சர்க்கரை நோயாளிகள் இதெல்லாம் சாப்பிட்டிங்கன்னா பரலோகம் தான்...

Posted By: gnaana
Subscribe to Boldsky

நீரிழிவு, இன்று உலகில் மிகவும் தீவிரமான பாதிப்பாக, இருக்கிறது. மிகவும் தீவிரமான பாதிப்பாகக் கருதப்படுவதால், இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் உணவுகளைத் தவிர்ப்பது நலமாகும். சர்க்கரை பாதிப்புள்ளவர்கள், மனக்கட்டுப்பாட்டுடன் இருக்கிறார்களோ இல்லையோ, வாய்க்கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டியது, மிகவும் அவசியமாகிறது.

health

ஏனெனில், மற்றவர்கள் சாதாரணமாக தின்னும் தின்பண்டங்கள்கூட, இவர்களுக்கு, ஆபத்தான பாதிப்புகளை ஏற்படுத்தி விடக்கூடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீரிழிவு நோய்

நீரிழிவு நோய்

சர்க்கரையில் செய்யப்படும் இனிப்பு மிட்டாய்கள், சர்க்கரைசத்து நிரம்பிய சோடா போன்றவை, ஆபத்தை உண்டாக்கிவிடும். அவற்றின் இனிப்பு, நேரடியாக இரத்தத்தில் கலப்பதால், உடல்நலத்தில் பாதிப்புகள் ஏற்படலாம்.

இதுபோல, சிலவகை உணவுகளையும், சர்க்கரை பாதிப்புள்ளவர்கள் கண்டிப்பாக, ஒதுக்கிவிட வேண்டும். இல்லையெனில், இதயபாதிப்பு, ஸ்ட்ரோக் உள்ளிட்ட கடுமையான பாதிப்புகள் உடலில் ஏற்படக்கூடும்.

அரிசி சாதம்

அரிசி சாதம்

பலநாடுகளில் பிரதான உணவாக விளங்கும் அரிசிசாதம், சர்க்கரை பாதிப்புள்ளவ்ர்களுக்கு, ஆபத்தான உணவாகிவிடுகிறது. அரிசிசாதத்தில் இருக்கும் கூடுதல் கார்போஹைட்ரேட், டைப்-2 பாதிப்பை அதிகரிக்கிறது. கார்போ ஹைட்ரேட்களில் இருக்கும் சர்க்கரை, உடலில் நேரடியாகக்கலப்பதால், சர்க்கரை அளவு அதிகரித்து, ஆபத்துகளை ஏற்படுத்திவிடுகிறது. மேலும், அரிசிமாவில் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் தின்பண்டங்களை தவிர்ப்பதும், அவசியமாகும்.

அரிசிக்கு மாற்றாக மாப்பிள்ளைசம்பா, மூங்கிலரிசி மற்றும் குதிரைவாலி போன்றவற்றில் சாதம் சமைத்து சாப்பிடலாம். அவற்றிலுள்ள நார்ச்சத்துக்கள், இரத்த சர்க்கரை அளவை, குறைக்கிறது.

ரொட்டிகள் மற்றும் மசாலா சாஸ்கள்

ரொட்டிகள் மற்றும் மசாலா சாஸ்கள்

அதிக கலோரிகள் நிறைந்த பிஸ்கெட்கள் மற்றும் மிளகாய் தக்காளிசாஸ் சேர்ந்த கிரேவிகளை சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டும். மேலும் இவற்றில் கொழுப்பும், சோடியமும் அதிகஅளவில் உள்ளது. தினமும், 1.5 கிராம் மட்டுமே, சோடியத்தை உணவில் சேர்க்கவேண்டும்.

தக்காளி பழக்கூழ்

தக்காளி பழக்கூழ்

டொமாடோ சாஸ், இன்னொரு ஆபத்தான உணவாகும். சர்க்கரை பாதிப்புள்ளவர்கள் மட்டுமன்றி, மற்றவர்களும், தக்காளி சாஸைக்கண்டால், காததூரம் ஓடிவிடுகிறார்கள். எதுக்காக தெரியுமா? இதிலுள்ள குளுக்கோஸும் சோடியமும், உடம்பில் சர்க்கரையை ஜாஸ்தியாக்கிடுது, அதுக்காகத்தான்.

பான் கேக்

பான் கேக்

பான்கேக் என்பது, மேலைநாட்டினரின், பன்போன்ற காலை டிபன் வகை. கார்போஹைட்ரேட், செயற்கை வேதிப்பொருட்கள், பருத்தி எண்ணை போன்றவை கலந்த பான்கேக்களில், டிரான்ஸ் ஃபேட் என்ற கொழுப்பு நிறைய இருக்கு. இது உடலில் நச்சுக்கொழுப்பை அதிகரிப்பதால், இவற்றைத்தவிர்ப்பது நல்லது. விரும்பினால், வீட்டில் செய்து சாப்பிடும்போது, நமக்கு பாதிப்பு இல்லாதவகையில், பொருட்களை சேர்த்துக்கொள்ளமுடியும்.

