For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரத்தத்தில் அதிகமாக இருக்கும் சர்க்கரையை குறைக்க இந்த ஒரு பொருளை உணவில் சேர்த்துக்கொண்டால் போதும்..!

இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது அது பல உடலின் மற்ற பாகங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

|

இன்று உலகம் முழுவதும் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் பயமுறுத்தும் ஒரு பிரச்சினை என்றால் அது சர்க்கரை நோய்தான். மாறிவிட்ட உணவுப்பழக்கத்தாலும், வாழ்க்கை முறையாலும் 30 வயதிற்குள் இன்று பெரும்பாலான இளைஞர்களுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுகிறது.

Why Green Peas Is Good For Regulating Blood Sugar

இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது அது பல உடலின் மற்ற பாகங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். இந்த இந்த பதிவில் பச்சை பட்டாணி எப்படி உங்கள் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை சீராகி வைத்திருக்க உதவுகிறது என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டைப் 2 சர்க்கரை நோய்

டைப் 2 சர்க்கரை நோய்

டைப் 2 சர்க்கரை நோய் என்பது இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை செயல்படுவதை தடுக்கும் ஒரு பிரச்சினை ஆகும். இந்த பாதிப்பு ஏற்பட்டால் நோயாளியின் உடலில் இன்சுலின் ஹார்மோன் சுரக்காது அல்லது இன்சுலின் ஹார்மோனின் விளைவுகளை ஏற்காது. இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருக்காது. இதனால் அதிகளவு தாகம், அடிக்கடி சிறுநீர் வெளியேறுதல், பசி மற்றும் சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

பச்சை பட்டாணி

பச்சை பட்டாணி

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள் உணவில் தாராளமாக சேர்த்து கொள்ளக்கூடிய ஒரு பொருள் பச்சை பட்டாணி ஆகும். இந்தியாவில் பல உணவுகளில் பச்சை பட்டாணி சேர்க்கப்படுகிறது. இது மிகவும் பிரபலமான ஒரு உணவுப்பொருள் ஆகும். குளிர்கால உணவாக இருந்தாலும் இப்போது ஆண்டு முழுவதும் கிடைக்கும் இந்த பொருள் உணவிற்கு சுவை மட்டுமின்றி அதன் ஊட்டச்சத்துக்களையும் அதிகரிக்கிறது.

கலோரிகள் குறைவு

கலோரிகள் குறைவு

100 கிராம் பச்சை பட்டாணியில் மொத்தம் 80 கலோரிகள் மட்டுமே இருக்கிறது. குறைவான கலோரிகள் இருக்கும் உணவுகள் டைப் 2 சர்க்கரை நோய்க்கு மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் இது உடல் எடை அதிகரிப்பதை தடுக்கிறது. ஏனெனில் எடை அதிகமாக இருக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை பராமரிப்பது என்பது மிகவும் கடினமானதாகும்.

MOST READ: நீங்கள் எத்தனை ஆண்டுகள் வாழபோகிறீர்கள் என்பதை உங்கள் நெற்றியில் இருக்கும் கோடுகளே சொல்லும் தெரியுமா?

அதிகளவு பொட்டாசியம்

அதிகளவு பொட்டாசியம்

பொட்டாசியம் குறைபாடு உள்ளவர்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்பு மிகவும் அதிகமாகும், மேலும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது மிகவும் முக்கியமான ஒரு கனிமம் ஆகும். 100 கிராம் பச்சை பட்டாணியில் 244மிகி பொட்டாசியம் உள்ளது. இது சர்க்கரையை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள போதுமானது. இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளவும் பொட்டாசியம் அவசியமானதாகும்.

புரோட்டின்

புரோட்டின்

1ஊ கிராம் அளவிருக்கும் பட்டாணியில் 5 கிராம் புரோட்டின் இருக்கிறது. புரோட்டின் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒரு ஊட்டச்சத்து ஆகும், மேலும் இது பசியை கட்டுப்படுத்து உதவுகிறது. குறிப்பாக இது எடையை பராமரிப்பதற்கும், சர்க்கரையை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளவும் உதவும்.

நார்ச்சத்துக்கள்

நார்ச்சத்துக்கள்

100 கிராம் பட்டாணியில் 14 கிராம் கார்போஹைட்ரேட்டும், 5 கிராம் நார்ச்சத்துக்களும் உள்ளது. சர்க்கரை நோய் பிரச்சினை உள்ளவர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது நார்ச்சத்துக்கள் மீதுதான். இரத்த அழுத்தத்தையும், இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவையும் கட்டுப்பாட்டிற்குள் வைக்க நார்ச்சத்துக்கள் மிகவும் அவசியமானதாகும். ஏனெனில் இது செரிமானம் அடைய நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும், அதனால் சர்க்கரையை மெதுவாக வெளியிடும்.

MOST READ: பால் குடிப்பதால் ஆண்களுக்கு ஏற்படும் அந்தரங்க பிரச்சினை என்ன தெரியுமா?

என்ன செய்ய வேண்டும்?

என்ன செய்ய வேண்டும்?

டைப் 2 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பட்டாணியை எப்படி வேண்டுமென்றாலும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இது சர்க்கரை அளவு திடீரென உயருவதை கட்டுப்பாட்டிற்குள் வைக்கும். இதனுடன் கடுமையான உணவுமுறையும், சீரான உடற்பயிற்சியும் இருந்தால் சர்க்கரை நோய்க்கு பயப்படாமல் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Green Peas Is Good For Regulating Blood Sugar

Green pea is one such vegetable that diabetics may benefit from including in their diet. It regulates the blood sugar level.
Story first published: Wednesday, May 8, 2019, 13:07 [IST]
Desktop Bottom Promotion