For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்க்கரை நோயாளிகள் இரத்த தானம் செய்யலாமா? அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்!

ஒவ்வொரு நிமிடமும் எங்கோ ஒருவருக்கு இரத்தம் தேவைப்படுகிறது. நீரிழிவு நோயாளிகள் இரத்த தானம் செய்யக் கூடாது என்ற தவறான கருத்து நிலவி வருகிறது. ஆனால் நீரிழிவு நோயாளிகள் கூட இரத்த தானம் செய்ய முடியும்.

|

இரத்த தானம் செய்வது என்பது ஒரு தன்னலமற்ற செயலாகும். ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு விநாடியும் எங்கோ ஒருவருக்கு இரத்தம் தேவைப்படுகிறது. கிட்டத்தட்ட 473 லிட்டர் இரத்தம் இருந்தால் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் 3 நபர்களின் உயிரை நம்மால் காப்பாற்ற முடியும்.

Can Diabetics Donate Blood? Everything You Need To Know

இருப்பினும் நீரிழிவு நோயாளிகள் இரத்த தானம் செய்யக் கூடாது என்ற தவறான கருத்து நிலவி வருகிறது. ஆனால் நீரிழிவு நோயாளிகள் கூட இரத்த தானம் செய்ய முடியும். அதற்கு அவர்கள் சில பாதுகாப்பு காரணிகளை கருத்தில் கொண்டு செயல்பட்டாலே போதும். அதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீரிழிவு நோயாளிகள் இரத்த தானம் செய்வது பாதுகாப்பானதா?

நீரிழிவு நோயாளிகள் இரத்த தானம் செய்வது பாதுகாப்பானதா?

நீரிழிவு நோயாளிகள் இரத்த தானம் செய்வது பாதுகாப்பானது தான். டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு உள்ளவர்கள் தாராளமாக இரத்த தானம் செய்யலாம். நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, ஆரோக்கியமான உணவைப் பின்பற்றி, உடற்பயிற்சி செய்து வந்தாலே, உங்கள் இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க முடியும்.

MOST READ: சர்க்கரை நோயாளி ஆரோக்கியமாக இருக்க மனதில் வைத்திருக்க வேண்டிய 5 விஷயங்கள்!

இரத்த தானம் செய்வதற்கு முன் உறுதி செய்ய வேண்டிய விஷயங்கள்:

இரத்த தானம் செய்வதற்கு முன் உறுதி செய்ய வேண்டிய விஷயங்கள்:

* நீங்கள் இரத்த தானம் செய்வதற்கு முன் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

* நீங்கள் நீரிழிவு மருந்துகளை எடுத்துக் கொண்டு இருக்கலாம். அது உங்கள் இரத்தத்தில் கலந்துள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

இரத்த தானம் செய்வதற்கு முன் கருத்தில் கொள்ள வேண்டிய காரணிகள்:

இரத்த தானம் செய்வதற்கு முன் கருத்தில் கொள்ள வேண்டிய காரணிகள்:

* நீரிழிவு நோய் இருப்பவர்கள் இதய நோய்கள் எதாவது இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்து கொண்ட பிறகு இரத்த தானம் செய்யலாம்

* டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோயாளிகள் இன்சுலினை உள் வழியாக எடுத்துக் கொண்டு இருந்தால், அவர்கள் இரத்த தானம் செய்யக் கூடாது.

* நீரிழிவு மருந்துகள் எடுத்துக் கொள்ளும் நபர்கள் இரத்தம் கொடுக்க விரும்பினால் நான்கு வாரங்களுக்கு மருந்து எதையும் மாற்றக் கூடாது. உங்கள் மருந்துகள் மாறி விட்டால், அது உங்கள் இரத்த குளுக்கோஸ் அளவை பாதிக்கும். இதனால் உடல்நிலை ஆபத்தில் இருக்க நேரிடும்.

MOST READ: சர்க்கரை நோய் வராமல் இருக்க நம் முன்னோர்கள் பயன்படுத்தியது இதை தானாம்!

இதய பிரச்சனைகள்

இதய பிரச்சனைகள்

இதய பிரச்சனைகள் இருப்பவர்கள் இரத்த தானம் கொடுக்க அனுமதி இல்லை. சர்க்கரை நோயாளிகளுக்கு இதய தொடர்பான பிரச்சனைகள் இருந்தாலும், இதய செயலிழப்பு, இரத்த குழாய் அடைப்புகள் இருந்தால், அவர்கள் இரத்த தானம் செய்ய அனுமதியில்லை.

இரத்த தானம் செய்யும் முன்...

இரத்த தானம் செய்யும் முன்...

* இரத்த தான மையங்களில் ஒரு ஸ்கிரீனிங் செயல்முறை உள்ளது. எனவே உங்கள் உடல்நிலை குறித்து முன்னரே அவர்களிடம் கூறிவிடுங்கள். நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகள் முதற்கொண்டு சொல்லி விடுங்கள்.

* அதே நேரத்தில் நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். உங்கள் உடல் எடையையும் சராசரியாக பராமரிக்க வேண்டும்.

MOST READ: சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் சாப்பிடுவது நல்லது தெரியுமா?

இரத்த தானத்திற்கு பிறகு செய்ய வேண்டியவை...

இரத்த தானத்திற்கு பிறகு செய்ய வேண்டியவை...

* நீங்கள் இரத்த தானம் செய்த பிறகு, உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கண்காணித்து, இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை 24 வாரங்களுக்கு சாப்பிடுங்கள். இது உங்கள் இரத்த உற்பத்திக்கு உதவும்.

* இரத்தம் தானம் செய்த பிறகு கைகளில் புண்கள் இருந்தால் அசிடமினோபன் எடுத்துக் கொள்ளுங்கள்.

* சிராய்ப்பு, தொற்று ஏற்படுவதை தடுக்க குறைந்தது நான்கு மணி நேரம் உங்கள் கட்டுகளை வைத்திருங்கள்.

* இரத்த தானம் செய்த பிறகு 24 மணி நேரம் எந்தவித கடுமையான செயல்களையும் செய்ய வேண்டாம்.

* இரத்த தானம் செய்த பிறகு திரவ உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் புதிய இரத்த உற்பத்திக்கு உதவியாக இருக்கும்.

MOST READ: உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் படு மோசமாக உள்ளது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்!

முடிவு

முடிவு

உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் நீங்கள் தாராளமாக இரத்த தானம் செய்யலாம். 56 நாட்களுக்கு ஒரு முறை இரத்த தானமும், 7 நாட்களுக்கு ஒரு முறை பிளேட்லெட் தானமும் நீங்கள் செய்து வரலாம். இதனுடன் ஆரோக்கியமான வாழ்க்கை முறை, உணவுப்பழக்கம், உடற்பயிற்சி உங்களை ஆரோக்கியமாக வாழ வைக்கும் என்பதை மறக்காதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Can Diabetics Donate Blood? Everything You Need To Know

When it comes to donating blood, there is a common misconception that diabetics can't donate blood. Although, there are a few requirements a diabetic needs to meet if he or she donates blood.
Desktop Bottom Promotion