For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களே! 14 வயசுக்கு முன்னாடியே வயசுக்கு வந்துட்டீங்களா? அப்படின்னா இந்த பிரச்சனைய சந்திப்பீங்க...

14 வயதுக்கு முன்பாக வயதுக்கு வரும் ஆண்களுக்கு, 14 வயதுக்கு பின் பருவமடைந்த ஆண்களை விட இரண்டு மடங்கு அதிகமாக டைப்-2 சர்க்கரை நோயின் அபாயம் உள்ளதாக புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

|

பருவமடைதல் அல்லது வயதுக்கு வருதல் என்பது பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் தான். பெண்களைப் போன்றே ஆண்களுக்கும் வயதுக்கு வரும் காலம் என்பது உள்ளது. பருவமடைதலைக் கொண்டு ஒரு ஆணுக்கு சர்க்கரை நோய் வரும் அபாயம் உள்ளதா என்பதை கணிக்கலாம்.

Men Who Had Early Puberty At Higher Risk Of Developing Type 2 Diabetes

ஆண்களுள் வேகமாக பருமடைந்தவர்களுக்கு டைப்-2 சர்க்கரை நோயின் அபாயம் அதிகம் உள்ளதாக ஒரு புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு குறித்து மார்ச் 2020-இல் வெளிவந்த டயாபடோலொஜியா இதழில் வெளியிடப்பட்டது. இந்த கண்டுபிடிப்பு ஆண்களில் சர்க்கரை நோயைத் தடுப்பதற்கும் மற்றும் பரிசோதனை செய்வதற்கும் வழிகாட்டுதல்களை நிறுவ உதவக்கூடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்வீடன் ஆய்வு

ஸ்வீடன் ஆய்வு

இந்த ஆய்விற்காக, ஸ்வீடனில் உள்ள போதன்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 1945 மற்றும் 1961-க்கு இடையில் பிறந்த சுமார் 30,600-க்கும் அதிகமான ஸ்வீடிஷ் ஆண்களை மதிப்பிட்டனர். அதில் 14 முதல் 17 வயதில் பருவமடைந்த ஆண்களை விட 9 முதல் 13 வயதிற்குள் பருவமடைந்த ஆண்களுக்கு டைப்-2 சர்க்கரை நோய் வருவதற்கான அபாயம் இரண்டு மடங்கு அதிகம் இருப்பதை கண்டறிந்தனர்.

பருவமடைதலுக்கான வளர்ச்சி ஏற்பட்ட ஒவ்வொரு வருடமும், ஆரம்ப கால சர்க்கரை நோய் வருவதற்கான அபாயம் 28 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் தாமதமான சர்க்கரை நோயின் அபாயம் 13 சதவீதம் அதிகரித்துள்ளது. அதோடு சீக்கிரம் வயதிற்கு வந்த ஆண்களுக்கு டைப்-2 சர்க்கரை நோய் வந்தால், அவர்களுக்கு இன்சுலின் சிகிச்சை தேவைப்படுவதையும் இந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

காரணம்

காரணம்

சீக்கிரம் வயதிற்கு வந்த ஆண்களின் அடிவயிற்றுப் பகுதியில் அதிகப்படியான கொழுப்புக்கள் சேர்வதாக ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். இதனால் உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், அசாதாரண கொழுப்பு அளவு போன்ற பிரச்சனைகளை சந்திப்பதோடு, இவை இதயம் மற்றும் வளர்சிதை மாற்ற நோய்களுக்கான அபாயத்தையும் அதிகரிக்க வழிவகுக்கிறது.

முந்தைய ஆய்வு

முந்தைய ஆய்வு

ஏற்கனவே முந்தைய ஆய்வில் அதிக பி.எம்.ஐ கொண்டவர்களுக்கும், டைப்-2 சர்க்கரை நோய்க்கான அதிக அபாயத்திற்கும் இடையேயான தொடர்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது குழந்தைப் பருவத்தில் அல்லது பருவமடையும் போது அதிக பி.எம்.ஐ உள்ள சிறுவர்களுகு சர்க்கரை நோயின் ஆபத்து அதிகம் இருப்பது கண்டறியப்பட்டது. சில ஆய்வுகள் சீக்கிரம் வயதிற்கு வந்த பெண்களுக்கு சர்க்கரை நோயின் ஆபத்து அதிகம் இருப்பதை இணைத்துள்ளன.

