For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டைப் 1 நீரிழிவு இருப்பவர்களுக்கு நீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாம்.. உஷார்.!

டயபெட்டிஸ் எனும் நீரிழிவு நோயில் பல்வேறு வகைகள் உள்ளன. பெரும்பாலும் ஒரு வகை நீரிழிவு நோய் என்பது உங்களது இரத்தத்தில் உள்ள சர்க்கரையை உடல் எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதை பொருத்தே அதன் தாக்கமானது இருக்

|

டயபெட்டிஸ் எனும் நீரிழிவு நோயில் பல்வேறு வகைகள் உள்ளன. பெரும்பாலும் ஒரு வகை நீரிழிவு நோய் என்பது உங்களது இரத்தத்தில் உள்ள சர்க்கரையை உடல் எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதை பொருத்தே அதன் தாக்கமானது இருக்கும்.

சில சமயங்களில் இது பெரும் விளைவுகளை கூட ஏற்படுத்தக்கூடும். அத்தகைய கொடிய நீரிழிவு நோய்களில் ஒன்று தான் நீரிழிவு கெட்டோஅசிடோசிஸ். அதை பற்றி தான் தற்போது விரிவாக தெரிந்து கொள்ள போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் என்றால் என்ன?

நீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் என்றால் என்ன?

இந்த நீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் என்பது பொதுவாக எப்போது ஏற்படும் என்றால், உடலில் அதிகப்படியான கெடோன்ஸ் எனும் அமிலம் சுரக்கும் போதும் மற்றும் தேவையான அளவு இன்சுலின் சுரப்பு தடைபடும் போதும் தான். இத்தகைய நீரிழிவு நோய், டைப் 1 நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அதிகமாக ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. டைப் 2 நீரிழிவு நோய் உள்ளவர்கள் அவ்வளவாக இது ஏற்படுவது இல்லை.

நீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் ஏற்படுவதற்கான காரணங்கள்:

நீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் ஏற்படுவதற்கான காரணங்கள்:

உடலில் சுரக்கும் இன்சுலின் ஹார்மோன் என்பது, இரத்தத்தில் உள்ள சர்க்கரையை செல்களுக்குள் நுழைய உதவும். ஒருவேளை, அதற்கு தேவையான இன்சுலின் உடலில் இல்லை என்றால், இரத்தத்தில் உள்ள சர்க்கரை உடலின் ஆற்றலுக்கு பயன்படாமல் போய்விடும். எப்போது, சர்க்கரை செல்களுக்கும் செல்லவில்லையோ, அது இரத்தத்திலேயே தேங்க ஆரம்பித்து, இறுதியில் இரத்த சர்க்கரை அளவை உயரச் செய்துவிடும்.

எனவே, உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பு கீடோன்ஸ் அமிலத்தை அதிகமாக சுருக்க செய்யும். அதிகமாக கீடோன்ஸ் அமிலம் இரத்தத்தில் அமிலத்தன்மையை அதிகரித்து, நீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் ஏற்படுத்திவிடுகிறது.

நீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் ஏற்பட பொதுவான காரணங்களாக பார்க்கப்படுவது என்னவென்றால், நோய்தொற்று, இன்சுலின் ஊசியை போடத் தவறுவது, மாரடைப்பு, குடிப்பழக்கம், போதைப் பழக்கம், உடல் மற்றும் மன அளவிலான அதிர்ச்சி, டையூரிடிக் மருந்துகள் போன்ற காரணங்களாக கூட இருக்கலாம்.

நீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் அறிகுறிகள்:

நீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் அறிகுறிகள்:

* அதிகப்படியான தாகம்

* அடிக்கடி சிறுநீர் கழிப்பது

* அடிவயிற்று வலி

* குமட்டல் மற்றும் வாந்தி

* மூச்சுத் திணறல்

* சோர்வு மற்றும் அசதி

* குழப்பம்

* சுவாசிக்கும் போது பழவாசனை உணருதல்

* மூச்சு வாங்குவது

* வறண்ட சருமம் மற்றும வாய்

நீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் ஆபத்து காரணிகள்:

நீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் ஆபத்து காரணிகள்:

* டைப் 1 நீரிழிவு நோய் உள்ளவர்கள்

* மனஅழுத்தம்

* அதிக காய்ச்சல்

* மாரடைப்பு அல்லது பக்கவாதம்

* புகைப்பிடித்தல்

* 19 வயதிற்கு குறைவானர்கள்

* உடல் மற்றும் மன ரீதியான அதிர்ச்சி

மருத்துவரை அணுகுவது எப்போது?

