Just In
- 3 hrs ago
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- 6 hrs ago
Today Rasi Palan 01 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் முக்கிய வேலை பாதியில் தடைபடலாம்...
- 14 hrs ago
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- 14 hrs ago
பாதாம் எண்ணெயை உங்க தலை முடியில இப்படி யூஸ் பண்ணா... கிடுகிடுன்னு முடி வளர்ந்து பளபளன்னு மின்னுமாம்!
Don't Miss
- Finance
மத்திய பட்ஜெட் 2023: நிறையத் தண்ணீர் குடிங்க.. பட்ஜெட் போர் அடிக்கலாம்..!
- News
இந்தியாவின் 'கனவு பட்ஜெட்' என அழைக்கப்பட்ட 1997-ம் ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்..ஏன் தெரியுமா?
- Technology
BSNL சூப்பர் ரீசார்ஜ்: மாதம் ரூ.184 தான் செலவு 395 நாளுக்கு வேலிடிட்டி.! மாஸ் ஆன பிளான் இதான்.!
- Automobiles
ஃப்ரீனாலும் இந்த 5 ரயில்கள்ல மட்டும் போயிடாதீங்க... போனவங்க எல்லாம் கழுவி கழுவி ஊத்துறாங்க!
- Movies
மகேஷ்வரி அப்படி சொல்லுவாங்கனு நினைக்கல.. மனதிற்குள் ஜாலியா இருந்தது.. விஜே கதிரவன் பேட்டி!
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சர்க்கரை நோயாளிகளே! உங்க இரத்த சர்க்கரை அளவு உங்க கருவுறுதலில் பாதிப்பை ஏற்படுத்துமாம் தெரியுமா?
இன்றைய காலகட்டத்தில் வீட்டில் ஒருவருக்கு சர்க்கரை நோய் உள்ளது. அதிகரித்து வரும் சர்க்கரை நோயாளிகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நம் வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உணவு பழக்கவழக்கங்கள் நம் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை குறையும்போது, உங்கள் உடல் பருமன் அதிகமாக இருக்கும்போது நீரிழவு நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். நீங்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளீர்களா? ஆம் எனில், கர்ப்பத்தைத் திட்டமிடுவதற்கு முன் உங்கள் இரத்த குளுக்கோஸ் அளவை மேம்படுத்த வேண்டும். ஏனெனில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் நீரிழிவு நோய் கருவுறுதலைத் தடுக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
உலக சுகாதார அமைப்பு (WHO) 2019 ஆம் ஆண்டில் உலகளவில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் நீரிழிவு நோயால் உயிரிழந்துள்ளனர் என்று மதிப்பிடுகிறது. உலகில் தற்போது 537 மில்லியன் நீரிழிவு நோயாளிகள் வாழ்கின்றனர் என்று கூறுகிறது. எனவே, கருவுறுதலில் சர்க்கரை நோயின் தாக்கம் மற்றும் அதைத் தவிர்ப்பது எப்படி என்பதைப் பற்றி தெரிந்துகொள்ள இக்கட்டுரையை படியுங்கள்.

நீரிழிவு நோய் எதனால் ஏற்படுகிறது?
உடலில் உள்ள அசாதாரண இன்சுலின் அளவு நீரிழிவு நோய்க்கு முதன்மைக் காரணமாகும். கணையம் இன்சுலின் என்ற ஹார்மோனை உற்பத்தி செய்கிறது, இது உங்கள் உடலின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. நீங்கள் சாப்பிட்டவுடன், உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து, அதை நிர்வகிக்க உடலின் இன்சுலின் வெளியிடப்படுகிறது. கணையம் போதுமான அளவு இன்சுலினை உருவாக்காதபோது அல்லது உடலால் இன்சுலினை பயன்படுத்த முடியாதபோது நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

ஆண்களின் கருவுறுதலில் நீரிழிவு நோயின் தாக்கம்
உடலில் கட்டுப்பாடற்ற இரத்த குளுக்கோஸ் அளவுகள் ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் பல காரணிகளில் ஒன்றாகும். கவனிக்கப்படாமல் விட்டால், உயர் இரத்த சர்க்கரை அளவு நிலைமையை மோசமாக்கும். ஆய்வுகளின்படி, நீரிழிவு மற்றும் மலட்டுத்தன்மையுள்ளவர்களை விட நீரிழிவு இல்லாத ஆண்களின் விந்து அளவு 25 சதவீதம் அதிகமாக உள்ளது. சர்க்கரை நோய் உள்ள ஆண்களின் விந்தணுக்களில் டிஎன்ஏ பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே, நீரிழிவு நோய் ஆண்களின் கருவுறுதலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அவை பிறக்காத குழந்தைகளில் பிறவி குறைபாடுகள் மற்றும் கருச்சிதைவுகளுக்கு கணிசமான ஆபத்தை ஏற்படுத்துகின்றன.

