Latest Updates
-
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்!
சர்க்கரை நோயாளிகளை குறி வைத்து தாக்கும் புதிய நுரையீரல் நோய்... என்ன அறிகுறிகள்? எப்படி தப்பிப்பது?
டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, தமனிகள், இரத்த நாளங்கள் பாதிக்கப்படுவதோடு, கட்டுப்படுத்தும் நுரையீரல் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகம்.
சர்க்கரை நோய் அவ்ளோ பெரிய பிரச்சனையா என்பது தான் அனைவரின் கேள்வி. சர்க்கரை நோய் வந்தா, சர்க்கரை சாப்பிடுவதை குறைத்துக் கொண்டால் போதும் என்று நினைப்பவர்கள் ஒரு புறம். சர்க்கரை வியாதி ஒரு பரம்பரை வியாதி என்றும், அதற்கான மருந்தை சாப்பிட்டு வந்தாலே போதும் என்று நினைப்பர்கள் மறுபுறம். உண்மை என்னவென்றால், சர்க்கரை நோய் என்பது, உலகில் ஏராளமான மக்களை அவதிக்குள்ளாக்கி வரும் ஒரு கொடிய நோய்.
MOST READ: 12 வாரம் நைட் தூங்கும் முன் இத 1 டேபிள் ஸ்பூன் குடிச்சா.. தொப்பை காணாம போகும் தெரியுமா?
உடலில் தேவையான அளவு இன்சுலின் சுரக்காமல், உட்கொண்ட சர்க்கரை ஆற்றலாக மாறாமல், இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க செய்வதே சர்க்கரை நோய். எப்போது ஒரு மனிதனின் உடலில் இரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறதோ, அவரது உடலில் பல்வேறு பகுதிகள் பாதிப்படைகின்றன.

மோசமான டைப்-2
சர்க்கரை நோயில் டைப் 1 மற்றும் டைப் 2 என இரு வகைகள் உள்ளன. டைப் 1 சர்க்கரை நோயை விட, டைப் 2 சர்க்கரை நோய் தான் மிகுந்த பாதிப்பை உண்டாக்கக்கூடியது. ஏனென்றால், டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, தமனிகள், இரத்த நாளங்கள் பாதிக்கப்படுவதோடு, கட்டுப்படுத்தும் நுரையீரல் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகம். இத்தகைய நுரையீரல் நோய்க்கான பொதுவான அறிகுறி என்றால், மூச்சுத்திணறல் தான். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த அறிகுறி இருந்தால் நிச்சயம் புறக்கணிக்கவே கூடாது.

ஆர்.எல்.டி. எனப்படும் கட்டுப்படுத்தும் நுரையீரல் நோய் என்றால் என்ன?
கட்டுப்படுத்தும் நுரையீரல் நோய் (Restrictive Lung Disease) என்பது ஒரு நபரை நீண்ட நாட்களுக்கு அவதிக்குள்ளாக்கக்கூடிய ஒரு வகை நுரையீரல் நோயாகும். பொதுவான நுரையீரலின் பணி என்பது, உள்ளே செல்லும் மூச்சுக் காற்று நுரையீரல் முழுவதும் நிரம்பி பின்பு, கார்பன்டைஆக்ஸைடை வெளியேற்றும். அப்படி காற்று நுரையீரலுக்குள் செல்லும் போது, நுரையீரல் பலூன் போல விரிந்து பின்பு இயல்பு நிலைக்கு திரும்பும்.
அதுவே, கட்டுப்படுத்தக்கூடிய நுரையீரல் நோயில், நுரையீரலால் முழுவதுமாக விரிய முடியாமல் போகும். இதனால், உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காமல் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். இதனால், தான் இந்த நோய் தாக்கம் உள்ளவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும். கட்டுப்படுத்தக்கூடிய நுரையீரல் நோய் மற்றும் சர்க்கரை நோய் இரண்டுமே மிக கொடிய நோய் தான். இப்படி இருக்கும் போது, இந்த இரண்டுமே ஒரே சமயத்தில் ஒருவரை தாக்கும் போது, அது எவ்வளவு கொடுமையாக இருக்கும் என நினைத்து பாருங்கள். இத்தகைய நோயை பற்றி சற்று விரிவாக இந்த கட்டுரையில் நாம் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம்...

கட்டுப்படுத்தக்கூடிய நுரையீரல் நோயின் அறிகுறிகள்:
* மூச்சு விடுவதில் சிரமம்
* குறுகிய மற்றும் ஆழமற்ற சுவாசம்
* உடலில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஏற்படக்கூடிய மூச்சுத்திணறல்
* கடுமையான இருமல் தொல்லை
* நாள் முழுவதும் சோர்வாக உணர்வது மற்றும் ஆற்றலின்மை
* மனசோர்வை ஏற்படுத்தக்கூடிய எண்ணங்கள்
* திடீர் உடல் எடை குறைவு
* கடுமையான நெஞ்சு வலி

கட்டுப்படுத்தக்கூடிய நுரையீரல் நோய் மற்றும் சர்க்கரை நோய்
பொதுவாக டைப் 2 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இத்தகைய நுரையீரல் நோய் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகம் என்றே சொல்லலாம். நுரையீரல் இழைநார் வளர்ச்சி கூட ஒரு வகையான ஆர்.எல்.டி. வகை தான். சர்க்கரை நோயாளிகள் பெரும்பாலும் மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் உடலில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பாதிக்கப்படக்கூடும். ஒருவேளை உங்களுக்கு நீண்ட நாட்களாக சர்க்கரை நோய் பிரச்சனை இருந்தால், உங்களுக்கு ஆர்.எல்.டி. ஏற்படுவதற்கான ஆபத்து அதிகமாகவே உள்ளது. எனவே, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ, சர்க்கரை நோய் இருந்து, மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகுவதே சிறந்தது.

டைப் 1 மற்றும் டைப் 2 சர்க்கரை நோய்
டைப் 1 சர்க்கரை நோய் என்றால், உடலில் இன்சுலின் சுரக்காமல் இருப்பது. அதுவே, டைப் 2 சர்க்கரை நோய் என்றால், உடலுக்கு தேவையான அளவு இன்சுலின் சுரக்காமல் இருப்பது அல்லது சுரந்த இன்சுலின் முறையாக பயன்படுத்தப்படாமல் போவது. இன்சுலின் தான் உடலின் அனைத்து பாகங்களுக்கும் குளுகோஸை கடத்தி செல்களுக்கு செல்ல உதவுகிறது. எப்போது, இன்சுலின் சுரப்பு குறைகிறதோ, அல்லது பயன்படுத்தப்படாமல் போகிறதோ, அப்போது, செல்களுக்குள் குளுகோஸ் செல்லாமல், இரத்தத்திலேயே கலக்கிறது. இதன் காரணமாக தான், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்துவிடுகிறது.
டைப் 1 சர்க்கரை நோயில், இன்சுலின் சுரப்பே இல்லாமல் போவதால் தான், அவர்களுக்கு ஊசி மூலமாக இன்சுலின் உட்செலுத்தப்படுகிறது. அதேசமயம், டைப் 2 சர்க்கரை நோயில், சரியாக சுரக்கும் இன்சுலின் முறையாக பயன்படுத்தப்படாமல் போவதால், அத்தகையவர்களுக்கு மருந்துகள் மூலமாகவும், சாப்பாட்டின் அளவை குறைப்பதன் மூலமாகவும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications