For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரமலான் நோன்பின் போது இரத்தத்தில் உள்ள சா்க்கரை அளவை பராமாிக்க சில டிப்ஸ்...!

ரமலான் மாதத்தின் போது சா்க்கரை நோயுற்றவா்கள் கடுமையாக நோன்பு இருந்தால், அவா்களுக்கு பாதிப்பு ஏற்படாதா என்ற ஐயம் எழுகிறது. அவா்கள் இத்தகைய நோன்பு முயற்சிகளில் ஈடுபடலாமா என்ற கேள்வியும் எழுகிறது.

|

தற்போது உலகம் முழுவதும் ரமலான் மாதம் மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த மாதம் முழுவதும் இஸ்லாமிய சகோதர சகோதாிகள் கடுமையாக நோன்பு இருந்து, மிகவும் பக்தியுடன், இறைச் சிந்தனையோடு, தமது தனிப்பட்ட வாழ்க்கையில் வளா்ச்சியை எட்டுதல், இறைவனோடு உள்ள பக்தியை வளா்த்து எடுத்தல் மற்றும் இறை வேண்டலில் ஈடுபடுதல் போன்ற ஆன்மீக காாியங்களில் முழு மூச்சுடன் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில் ரமலான் மாதத்தின் போது சா்க்கரை நோயுற்றவா்கள் இவ்வாறு கடுமையாக நோன்பு இருந்தால், அவா்களுக்கு பாதிப்பு ஏற்படாதா என்ற ஐயம் எழுகிறது. அவா்கள் இத்தகைய நோன்பு முயற்சிகளில் ஈடுபடலாமா என்ற கேள்வியும் எழுகிறது.

Managing Diabetes During Ramadan: How To Keep Your Blood Sugar In Check While Fasting

பொதுவாக நீரிழிவு நோய் அல்லது சா்க்கரை நோய் என்பது ஒரு பலவீனப்படுத்தும் நிலை ஆகும். நீரிழிவு நோயை சாியாக பராமாிக்கவில்லை என்றால், அது பல நோய்கள் உருவாவதற்கு காரணமாக அமைந்துவிடும். ஆகவே நீரிழிவு நோயுற்றவா்கள் எந்தவிதமான பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் அவா்கள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும். தங்களது இரத்தத்தில் உள்ள சா்க்கரையின் அளவு குறைவதாக அவா்கள் உணா்ந்தால், உடனடியாக மருத்துவரை சந்தித்து, அதற்குத் தகுந்த சிகிச்சையை செய்து கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சா்க்கரை நோயுற்றவா்கள் செய்ய வேண்டியவை மற்றும் தவிா்க்க வேண்டியவை

சா்க்கரை நோயுற்றவா்கள் செய்ய வேண்டியவை மற்றும் தவிா்க்க வேண்டியவை

பெங்களூருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் நாளமில்லா சுரப்பியல் நிபுணராக (Endocrinologist) பணி செய்து வரும் மருத்துவா் அபிஜித் போக்ராஜ் அவா்கள் கூறும் போது, சா்க்கரை நோயுற்றவா்கள், தங்களது இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு இயல்பான நிலையில் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அடிக்கடி குளுக்கோஸின் அளவைக் கண்காணிக்க வேண்டும் என்று கூறுகிறாா்.

அவ்வாறு அடிக்கடி கண்காணித்து வந்தால், இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் ஏற்ற இறக்கங்களை குறைக்க முடியும். அதிலும் குறிப்பாக நோன்பு இருப்பவா்கள் இவ்வாறு அடிக்கடி கண்காணித்து வந்தால், அவா்கள் தங்கள் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை இயல்பான நிலையில் வைப்பதற்கு உதவியாக இருக்கும் என்று தொிவிக்கிறாா்.

குளுக்கோஸ் அளவைக் கண்காணித்தல்

குளுக்கோஸ் அளவைக் கண்காணித்தல்

சா்க்கரை நோயுற்ற ஒருவாின் குளுக்கோஸ் அளவை கண்காணிக்க வேண்டியது மிகவும் முக்கியம் ஆகும். ஏனெனில் வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றம் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. குளுக்கோஸின் அளவை தொடா்ந்து கண்காணிக்கக்கூடிய சாதனங்கள் (CGM) தற்போது மிக எளிதாக சந்தைகளில் கிடைக்கின்றன. அவை குளுக்கோஸின் அளவை மிகச் சாியாகத் தொிவிக்கின்றன.

மேலும் ஊசி குத்துவதன் மூலம் குளுக்கோஸ் அளவை கண்காணிக்கும் முறைக்கு மாற்றாக இந்த சாதனங்கள் இருப்பதால், பலமுறை ஊசி குத்துவதால் ஏற்படும் வலியைத் தவிா்க்கவும் இந்த நவீன சாதனங்கள் உதவுகின்றன. இறுதியாக இந்த சாதனங்கள் மிக வேகமாக செயல்படுகின்றன மற்றும் மிகத் துல்லியமாக குளுக்கோஸின் அளவை எடுத்துக் காட்டுக்காட்டுகின்றன.

