For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொஞ்சம்கூட கசப்பே இல்லாம் சூப்பரா டேஸ்டியா பாகற்காய் ஜூஸ் வீட்ல எப்படி செய்யலாம்? இதோ

ருசியான கசப்பே இல்லாமல் சர்க்கரை நோயாளிகள் எப்படி பாகற்காய் ஜூஸ் தயாரிக்கலாம் என்பது பற்றி இங்கே பகிர்ந்து கொள்கிறோம். அதைப் பற்றிய ரெசிபிகள் விவரத்தோடு கூடிய முழு தொகுப்பு.

|

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சுவையான விதவிதமான பாகற்காய் ஜூஸ் செய்முறை விளக்கங்கள்

உலக மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்படுவது நீரிழிவு நோயால் தான் என்பது பலரும் அறிந்திருக்கலாம். இன்றைய மக்களின் வாழ்வியல் முறை மற்றும் இதர காரணிகள் பெருமளவு மக்கள் நீரிழிவு நோயால் குறிப்பாக டைப் 2 நீரிழிவு பாதிப்பால் அவதிப்பட காரணமாக உள்ளது.

Bitter Gourd Juice

அமெரிக்காவில் மட்டும் 30.3 மில்லியன் அதாவது ஜனத்தொகையில் 9.4% பேருக்கு 2015ம் ஆண்டு நீரிழிவு நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை ஆராய்ந்தவர்கள் அமெரிக்க நீரிழிவு நிறுவனம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீரிழிவு வகைகள்

நீரிழிவு வகைகள்

உடலின் இரத்த சர்க்கரை அளவில் அதிகரிப்பு இருக்கும் நிலையை நீரிழிவு என்று கூறுவார்கள். இந்த நிலை இரண்டு விஷயத்தினால் ஏற்படுகிறது.

டைப் 1 நீரிழிவு - இந்த நிலையில் உடல் இன்சுலின் உற்பத்தி செய்ய முடியாத நிலை உண்டாகிறது.

டைப் 2 நீரிழிவு - இன்சுலின் உற்பத்திக்கு ஏற்ப உடல் இயங்க மறுக்கும் நிலை

டைப் 2 நீரிழிவு உண்டாவதற்கான பொதுவான காரணிகளில் உணவுப் பழக்கம், உடற்பயிற்சி குறைபாடு, மரபணு, குறிப்பிட்ட இன பின்புலத்தைச் சேர்ந்தவர்கள் , மற்றும் வயது ஆகியவை அடங்கும்.

MOST READ: தன் ஐந்து வயது மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து 60 முறை கத்தியால் குத்தி கொன்ற தந்தை

கண்டறிதல்

கண்டறிதல்

நீரிழிவு நோய்க்கண்டறிதலுக்கு பிறகு உங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையும் மாறி விடுகிறது. நீரிழிவு தொடர்பான உடல் பிரச்சனைகளான இதய நோய், கண்பார்வை மங்குதல், உயர் இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால் போன்ற பாதிப்புகள் உண்டாகும் அபாயத்தை தடுப்பதற்கு சில பல வாழ்க்கை முறை மாற்றங்களை செய்து கொள்வது நல்லது.

இன்சுலின்

இன்சுலின்

உங்களுக்கு ஏற்பட்டுள்ள நீரிழிவு டைப் 1 அல்லது டைப் 2 இவற்றில் எந்த விதம் என்பதற்கு ஏற்ற மருந்துகளை மாத்திரைகளாக அல்லது இன்சுலின் ஊசியாக அல்லது இரண்டு விதமாக மருத்துவ ஆலோசனை மூலம் தொடரலாம்.

சரியான உணவு முறை மற்றும் போதுமான உடற்பயிற்சி மூலம் நீரிழிவு பாதிப்பை தடுக்கவோ கட்டுப்படுத்தவோ முடியும். உணவு குறித்த விஷயத்தில் நீரிழிவைப் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் அனைவரும் அறிந்த ஒரு முக்கிய மூலப்பொருள் பாகற்காய்.

பாகற்காயும் நீரிழிவும்

பாகற்காயும் நீரிழிவும்

பாகற்காய் நீரிழிவு எதிர்ப்பு தன்மைகள் கொண்ட ஒரு உணவுப்பொருள். பாகற்காயில் மூன்று முக்கிய கூறுகள் உள்ளன. அவை, பாலி பெப்டைடு, விசின், கேரட்டின் ஆகியவை ஆகும். இவை இரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பதில் சிறப்பாக செயல்புரிகின்றன. இந்த கூறுகள், அணுக்கள் சர்க்கரை மூலக்கூறுகளை எடுத்துச் செல்ல உதவுகின்றன, இன்சுலின் சுரப்பை அதிகரிக்கின்றன, கல்லீரல் மற்றும் தசைகளில் க்ளைகொஜென் தொகுப்பை ஊக்குவிகின்றன, மேலும் உடல் க்ளுகோஸ் உறிஞ்சுதலைக் குறைக்க உதவுகின்றன.

