For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்க்கரை நோயை முற்றிலுமாக கட்டுப்படுத்தும் முன்னோர்களின் ஆசன பயிற்சிகள்...

|

இன்றைய நவீன உலகில் பல்வேறு விதமான நோய்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அவற்றின் தாக்கம் சற்றே கொடியாகவும், வலிமை மிக்கதாகவும் இருக்கிறது. உடலின் ஆற்றல் எந்த அளவுக்கு குறைந்து கொண்டே போகிறதோ, அதை விட பல மடங்கு அவற்றின் தன்மை அதிகரிக்கிறது. குறிப்பாக நீரிழிவு நோய் என்றால், அதை பற்றி இன்று அச்சம் கொள்ளத்தான் மக்கள் செய்கின்றனர். இந்த நோயின் கடின தன்மை உயர்வதால், இதை கண்டு பலர் பயப்படுகின்றனர்.

Yoga Poses to Cure Diabetes

இது போன்ற நோய்களை நாம் சமாளிக்க தயாரா..? என்பதே முக்கிய கேள்வியாக இருக்கிறது. எந்த வித நோயாகினும் அதற்கென்று ஒரு சில குணப்படுத்த கூடிய வழிகள் இருக்கும். அந்த வகையில், இதனை சரி செய்ய நம் முன்னோர்களின் சில முக்கிய பயிற்சிகள் உதவும். சர்க்கரை நோயை குணப்படுத்த கூடிய முக்கியமான ஆசன பயிற்சிகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து நலம் பெறலாம் நண்பர்களே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொடிய நோயா..?

கொடிய நோயா..?

உலகையே அச்சுறுத்தும் ஒரு கொடிய நோய் என்றால், அது நீரிழிவு நோய்தான். பத்தில் 6 பேருக்கு சர்க்கரை நோய்கான அறிகுறிகள் இருப்பதாக ஆய்வுகள் சொல்கிறது. நோய்கள் இன்றி வாழ்ந்த நம் முன்னோர்கள் காலம் முற்றிலுமாக மலையேறி போய், நோய்கள் மட்டுமே வாழ்வு' என்ற காலத்தை நாம் உருவாக்கி கொண்டிருக்கிறோம். நம்முடைய அனைத்து பழக்க வழக்கங்களும் நோய்களுக்கான வழி முறைகளை வகுத்து கொண்டே போகிறது.

சர்க்கரை நோயின் பாதிப்பு...

சர்க்கரை நோயின் பாதிப்பு...

கிளைசெமிக் இன்டெக்ஸ் (glycaemic index) உடலில் உள்ள கார்போஹைட்ரட்டின் அளவை பொருத்து நம் உடலில் எவ்வளவு க்ளுகோஸ் உள்ளது என்பதை நிர்ணயிக்கும். உடலில் இன்சுலின் அளவு குறைத்திருந்தால் அது சர்க்கரை நோயாக கருதுகின்றோம். இன்சுலின் அளவை எவ்வாறு உயர்த்தலாம் என்று பார்த்தால் அதில் முதன்மையான பங்கு உணவிற்கும், கடைபிடிக்க கூடிய முறைகளிலும் இருக்கிறது.

முன்னோர்களின் சமன் நிலை...

முன்னோர்களின் சமன் நிலை...

இன்றைய வாழ்வில் நாம் சமமான நிலையில் நம் உடலை வைத்து கொள்ளாததாலே, இது போன்ற நோய்கள் உருவாகிறது. ஆனால், முன்னோர்கள் இதிலிருந்து தங்களை காத்து கொள்ள வெவ்வேறு முறைகளை கடைபிடித்து வந்தனர். அதில் சில முக்கிய பயிற்சிகள் இவைதான்...

விருக்சாசனம்

ஹலாசனம்

தனுராசனம்

அர்த மத்ஸ்யேந்திர ஆசனம்

பாலாசனம்

விருக்சாசனம்

விருக்சாசனம்

இந்த ஆசன பயிற்சி மரம் போன்ற நிலையில் இருத்தலை குறிக்கும். இதனை செய்து வருவதால், கணையங்களை நன்கு வேலை செய்ய தூண்டும். குறிப்பாக ஹார்மோன்களை சீரான அளவில் இந்த ஆசனம் சுரக்க செய்யும். இதனை தொடர்ந்து செய்து வருவதால் நல்ல பலனை அடைய முடியும்.

MOST READ: இன்னும் ஒரே மாதத்தில் உங்களுக்கு மாரடைப்பு வரப்போகிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்!

ஆசன முறை...

ஆசன முறை...

இந்த பயிற்சியை செய்ய, முதலில் இரு கால்களையும் சிறிது விரித்து வைத்து கொள்ளவும். அடுத்து வலது காலை மடக்கி, அதை மேலே உயர்த்தி அடிப்பாதத்தை இடது தொடையின் மேல் வைக்க வேண்டும். இந்த நிலையில் முதலில் நிலையாக நின்று கொண்டு, மூச்சை ஆழ்ந்து உள்ளிழுத்து வெளியே விடவும். பிறகு கைகளை மேலே உயர்த்தி வணக்கம் சொல்லும் நிலையில் வைத்து கொள்ள வேண்டும். இந்த நிலையில் மெதுவாக மூச்சை இழுத்து வெளியே விட்டு, 10 முதல் 30 விநாடிகள் இருக்கலாம்.

ஹலாசனம்

ஹலாசனம்

கணையங்களின் வேலைப்பாட்டை சீர்படுத்தி, மண்ணீரல், கல்லீரல் ஆகிய உறுப்புகளை நன்றாக வேலை செய்ய வைக்க இந்த ஹலாசனம் உதவுகிறது. மேலும், வயிற்று தசைகளை இந்த பயிற்சி வலுப்படுத்துகிறது. இதனால், நீரிழிவு நோயாளிகள் விரைவில் குணமடையலாம்.