பெண் கருவுறுதலில் நீரிழிவு நோயின் தாக்கம்
பெண்களைப் பொறுத்தவரை, நீரிழிவு அவர்களின் முழு கர்ப்ப செயல்முறையையும் முற்றிலும் கடினமாக்குகிறது. இது உடலில் குளுக்கோஸ் ஒழுங்குமுறை குறைபாட்டை ஏற்படுத்துகிறது. இதனால் சாத்தியமான முட்டைகளை கருப்பையில் பொருத்துவதற்கு சவாலாக உள்ளது. கூடுதலாக, பி.சி.ஓ.எஸ் (பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம்) பெண்களுக்கு நீரிழிவு நோயால் வரலாம், இது கருப்பைகளில் கணிசமான எண்ணிக்கையிலான நீர்க்கட்டிகளை உருவாக்குகிறது. இது உங்கள் மாதவிடாய் சுழற்சியையும், உங்கள் உடல் உற்பத்தி செய்யும் டெஸ்டோஸ்டிரோனின் அளவையும் பாதிக்கிறது. இவை அனைத்தும் பெண்கள் கருத்தரிப்பு விகிதத்தை குறைக்கிறது.

பிறப்பு குறைப்பாடுகள்
நீரிழிவு நோய் பெண்களுக்கு ஆரம்ப மாதவிடாய் நிறுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது மீண்டும் அவர்களின் கருவுறுதலைக் குறைக்கிறது. உண்மையில், உயர் இரத்த குளுக்கோஸ் அளவுகள் தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் தீங்கு விளைவிக்கும். கர்ப்பகால நீரிழிவு நோய்க்கான அதிக ஆபத்து காரணமாக ஒரு பெண் கருத்தரிக்க முடிந்தாலும், பிறப்பு குறைபாடுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

நீரிழிவு நோயை எவ்வாறு கட்டுப்படுத்துவது?
உங்கள் இரத்த குளுக்கோஸ் அளவைக் கண்காணிப்பது முக்கியம். உண்மையில், இனப்பெருக்க உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்த சில மருந்துகள் உள்ளன. அதுமட்டுமின்றி, இரு பாலினத்தை சேர்ந்த பருமனானவர்கள் உடல் எடையை குறைக்கவும், இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்கவும் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும்.

சர்க்கரை அளவை கட்டுப்படுத்த வேண்டும்
ஆரோக்கியமான குழந்தையின் நலனுக்காக கர்ப்பத்தின் மூன்று மாதங்களுக்கு முன்பே பெண்கள் தங்கள் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தத் தொடங்க பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், உணவு கட்டுப்பாடு மற்றும் உடல் பயிற்சிகள் இரத்த குளுக்கோஸ் அளவை நிர்வகிக்க மிகவும் குறிப்பிடத்தக்க வழிகள் ஆகும்.

பாதுகாப்பான கர்ப்ப திட்டமிடலுக்கான வழி
நீரிழிவு நோய் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கருவுறுதலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மறுப்பதற்கில்லை. எனவே, பாதுகாப்பான கர்ப்பத்தைத் திட்டமிட கருவுறுதல் நிபுணரை அணுகவும். உங்கள் குளுக்கோஸ் அளவை தவறாமல் பரிசோதித்து, அதைக் கட்டுப்படுத்த உதவும் மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையோடு எடுத்துக்கொள்ளுங்கள். அதுமட்டுமல்லாமல், ஆரோக்கியமான கர்ப்பத்திற்காக உங்கள் வாழ்க்கைமுறையில் சில மாற்றங்களைச் சேர்த்துக்கொள்வது அவசியம்.

இறுதிகுறிப்பு
உங்கள் கர்ப்பத்தில் நீரிழிவு ஒரு தடையாக இருக்க வேண்டாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், இதில் உள்ள அபாயங்களைப் பற்றிய நுண்ணறிவுகளைப் பெறுவது, அவற்றைக் கட்டுப்படுத்துவது, சரியாகச் சாப்பிடுவது மற்றும் சரியான எடையைப் பராமரிப்பது மற்றும் பாதுகாப்பான கர்ப்பத்திற்கான உங்கள் வழியில் நீங்கள் நன்றாக இருப்பீர்கள்.