ஊட்டச்சத்துக்கள்

ஊட்டச்சத்துக்கள்

பாகற்காயில் இரத்த சர்க்கரையை குறைக்கும் பண்புகள் மிதமான அளவு இருப்பதாகவும், இதனால் டைப் 2 நீரிழிவு நோயாளிகளின் பிருக்டோஸ் அளவு குறைவதாகவும் எதனோபார்மகொலோஜி இதழில் வெளியான ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது.

2015ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் பாகற்காயை சாப்பிட்டு வருவதால் மருத்துவ அறிக்கையில் வெளியாகியுள்ள எந்த ஒரு பக்க விளைவும் இல்லாமல் ஒரு சிறப்பான முறையில் உடல் நலத்திற்கு பயன்படுகிறது என்று குறிப்பிடுகிறது.

மீண்டும் 2017ம் ஆண்டு நடத்தபட்ட ஒரு ஆய்வில் பாகற்காய் மற்றும் நூல்கோல் சேர்த்து தயாரிக்கப்படும் ஜூஸ் டைப் 2 நீரிழிவு நோயாளிகளிடையே சிறந்த நன்மையைத் தருவதாக அறிவிக்கிறது.

எப்படி சாப்பிடலாம்?

எப்படி சாப்பிடலாம்?

பாகற்காயின் நன்மைகள் பற்றி தெரியாமல் அதன் கசப்பு சுவையினால் பலரும் அதனை ஒதுக்குகின்றனர். ஆனால் இத்தகைய சிறப்புகள் பெற்ற பாகற்காயை மற்ற காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.

பாகற்காயைக் கொண்டு ஜூஸ் தயாரிக்கும்போது நீரிழிவு நோய்க்கு நன்மை தரும் இதர காய்கறி பழங்கள் கொண்டு சேர்த்து தயாரிப்பதால் பாகற்காயின் கசப்பு தன்மை நீங்கி பருகுவதற்கு இதமான உணர்வைத் தரும்.

 உடலுக்குள் என்ன நடக்கும்?

உடலுக்குள் என்ன நடக்கும்?

உதாரணத்திற்கு, நாம் வெள்ளரிக்காய், க்ரீன் ஆப்பிள், எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் பாகற்காயை சேர்த்து ஜூஸ் தயாரிக்கலாம்.

வெள்ளரிக்காயின் க்ளைகமிக் குறியீடு "0" ஆகும். அப்படி என்றால், நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவைப் பற்றிய எந்த ஒரு பயமும் இல்லாமல் இதனை எடுத்துக் கொள்ளலாம். இந்த நீர்ச்சத்து நிறைந்த காயில் சிறப்பான ஒரு ஹார்மோன் உள்ளது. இந்த ஹார்மோன், கணையத்தில் இன்சுலின் உற்பத்தியில் உதவுகிறது. இதன்மூலம் கார்போஹைட்ரெட் ஆற்றலாக மாற அணுக்களுக்கு உதவுகிறது.

நீரிழிவு நோயின் சிக்கல் மிகுந்த பிரச்சனைகளுக்கு ஒரு பாதுகாப்பு வளையமாக வெள்ளரிக்காய் செயல்படுகிறது என்றும் , நீரிழிவு நோயாளிகளின் கார்போனில் அழுத்தம் மற்றும் விஷத்தன்மை அழுத்தம் ஆகியவற்றுக்கு மிகவும் பாதுகாப்பானது என்றும் 2016ல் நடந்த ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது.

MOST READ: இந்த ரேகைதான் துரதிஷ்ட ரேகை... இது உங்க கையில எப்படி இருக்குனு கொஞ்சம் பாருங்க...

கிரீன் ஆப்பிள்

கிரீன் ஆப்பிள்

நீரிழிவு நோயாளிகள் உட்கொள்ளத் தகுந்த ஒரு ஆரோக்கியமான சாறு மிகுந்த ஒரு பழம் க்ரீன் ஆப்பிள்.

கரையக்கூடிய நார்ச்சத்து ஆப்பிளில் அதிகம் உள்ளது, மேலும் வைடமின் சி , உடலுக்கு பல வகையில் நன்மை தரும் அன்டி ஆக்சிடென்ட் போன்றவை ஆப்பிளில் உள்ளது. மேலும் ஆப்பிள் பெக்டின் என்னும் கூறு உடலை நச்சுகளில் இருந்து நீக்கி கழிவை வெளியேற்ற உதவுகிறது.

எலுமிச்சை

எலுமிச்சை

நாம் பயன்படுத்தும் மற்றொரு பொருள் எலுமிச்சை சாறு. இதில் இருக்கும் வைடமின் சி மற்றும் கரையக் கூடிய நார்ச்சத்து காரணமாக நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த நன்மையைத் தருகிறது.

வளர்சிதை மாற்ற நோய்குறியில் புளிப்பு ப்லேவனைடுகள் நரிங்கின் மற்றும் நரின்ஜெனின் போன்றவை நேர்மறை விளைவுகளை ஏற்படுத்துவதாக 2014ம் ஆண்டு நடந்த ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது.