மருத்துவரை அணுகுவது எப்போது?

கீழே குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை பார்ப்பது அவசியம்.

* தொடர்ந்து வாந்தி எடுத்தபடியும், சாப்பிடும் சாப்பாட்டை விழுங்க முடியாமல், நீர் அருந்த முடியாமலும் இருந்தால்.

* அடிவயிற்றில் வலி இருந்தபடியும், குமட்டல் உணர்வு இருந்து கொண்டே இருந்தால்.

* மூச்சு திணறல் மற்றும் மூச்சு விடும் போது பழ வாசனைணை உணருதல்.

* சோர்வாகவும், குழப்பமாகவும் உணர்ந்தால்.

நீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் கண்டறிதல்:

நீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் கண்டறிதல்:

முதலில் டாக்டர், உடற்சார்ந்த பரிசோதனைகளை மேற்கொள்வார். மேலும், பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டு, நீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் வருவதற்கான காரணத்தை கண்டறியும் முயற்சியில் ஈடுபடுவார்.

மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் பட்டியல்:

மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் பட்டியல்:

* இரத்த பரிசோதனை - இந்த பரிசோதனையின் மூலம் நீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் கண்டறியப்பட்டு, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு, கெடோன் அளவு மற்றும் இரத்தத்தின் அமிலத் தன்மை தெரிந்து கொள்ளப்படும்.

* எக்ஸ்ரே - மார்பு பகுதியில் எடுக்கப்படும் எக்ஸ்ரே மூலம், நோய்தொற்றுகள் குறித்து அறியப்படும்.

* இரத்த எலக்ட்ரோலைட் சோதனை - இது வளர்சிதை மாற்ற செயல்பாட்டை மதிப்பிடுவதற்கு, அதாவது இரத்தத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் சோடியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகளின் அளவை அளவிட உதவுகிறது.

நீரிழிவு கெட்டோஅசிடோசிஸ்க்கான சிகிச்சை:

நீரிழிவு கெட்டோஅசிடோசிஸ்க்கான சிகிச்சை:

* திரவ மாற்றீடு (fluid replacement) - நீரிழப்புக்கு சிகிச்சையளிக்க திரவ மாற்றீடு செய்யப்படுகிறது. அதிகப்படியாக சிறுநீர் வெளியேறுவதன மூலம் இழந்த திரவத்தைமாக சரிசெய்ய, வாய் வழியாகவோ அல்லது நரம்புகள் மூலமாகவோ கொடுக்கப்படும். மேலும், இது இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையை நீர்த்துப் போக செய்துவிடும்.

* இன்சுலின் சிகிச்சை - இன்சுலின் சிகிச்சை நரம்பு வழியாக வழங்கப்படுகிறது, மேலும் இது இரத்த சர்க்கரை அளவை 200 மி.கி / டி.எல்.க்கு குறைவாக கட்டுப்படுத்துகிறது. இந்த சிகிச்சை முறை நீரிழிவு கெட்டோஅசிடோசிஸை ஏற்படுத்தும் செயல்முறைகளை மாற்றுகிறது.

* எலக்ட்ரோலைட் மாற்றீடு (Electrolyte replacement) - இரத்த ஓட்டத்தில் இன்சுலின் இல்லாததால் பொட்டாசியம், சோடியம் மற்றும் குளோரைடு போன்ற எலக்ட்ரோலைட்டுகள் குறையும். எனவே, இதயம், தசைகள் மற்றும் நரம்புகளின் சரியான செயல்பாட்டிற்கு உதவ நரம்பு வழியாக எலக்ட்ரோலைட்டுகள் செலுத்தப்படுகின்றன.

நீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் தடுப்பது எப்படி?

நீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் தடுப்பது எப்படி?

* உங்களது மருத்துவரின் பரிந்துரைப்படி, நீரிழிவு மருந்துக்களை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ளவும்.

* உங்கள் இரத்த சர்க்கரை அளவை தினமும் கண்காணிக்கவும்.

* ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள் மற்றும் தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்.

* நிறைய தண்ணீர் குடிக்கவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Diabetic Ketoacidosis: Causes, Symptoms, Diagnosis And Treatment

Diabetic ketoacidosis is a serious complication of diabetes that occurs when the body produces high levels of blood acids called ketones and this condition happens when your body cant produce enough insulin.
Desktop Bottom Promotion