இதுக்குறித்து, புதிய ஆய்வின் இணை ஆசிரியரான ஜென்னி கிண்ட்ப்ளோம், வேகமாக வயதுக்கு வருதல் ஆண்களில் டைப்-2 சர்க்கரை நோய்க்கு ஒரு சுயாதீனமான ஆபத்து காரணியாக இருக்கலாம் என்று குறிப்பிட்டார். மேலும் அவர் குழந்தைப் பருவத்திலும், இளமைப் பருவத்திலும் உயரம் மற்றும் எடை வளர்ச்சியை தொடர்ந்து கண்காணிப்பது நீரிழிவு நோய்க்கான ஆபத்து அதிகம் உள்ளவர்களை அடையாளம் காண உதவும் என்றும் நம்புகிறார்.

டைப்-2 சர்க்கரை நோய் பற்றிய சில உண்மைகள்:

டைப்-2 சர்க்கரை நோய் பற்றிய சில உண்மைகள்:

உடலால் இன்சுலின் விளைவுகளை எதிர்க்கும் போது அல்லது சாதாரண குளுக்கோஸ் அளவைப் பராமரிக்க போதுமான இன்சுலின் உற்பத்தி செய்யாத போது டைப்-2 சர்க்கரை நோய் ஏற்படுகிறது. இன்சுலின் என்பது கணையத்தால் சுரக்கும் ஹார்மோன் ஆகும். மேலும் இது செல்களில் சர்க்கரையின் இயக்கத்தை சீராக்க உதவுகிறது.

டைப்-2 சர்க்கரை நோயின் அறிகுறிகள்

டைப்-2 சர்க்கரை நோயின் அறிகுறிகள்

டைப்-2 சர்க்கரை நோயின் அறிகுறிகள் பெரும்பாலும் காலப்போக்கில் படிப்படியாக உருவாகின்றன. அவை மிகவும் லேசானவை என்பதால், பல ஆண்டுகளாக டைப்-2 சர்க்கரை நோயைக் கொண்டிருக்கலாம் மற்றும் அதைப் பற்றி தெரியாமலும் இருக்கலாம். இங்கு அவசியம் கவனிக்க வேண்டிய சில டைப்-2 சர்க்கரை நோயின் அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவையாவன:

* தாகம் அதிகமாக இருப்பது

* அடிக்கடி சிறுநீர் கழிப்பது

* பசி அதிகம் எடுப்பது

* திடீர் எடை குறைவு

* களைப்பு

* மங்கலான பார்வை

* காயங்கள் தாமதமாக குணமாவது

* அடிக்கடி தொற்றுக்கள் ஏற்படுவது

* அக்குள் மற்றும் கழுத்துப் பகுதி கருமையாக இருப்பது

குறிப்பு

குறிப்பு

துரதிர்ஷ்டவசமாக டைப்-2 சர்க்கரை நோய்க்கு எந்த சிகிச்சையும் இல்லை. இருப்பினும், சரியான உடல் எடையைப் பராமரிப்பதன் மூலமும், ஆரோக்கியமான உணவை உண்பதன் மூலமும், உடற்பயிற்சி செய்வதன் மூலமும் இப்பிரச்சனையை கட்டுப்படுத்தலாம். சிலருக்கு இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க சர்க்கரை நோய்க்கான மருந்துகள் அல்லது இன்சுலின் சிகிச்சை தேவைப்படலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Men Who Had Early Puberty At Higher Risk Of Developing Type 2 Diabetes

A new study has suggested that early puberty could be a risk factor for type 2 diabetes in men. Some facts about the chronic condition you should know.
Story first published: Saturday, June 13, 2020, 13:01 [IST]
Desktop Bottom Promotion