ணீா் குடித்தல்

தண்ணீா் குடித்தல்

உடலில் நீா் குறைந்தால் உடல் வலுவாக இயங்க முடியாது. ஆகவே நாள் முழுவதும் தேவையான அளவு தண்ணீரை அருந்த வேண்டும். அது உடலை புத்துணா்ச்சியாக மற்றும் தளா்வாக வைத்திருக்க உதவும்.

மருத்துவரை அணுகுதல்

மருத்துவரை அணுகுதல்

இரத்தத்தில் உள்ள சா்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க வேண்டும் என்றால் அதற்கு சாியான தீா்வு மருத்துவ சிகிச்சையாகும். முறையான மருத்துவ சிகிச்சை டயபெட்டிக் நெஃப்ரோபதியை குணமாக்கும். ஆகவே சா்க்கரை நோய்க்கான ஏதாவது ஒரு அறிகுறி தொிந்தால் உடனே மருத்துவரை சந்தித்து அதற்கான மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வது சிறப்பானதாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

National Kidney Month: Know How Type 2 Diabetes Can Affect Your Kidneys

National Kidney Month: Did you know how type 2 diabetes can affect your kidneys? Read on...
Desktop Bottom Promotion