மஞ்சள்

மஞ்சள்

மஞ்சளில் உள்ள குர்குமின் என்னும் கூறு காரணமாக மற்றும் அதன் அழற்சி எதிர்ப்பு பண்பு காரணமாக இது மிகவும் நன்மை அளிக்கிறது.

நீரிழிவு பாதிப்பு உள்ளவர்களுக்கு நன்மை தரக் கூடிய இரண்டு விதமான ஜூஸ் தயாரிப்பு முறை இங்கே விவரிக்கப்பட்டுள்ளது. அதனை இப்போது காண்போம்

குறிப்பு

குறிப்பு

உயர் நார்ச்சத்து உணவுகளை எடுத்துக் கொள்வதில் சிரமம் உள்ளவர்கள், இந்த சாற்றை வடிகட்டி மூலம் வடிகட்டி பருகலாம். மேலும், இந்த சாறு உங்கள் உடலுக்கு ஏற்றுக் கொள்கிறதா இல்லையா என்பதை அறிந்து கொள்ள, இந்த சாற்றை பருகுவதற்கு முன் மற்றும் பின், இரத்த சர்க்கரை அளவை பரிசோதித்துக் கொள்வது நல்லது.

1. பாகற்காய் மற்றும் வெள்ளரிக்காய் சாறு:

2. பாகற்காய் மற்றும் மஞ்சள் சாறு

பாகற்காய் மற்றும் வெள்ளரிக்காய் ஜூஸ்:

பாகற்காய் மற்றும் வெள்ளரிக்காய் ஜூஸ்:

எளிதில் தயாரிக்கக்கூடிய இந்த சாறு, லேசான இனிப்பு மற்றும் கசப்பு சுவை கொண்டதாக உள்ளது.

தேவையான பொருட்கள்

. 2 பெரிய பாகற்காய்

. ஒரு மிதமான அளவு வெள்ளரிக்காய்

. 1/2 எலுமிச்சை பழம்

. 1 க்ரீன் ஆப்பிள்

. 1/2 ஸ்பூன் உப்பு

செய்முறை

. பாகற்காயைக் கழுவி தோல் சீவிக் கொள்ளவும்.

. பாகற்காயை நீள வாக்கில் வெட்டி, விதைகளை எடுத்து விடவும். பாகற்காயை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

. ஒரு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்து அதில் நறுக்கிய பாகற்காயை 10 நிமிடம் ஊற வைக்கவும். தேவைப்பட்டால் இந்த நீரில் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.

. வெள்ளரிக்காயை தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

. க்ரீன் ஆப்பிளை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

. வெள்ளரிக்காய், பாகற்காய், க்ரீன் ஆப்பிள் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து சாறு எடுக்கவும்.

. இந்த சாற்றில் 1/2 எலுமிச்சம் பழ சாற்றை சேர்க்கவும்.

நீரிழிவுக்கு ஏற்ற பாகற்காய் வெள்ளரிக்காய் ஜூஸ் தயார். தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த ஜூஸ் ஒரு கிளாஸ் பருகுவதால் , உங்கள் இரத்த சர்க்கரை அளவு கட்டுபாட்டில் இருக்க உதவும்.

MOST READ: இதுல நீங்க எப்படி உட்காருவீங்கனு சொல்லுங்க... நீங்க எப்படிப்பட்ட ஆள்னு நாங்க சொல்றோம்

பாகற்காய் மற்றும் மஞ்சள் ஜூஸ்

பாகற்காய் மற்றும் மஞ்சள் ஜூஸ்

இது மற்றொரு எளிதான மற்றும் விரைவான வழியில் பாகற்காய் ஜூஸ் தயாரிக்கும் வழியாகும். இந்த சாற்றில் கடுமையான கசப்பு சுவை இருக்கும் ஆனால் மஞ்சளின் வாசனையை தவிர்க்க முடியாது.

தேவையான பொருட்கள்:

. 2 பாகற்காய்

. 1/2 எலுமிச்சை பழம்

. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்

. ஒரு சிட்டிகை இமாலயன் உப்பு

. 1/2 ஸ்பூன் உப்பு (தேவைபட்டால் )

செய்முறை

. பாகற்காயை கழுவி, தோல் சீவி விதைகளை நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

. 1/2 ஸ்பூன் உப்பு சேர்க்கப்பட்ட நீரில் நறுக்கிய பாகற்காயை 10 நிமிடங்கள் ஊற விடவும்.

. பின்பு பாகற்காயை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.

. இந்த சாற்றில் மஞ்சள் தூள் மற்றும் ஒரு சிட்டிகை இமாலயன் உப்பு சேர்க்கவும்.

தினமும் இந்த சாற்றை வெறும் வயிற்றில் பருகி வருவதால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tasty DIY Bitter Gourd Juice Recipes for Diabetics

Bitter gourd, also known as bitter melon or bitter squash, has an antidiabetic property. It contains three active compounds – polypeptide-p, vicine and charatin – that make it effective for managing blood sugar levels.
Story first published: Friday, March 8, 2019, 12:06 [IST]
Desktop Bottom Promotion