For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரத்த சர்க்கரை அளவு அதிகமானால் எந்த உறுப்பு-லாம் மோசமா பாதிக்கப்படும் தெரியுமா?

சர்க்கரை நோயானது இரத்த ஓட்டத்தை மட்டுமின்றி, உடலின் பிற உறுப்புக்களையும் பாதிக்கிறது. உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால், அது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மோசமாக பாதிக்கும் அபாயம் உள்ளது.

|

ஒருவரது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமானால், அது உடலில் அறிகுறிகளை வெளிக்காட்ட ஆரம்பிக்கும். அப்படி வெளிப்படும் அறிகுறிகளை உடனே கவனித்து சரியான சிகிக்கையை மேற்கொள்ள வேண்டும். பொதுவாக இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், அடிக்கடி சிறுநீர் கழித்தல், வாய் வறட்சி, சோர்வு, காலில் உணர்வின்மை மற்றும் சரும பிரச்சனைகள் போன்றவற்றை சந்திக்க நேரிடும். இம்மாதிரியான அறிகுறிகள் வெளிப்பட ஆரம்பித்ததால், உடனே இரத்த சர்க்கரை அளவை சரிபார்க்க வேண்டும். அதோடு மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளையும் தவறாமல் எடுக்க வேண்டும்.

How Does High Blood Sugar Affect Different Parts Of Your Body?

சர்க்கரை நோயானது இரத்த ஓட்டத்தை மட்டுமின்றி, உடலின் பிற உறுப்புக்களையும் பாதிக்கிறது. உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால், அது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மோசமாக பாதிக்கும் அபாயம் உள்ளது. ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு, நல்ல வாழ்க்கை முறையை வாழாமல் இருந்தால், மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் எவ்வித பலனும் தராது. ஒருவரது உணவுப் பழக்கம் மற்றும் தூக்க முறையும் சக்கரை நோயாளிகளின் ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

MOST READ: மூக்கை வைத்தே ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை சொல்ல முடியும் தெரியுமா? இதுல உங்க மூக்கு எந்த மாதிரி?

இரத்த குளுக்கோஸ் கணையத்தால் உற்பத்தி செய்யப்பட்டு, இன்சுலினால் கட்டுப்படுத்தப்படுகிறது. உடலில் போதுமான இன்சுலின் உற்பத்தி செய்யப்படாமல் இருந்தால் தான் சர்க்கரை நோய் ஏற்படும். இது கட்டுப்படுத்தக்கூடிய ஒரு மருத்துவ நிலை. ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இது வாழ்நாள் முழுவதும் இருக்கும். இரத்த குளுக்கோஸ் அளவு கட்டுப்பாடு இல்லாமல் எகிறும் போது, அது உடலில் மோசமான சேதத்தை உண்டாக்குகிறது. தீவிர நிலையில் மரணத்தைக் கூட உண்டாக்கும். எனவே இதைத் தவிர்க்க, சர்க்கரை நோயாளிகள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.

MOST READ: கொரோனா தடுப்பூசி போட போறீங்களா? எந்த கையில் போடணும் தெரியுமா?

இப்போது சர்க்கரை நோய் உடலின் பிற உறுப்புக்களை எப்படி பாதிக்கிறது என்பதைப் பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சருமம்

சருமம்

பெரும்பாலான சர்க்கரை நோயாளிகள் சரும பிரச்சனைகளை சந்திப்பதற்கு காரணம் உயர் இரத்த சர்க்கரையால் இரத்த நாளங்கள் சேதமடைந்திருப்பது தான். இரத்த நாளங்களின் சேதத்தால் தான் சருமத்தில் கருமையான படலங்கள் உண்டாகின்றன. குறிப்பாக சர்க்கரை நோயாளிகளின் கழுத்து, கைகள், கால்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் கருமையான படலங்கள் காணப்படுவதே சர்க்கரை நோயின் முதல் அறிகுறியாகும். இது வலியற்றது மற்றும் அரிப்பில்லாதது. ஆனால் இதை எளிதில் கண்டறிய முடியும்.

இதயம்

இதயம்

சர்க்கரை நோய் இருந்தால், இதய நோய்கள் உருவாவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. உயர் இரத்த சர்க்கரை இதய ஆரோக்கியத்தை பாதிக்கிறது. எனவே தான் சர்க்கரை நோயாளிகள் மாரடைப்பு மற்றும் பிற இதயம் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள்.

பாதம்

பாதம்

பாதத்தில் உள்ள நரம்புகளின் சேதத்தால் உருவாவது தான் கால்களில் உணர்வின்மை அல்லது மரத்துப் போதல். இதுவும் சர்க்கரை நோயின் அறிகுறிகளுள் ஒன்று. சர்க்கரை நோயானது இரத்த நாளங்களை தடிமனாக்கி, கால்களில் இரத்த ஓட்டத்தை மோசமாக்குகிறது. ஒருவருக்கு அடிக்கடி கால்கள் மரத்துப் போனால் அதை சற்றும் புறக்கணிக்காமல், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

கண்கள்

கண்கள்

சர்க்கரை நோய் பார்வை திறனை மோசமாக்கி, தீவிர நிலையில் பார்வை இழப்பை உண்டாக்குகின்றன. உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால், கண் தொடர்பான நோய்களின் அபாயம் அதிகம் உள்ளது. சர்க்கரை நோயானது கண்களில் உள்ள இரத்த நாளங்களை சேதப்படுத்துவதால், கண்களின் ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படுகிறது.

சிறுநீரகம்

சிறுநீரகம்

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு, சிறுநீரகமும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும். சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யாமல் இருந்தால், டயாலிசிஸ் தேவைப்படலாம் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை கூட தேவைப்படலாம். மொத்தத்தில் உயர் இரத்த சர்க்கரை சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Does High Blood Sugar Affect Different Parts Of Your Body?

Diabetes is a chronic illness and poses a huge risk to your health. It must be prevented as much as possible. Here is how diabetes affects certain parts of your body.
Desktop Bottom Promotion