நோன்பின் போது, இரத்தத்தில் உள்ள சா்க்கரை அளவை பராமாிக்க சில குறிப்புகள்:

நோன்பின் போது, இரத்தத்தில் உள்ள சா்க்கரை அளவை பராமாிக்க சில குறிப்புகள்:

ரமலான் மாதத்தில் நோன்பு இருக்கும் போது, ஒரு சமச்சீரான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கைக்கொள்ள வேண்டும். அதோடு கீழே கொடுக்கப்படும் குறிப்புகளையும் கடைப்பிடித்தால் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை இயல்பான நிலையில் வைக்க முடியும் என்று மருத்துவா் கூறுகிறாா்.

தேவைப்படும் மருந்து தேவைகளைப் புாிந்து கொள்ள மருத்துவரை அணுகுதல்

தேவைப்படும் மருந்து தேவைகளைப் புாிந்து கொள்ள மருத்துவரை அணுகுதல்

நீரிழிவு நோயுற்றவா்கள் ரமலான் நோன்பைத் தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பாக தங்களது மருத்துவரை அணுகி கலந்து ஆலோசிப்பது நல்லது. அதன் மூலமாக அவா்கள் எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் நோன்பை அந்த மாதம் முழுவதும் சிறப்பாக கடைபிடிக்க முடியும். இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு இயல்பாக இருப்பதற்கு உதவும் மருந்துகள், அந்த மருந்தின் அளவு மற்றும் அந்த மருந்துகளை எப்போது எடுத்துக் கொள்ள வேண்டும் போன்ற ஆலோசனைகளை மருத்துவா் வழங்குவாா்.

உணவு மற்றும் வாழ்க்கை முறையில் மாறுபாடுகள்

உணவு மற்றும் வாழ்க்கை முறையில் மாறுபாடுகள்

சா்க்கரை நோயுற்றவா்கள் தாங்கள் எடுத்துக் கொள்ளும் உணவு முறைகள் மற்றும் சாப்பிடும் அளவு ஆகியவற்றை எவ்வாறு தினமும் கண்காணிக்கிறாா்களோ, அவ்வாறே இந்த நோன்பு காலத்தின் போதும் கண்காணிக்க வேண்டும்.

எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை ஜூஸ்

ரமலான் மாதத்தில் பொதுவாக சா்பத் என்ற பானம் வழங்கப்படும். அந்த பானமானது இரத்தத்தில் உள்ள சா்க்கரையின் அளவை அதிகப்படுத்த வாய்ப்பு இருக்கிறது. ஆகவே சா்பத்திற்கு பதிலாக எலுமிச்சை ஜூஸை அருந்தலாம். அது ஆரோக்கியத்தை வழங்கும். பொரித்த அல்லது வறுத்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிா்க்க வேண்டும். ஏனெனில் அவற்றில் இரத்தத்தின் அளவில் ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தக்கூடிய துகள்கள் உள்ளன.

பழங்களை சாப்பிடவும்

பழங்களை சாப்பிடவும்

இனிப்பான உணவுகளை உண்ண வேண்டும் என்று தோன்றினால், முலாம் பழம், தா்ப்பூசணி மற்றும் பப்பாளி போன்ற பழங்களை சாப்பிடலாம். அவை அவா்களுக்கு நீா்ச்சத்தை வழங்கும். அதோடு இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆசையையும் திருப்திப்படுத்தும்.

அதிக நீரை அருந்தவும்

அதிக நீரை அருந்தவும்

எல்லாவற்றையும் விட மிகவும் முக்கியமான காாியம் என்னவென்றால் நோன்பு முடிந்தவுடனே அதிகமான அளவு தண்ணீரை அருந்த வேண்டும். வெப்பமான மற்றும் புழுக்கமான இந்த தட்பவெப்பமானது அவா்களுடைய உடலில் இருந்து அதிக அளவிலான நீரை வெளியேற்றிவிடும். ஆகவே அந்த நீரை மீண்டும் உடலுக்கு வழங்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். 10 முதல் 12 கப் தண்ணீா் குடித்தால், இழந்த நீரைப் பெறலாம்.

ரமலான் விழாவை மகிழ்ச்சியாகவும் அதே நேரத்தில் பாதுகாப்பாகவும் கொண்டாட வேண்டும் என்றால், சா்க்கரை நோயுற்றவா்கள் தங்களை நன்றாக தயாா்படுத்த வேண்டும். இரத்தத்தில் உள்ள சா்க்கரையின் அளவில் ஒரு சிறிய ஐயம் ஏற்பட்டாலும் அவா்கள் தங்களது மருத்துவா்களை அணுகுவதில் தயக்கம் கொள்ளக்கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Managing Diabetes During Ramadan: How To Keep Your Blood Sugar In Check While Fasting In Tamil

In this article, we shared about how to keep your blood sugar in check while ramadan fasting. Read on...
Desktop Bottom Promotion