பயிற்சி முறை #1...

பயிற்சி முறை #1...

முதலில் மேல் நோக்கி படுத்து கொள்ள வேண்டும். அடுத்து இரு கால்களையும் மேலே தூக்கவும். இப்போது இரு கைகளையும் இடுப்பு பகுதியை பிடித்து கொள்ளுமாறு வைத்து கொள்ளவும். பிறகு கைகளின் உதவியோடு தலையை தவிர முழு உடலையும் மேலே தூக்கி நிறுத்தவும். இந்த நிலையில் கால்கள் செங்குத்தாக மேல் நோக்கி நிறுத்தவும்.

பயிற்சி முறை #2...

பயிற்சி முறை #2...

அடுத்து, உங்களின் முழு உடல் எடையையும் தோல் பகுதிக்கு கொண்டு வந்து, கால்களை எதிர் பக்கமாக நீட்டி கொள்ளுங்கள். இந்த நிலையில் கால் கட்டை விறல் மட்டுமே தரையில் பட வேண்டும். இந்த ஆசன நிலையில் உங்களால் முடிந்த அளவிற்கு இருங்கள். பிறகு பழைய நிலைக்கே வந்து மீண்டும் இதனை செய்து வந்தால் நீரிழுவு நோய் கட்டுக்குள் வரும்.

MOST READ: ஆண்களுக்கு ஆற்றல் மிக்க விந்தணுக்களை உற்பத்தி செய்ய கூடிய உணவுகள் இதுவே...!

தனுராசனம்

தனுராசனம்

தனுராசனம் செய்வதால் கணையம் மற்றும் குடல் நன்கு வேலை செய்யும். இது சர்க்கரை அளவை கட்டுப்பாடாக வைத்து கொள்ள பெரிதும் உதவுகிறது. தனு என்பதற்கு "வில்" என்ற அர்த்தம் உண்டு. இந்த ஆசனம் செய்ய, வில்லை போன்று நம் உடலையும் வளைத்து செய்ய வேண்டும்.

பயிற்சி முறை...

பயிற்சி முறை...

முதலில் குப்பற படுக்க கொண்டு, இரண்டு கணுக்காலை கைகளால் பிடித்து கொள்ளவும். அடுத்து, நெஞ்சை மேல் நோக்கி தூக்குமாறு செய்ய வேண்டும். இந்த நிலையில் மெல்லமாக மூச்சை இழுத்து வெளியில் விடவும். இவ்வாறு, வில்லை போன்று உங்கள் உடலை வளைத்து தொடர்ந்து செய்து வந்தால் உடல் சுறுசுறுப்புடன் இருந்து அனைத்து செயல்பாடுகளையும் சீராக வைக்கும்.

அர்த மத்ஸ்யேந்திர ஆசனம்

அர்த மத்ஸ்யேந்திர ஆசனம்

இந்த ஆசனம் உடலில் ரத்த ஓட்டத்தை சீர்படுத்தி கணையம், கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றின் செயல்பாட்டை நல்ல முறையில் இயங்க செய்யும். செரிமான கோளாறுகளை இது விரைவிலே குணப்படுத்தி விடும். சர்க்கரை நோயாளிகள் இதனை செய்து வந்தால், கணையத்தின் வேலைகள் சீராக நடைபெற்று, சர்க்கரையின் அளவு குறைய தொடங்கும்.

பயிற்சி முறை...

பயிற்சி முறை...

இந்த ஆசனத்தை செய்ய முதலில் இரண்டு கால்களையும் நீட்டி கொண்டு, பின் வலது காலை இடது காலின் மேல் போட்டு விட்டு, இடது காலை வலது காலிற்கு அடியில் வைத்து கொள்ளவும். அடுத்து, இடது கையை வலது காலின் கட்டை விரலை பிடிக்கும்படி செய்யுங்கள். அத்துடன் வலது கையை முதுகுக்கு பின்புறம் வைத்து கொள்ளவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், நீரிழிவு நோய் குணமாகும்.

MOST READ: இன்றைய அதிர்ஷடத்துக்கு உரிய ராசிக்காரர் யார்? அட நீங்களா கூட இருக்கலாம்ங்க...

பாலாசனம்

பாலாசனம்

இந்த ஆசனமானது குழந்தையின் நிலை இருப்பதாய் குறிக்கிறது. அதாவது, இந்த பயிற்சியை குழந்தை உட்கார்ந்திருக்கும் முறையில் செய்ய வேண்டும். எனவே இது இப்பெயர் பெற்றது. இதனை தொடர்ந்து செய்து வந்தால் சர்க்கரை நோய் விரைவிலே குணமடையும். மேலும், உடலின் வலிமையை கூட்டும்.

பயிற்சி முறை...

பயிற்சி முறை...

இந்த ஆசன நிலையில் பயிற்சி பெற, முதலில் குழந்தை உட்கார்ந்திருக்கும் நிலையில் இருக்க வேண்டும். அதாவது, நான்கு கால்களின் நிலையில் இருந்து கொண்டு கை முட்டிகளை தளர்த்தி, மார்பு பகுதியை தரையில் படுமாறு செய்து, கை முட்டிகளுக்கு இடையே படிய வைக்கவும். தலையை வலது பக்கமாக திருப்பி குழந்தையை போன்று இந்நிலையில் இருக்கவும். இந்த நிலையில் மூச்சை இழுத்து வெளியே விடவும். பிறகு இடது பக்கமாகவும் செய்யவும்.

இது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Yoga Poses to Cure Diabetes

Yoga can help you to cure many health problems. There are several types of yoga techniques. Yoga can enhance the blood flow to the entire body.
Desktop Bottom Promotion