For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வயதானவர்களை விட நீரிழிவு நோயாளிகளுக்கு எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புக்கள் அதிகமாம் - ஏன் தெரியுமா?

எலும்பு முறிவைப் பற்றி நிறைய ஆராய்ச்சிகள் செய்த போது தான் நீரிழிவு நோயாளிகள் இந்த எலும்பு முறிவு பிரச்சனையால் அதிகமாக பாதிக்கப்படுவது தெரிய வந்துள்ளது.

|

பொதுவாக எலும்பு முறிவு பிரச்சனை வயதான காலத்தில் ஏற்படும் ஒரு சிக்கலாகவே கருதப்பட்டு வந்தது. ஆனால் இந்த எலும்பு முறிவைப் பற்றி நிறைய ஆராய்ச்சிகள் செய்த போது தான் நீரிழிவு நோயாளிகள் இந்த எலும்பு முறிவு பிரச்சனையால் அதிகமாக பாதிக்கப்படுவது தெரிய வந்துள்ளது.

Diabetic People Are More Likely To Get Bone Fractures

அதே மாதிரி எலும்பு அடர்த்தி குறைவாக உள்ளவர்களும் எலும்பு முறிவு பிரச்சினையை சந்திக்கிறார்கள். நீரிழிவு நோயாளிகள் மற்றவர்களைக் காட்டிலும் இடுப்பு மற்றும் முதுகெலும்பு முறிவிற்கு ஆளாகிறார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஏன் இந்த பிரச்சினை அவர்களை மட்டும் தாக்குகிறது, வாங்க தெரிஞ்சுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலும்பு ஆரோக்கியம் மற்றும் சர்க்கரை நோய்

எலும்பு ஆரோக்கியம் மற்றும் சர்க்கரை நோய்

'போன்' என்னும் இதழ் இந்த சுவாரஸ்யமான மற்றும் தகவலறிந்த ஆராய்ச்சியை வெளியிட்டுள்ளது. இதன்படி பார்த்தால் நீரிழிவு நோயாளிகளுக்கு எலும்பு முறிவு வாய்ப்பு அதிகம். மேலும் டைப் -1 நீரிழிவு நோயாளிகளுடன் டைப் -2 நீரிழிவு நோயாளிகளை ஒப்பிடுகையில் அதிக ஆபத்து உள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக நோயாளியின் இன்சுலின் அளவு மற்றும் நோய்வாய்ப்பட்ட நேரம் இவற்றை பொருத்து அபாயமானது தீர்மானிக்கப்படுகிறது.

டாக்டர் கூற்று...

டாக்டர் கூற்று...

ஐக்கிய இராஜ்ஜியத்தின் ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் டாடியான் வில்கா இந்த ஆராய்ச்சியை வழிநடத்தி சில ஆக்கப்பூர்வமான உண்மைகளை நம்மிடம் பகிர்ந்து கொண்டு உள்ளார். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எலும்பு முறிவுகளைத் தடுக்க அவர்களுக்கு அது குறித்து அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உதாரணமாக கீழே விழுவதைத் தடுப்பது தேவையில்லாமல் அவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்படுவதை தடுக்கும். மேலும் நீரிழிவு நோயால் சிறுநீரக பிரச்சனைகள், கண்பார்வை இழப்பு, கால்களில் பிரச்சனைகள், நரம்பு பாதிப்பு போன்ற பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. எனவே இந்த பட்டியலில் தற்போது எலும்பு முறிவையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆய்வுத் தகவல்கள்

ஆய்வுத் தகவல்கள்

இந்த ஆராய்ச்சி இங்கிலாந்தின் மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்டது. யுனைடெட் கிங்டமில் ஒவ்வொரு ஆண்டும் 76,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்படுகிறது. இதில் கடுமையான எலும்பு முறிவுகள் ஏற்படும் 20% க்கும் அதிகமானவர்கள் ஒரு வருடத்திற்குள் தங்கள் உயிரை இழக்கின்றனர். எலும்பு முறிவால் பாதிக்கப்பட்ட மற்றவர்கள் எழுந்திருக்க முடியாமல் சிரமப்படுகிறார்கள். மற்றவர்களை சார்ந்து தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்தி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகள் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். எனவே சர்க்கரை நோயாளிகள் எலும்பு முறிவு சின்னதாக இருந்தால் கூட உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது. ஏனெனில் அதை அப்படியே விடும் போது எலும்பு முறிவு பிரச்சனை தீவிரமாக வாய்ப்பு உள்ளது.

மற்றொரு ஆராய்ச்சியாளர் ரிச்சர்ட் ஈஸ்டெல் கூறுகையில் "நீரிழிவு நோயாளிகளுக்கு எலும்பு முறிவு ஏற்படும் அபாயத்தை குறித்த விழிப்புணர்வும் அதற்கான சிகிச்சை முறைகளையும் கூற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

பாதுகாப்பு நடவடிக்கைகள்

* நீரிழிவு நோயாளிகள் எலும்பு முறிவை தடுக்க அடிக்கடி அவர்களின் எலும்பு அடர்த்தி சோதனைகளை செய்து வரலாம்.

* அதே மாதிரி எலும்பு முறிவு ஏற்படாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Diabetic People Are More Likely To Get Bone Fractures

Did you know diabetic people are more likely to get bone fractures? Read on to know more...
Desktop Bottom Promotion