For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்க்கரை நோய் இருக்குன்னு கவலைப்படுறீங்களா? நீண்ட நாள் ஆரோக்கியமா இருக்க இத செய்யுங்க போதும்...

சர்க்கரை நோய் ஒருமுறை வந்துவிட்டால், அது வாழ்நாள் முழுவதும் இருக்கக்கூடும். ஆனால் சரியான சிகிச்சையையும், மருந்துகளையும் பின்பற்றி வந்தால் குணப்படுத்த முடியும்.

|

உலகில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம். குறிப்பாக இந்தியாவில் சர்க்கரை நோயாளிகள் ஏராளம். நீரிழிவு அல்லது சர்க்கரை நோய், ஹைப்பர்கிளைசீமியா என்றும் அழைக்கப்படுகிறது. இது உயர் இரத்த சர்க்கரையுடன் தொடர்புடையது. பெரியவர்களுள் 50% பேர் டைப்- சர்க்கரை நோய், டைப்-2 சர்க்கரை நோய் அல்லது முன் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஒரு வளர்சிதை மாற்ற நோய். க்ளுக்கோஸ் என்று அழைக்கப்படும் இரத்த சர்க்கரையை உடல் எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதை இது பாதிக்கிறது.

Healthy Habits If You Suffer From Diabetes

சர்க்கரை நோய் ஒருமுறை வந்துவிட்டால், அது வாழ்நாள் முழுவதும் இருக்கக்கூடும். ஆனால் சரியான சிகிச்சையையும், மருந்துகளையும் பின்பற்றி வந்தால் குணப்படுத்த முடியும். அதோடு மதுப்பழக்கம், புகைப்பழக்கம் அல்லது சர்க்கரை அதிகம் நிறைந்த உணவுகளை உண்பது போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இவற்றை தவறாமல் மேற்கொண்டால், நிச்சயம் சர்க்கரை நோய் தீவிரமாவதைத் தடுத்து, வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சர்க்கரை நோயின் அறிகுறிகள்

சர்க்கரை நோயின் அறிகுறிகள்

சர்க்கரை நோயின் ஆரம்ப அறிகுறிகளில் அதிகப்படியான பசி மற்றும் களைப்பு, வாய் வறட்சி, மங்கலான பார்வை, சரும அரிப்பு மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிப்பது ஆகியவை அடங்கும். தீவிரமான நிலைமைகளில், பாதங்களில் வலி அல்லது உணர்வின்மையை உணரக்கூடும். அதோடு திடீரென்று உடல் எடை குறைவது மற்றும் காயங்கள் மிகவும் மெதுவாக குணமாவது போன்றவையும் சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகளாகும்.

சர்க்கரை நோய் இருந்தாலும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டுமானால் பின்வரும் பழக்கங்களை மேற்கொண்டாலே போதும். அவை என்னவென்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

உடற்பயிற்சி செய்யவும்

உடற்பயிற்சி செய்யவும்

தினமும் தவறாமல் சிறிது நேரம் உடற்பயிற்சியில் ஈடுபடுவது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும். மேலும் இது ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்கவும், இன்சுலின் சென்சிடிவிட்டியை அதிகரிக்கவும் உதவி புரியும். உடற்பயிற்சி செய்யும் போது, தசைகளானது உடலில் உள்ள க்ளுக்கோசை பயன்படுத்தி ஆற்றலை உற்பத்தி செய்கின்றன. அதற்காக கடினமான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும் என்பதில்லை. ரன்னிங், ஜாக்கிங், சைக்கிளிங், நடனம், நீச்சல் என சிறு உடற்பயிற்சிகளை செய்தாலே போதுமானது.

நீர் அருந்தவும்

நீர் அருந்தவும்

ஒருவர் போதுமான அளவு நீரைக் குடிப்பதால், இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். அதோடு இது உடல் வறட்சியடையாமல் தடுக்கும் மற்றும் உடலில் இருந்து கூடுதல் நச்சுக்களும் வெளியேற்றப்படும். மேலும் இது உடலை மறுசீமைக்கிறது மற்றும் இரத்த செல்கள் கடுமையான சேதமடையும் அபாயத்தைக் குறைக்கிறது. உடலில் நீர்ச்சத்தை அதிகரிப்பதற்கு நீரை மட்டுமே அருந்த வேண்டும் என்பதில்லை, பழங்களையும் சாப்பிடலாம்.

மன அழுத்தமில்லா வாழ்க்கை

மன அழுத்தமில்லா வாழ்க்கை

மன அழுத்தம் ஒருவரது இரத்த சர்க்கரை அளவை நேரடியாக தாக்குகின்றன. ஏனெனில் மன அழுத்தத்தின் போது குறிப்பிட்ட ஹார்மோன்கள் வெளியிடப்படுகின்றன. இந்த ஹார்மோன்கள் உடலில் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். ஆகவே மன அழுத்தம் இல்லாத வாழ்க்கையை வாழ வேண்டுமானால், மனதை அமைதிப்படுத்தும் விஷயங்களான தியானம், யோகா போன்றவற்றை தினமும் மேற்கொள்ள வேண்டும். இதனால் மனம் பதற்றமின்றி சாந்தமாக இருப்பதோடு, சர்க்கரை நோயும் கட்டுப்பாட்டில் இருக்கும்.

உடல் எடையைப் பராமரிக்கவும்

உடல் எடையைப் பராமரிக்கவும்

ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ நினைத்தால், ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்க வேண்டியது மிகவும் முக்கியம். அதற்கு சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்வதோடு, சுறுசுறுப்பாகவும் இருக்க வேண்டும். ஆரோக்கியமான எடை, ஆரோக்கியமான இரத்த சர்க்கரை அளவைக் குறிக்கும். அதனால் தான் உடல் பருமன் உள்ளவர்களுக்கு சர்க்கரை நோய் பிரச்சனை இருக்கிறது. ஒல்லியாக இருப்பவர்களுக்கு சர்க்கரை நோயின் அபாயம் குறைவாக இருக்கிறது.

தரமான தூக்கம் அவசியம்

தரமான தூக்கம் அவசியம்

ஆரோக்கியமான மனம் மற்றும் உடலுக்கு போதுமான தூக்கம் மிகவும் முக்கியம். தூக்கமின்மை அல்லது தூக்க குறைபாடு இரத்த சர்க்கரை அளவை நேரடியாக தாக்கி, உடல் எடையையும் அதிகரிக்கும். எனவே இரத்த சர்க்கரை அளவை சரியான அளவில் பராமரிப்பதற்கு, நிச்சயம் நல்ல தரமான மற்றும் போதுமான தூக்கத்தைப் பெறுவது அவசியம்.

மேலே கொடுக்கப்பட்டுள்ளவற்றை ஒருவர் தவறாமல் மேற்கொண்டு வந்தாலே, சர்க்கரை நோய் இருந்தாலும் ஆரோக்கியமாக வாழலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Healthy Habits If You Suffer From Diabetes

Diabetes is a serious disease and should be taken seriously as it can affect your health and cause danger to your life. You must lead a healthy lifestyle to prevent any serious damage to your health.
Desktop Bottom Promotion