ஐஸ் காபி

ஐஸ் காபி

சர்க்கரை பாதிப்புள்ளவர்களுக்கு, மிகவும் ஆபத்தைத்தரும் ஒருபானமென்றால், அது, ஐஸ் காபிதான். அதைக் குடிப்பதன்மூலம், ஆபத்தைத்தேடிக்கொள்ள போகிறோம் என்றுபொருள். அதன் கலோரி அளவு 5௦௦, கொழுப்பு 9 கிராம் மற்றும் கார்போஹைட்ரேட் 98 கிராம். இப்போது நீங்களே உணர்ந்துகொள்ளமுடியும், அதன் பாதிப்பின் தன்மைகளை.

சர்க்கரை மிட்டாய்கள்

சர்க்கரை மிட்டாய்கள்

சர்க்கரைமிட்டாய், டயாபடிஸ்காரர்களுக்கு, ஆபத்தை ஏற்படுத்தும் ஒன்று. ஊட்டச்சத்து ஏதுமில்லாத இனிப்புமிட்டாய்கள், உடல்எடையைக் கூட்டி, உடலின் சர்க்கரை அளவை, இராக்கெட்வேகத்தில் உயர்த்திவிடும்.

உலர் திராட்சைபழங்கள்

உலர் திராட்சைபழங்கள்

டயாபடிஸ் பாதிப்புள்ளவர்கள், உலர்திராட்சை பழங்களை சுவைக்க, விரும்பக்கூடாது என்பதற்குக்காரணம், அவற்றிலுள்ள செறிவான சர்க்கரைச்சத்தாகும். இவை, இரத்த சர்க்கரை அளவை, கண்ணிமைக்கும்நேரத்தில் அதிகரித்துவிடும் தன்மைமிக்கவை.

பால்

பால்

எல்லோரும், உடல்நலத்துக்காக, பாலை தினமும் குடித்துவந்தாலும், நீரிழிவுகாரர்களுக்கு, பால் பெரும்பாதிப்பை ஏற்படுத்திவிடும். பாலில் முழுமையாக உள்ள கொழுப்பு, உடலின் இன்சுலின் பாதுகாப்பை, செயலிழக்கவைத்துவிடும்.

தேவையெனில், குறைந்தகொழுப்புள்ள பால் அல்லது கொழுப்பு நீக்கப்பட்ட பாலை பருகலாம்.

வெள்ளை பிரெட்

வெள்ளை பிரெட்

வெள்ளைநிறத்தில் உள்ளவை யாவும், டயாபடிஸ்காரர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும். வெள்ளை பிரெட்டில் உள்ள குளுக்கோஸ், சர்க்கரையளவை, மோசமாக்கிவிடும். தேவைப்பட்டால், பாதிப்பைத்தராத, முழுதானிய பண்டங்களை சாப்பிடலாம்.

ஃபிரெஞ்ச் ஃப்ரைஸ்

ஃபிரெஞ்ச் ஃப்ரைஸ்

டேஸ்ட்டான தீனியாக ஃபிரெஞ்ச்ஃப்ரைஸ் இருந்தாலும், இவற்றிலுள்ள 25 கிராம் கொழுப்பு, 63 கிராம் கார்போஹைட்ரேட், 5௦௦ கிராம் கலோரி மற்றும் வறுத்த உருளைசிப்ஸில் உள்ள எண்ணை, உடல் பருமனை ஏற்படுத்தி, மாரடைப்பை உண்டாக்கிவிடும்.

பன்றி இறைச்சி

பன்றி இறைச்சி

பன்றிஇறைச்சி போன்ற இறைச்சிகளிலுள்ள மிதமிஞ்சிய கொழுப்பு, நீரிழிவு உள்ளவர்களின் உடலில் பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். அது நாளடைவில் மாரடைப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மாம்பழமும், திராட்சையும்

மாம்பழமும், திராட்சையும்

மாம்பழமும், திராட்சையும் எல்லோருக்கும் பிடித்தமான பழங்களாக இருந்தாலும், அவற்றில் உடலுக்கு நல்லதுசெய்யும் நார்ச்சத்து இருந்தாலும், அதையும்விடக் கூடுதலாக, அவற்றில் இருக்கும் குளுக்கோஸ், இரத்தத்தில் சர்க்கரை அளவை கடுமையாக உயர்த்திவிடும்.

பப்பாளியும் வாழைப்பழமும்

பப்பாளியும் வாழைப்பழமும்

பப்பாளியில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் உடலுக்கு நன்மைகள் தந்தாலும், அதிலுள்ள 59 கிராம் சர்க்கரை, டயாபடிஸ்காரர்களுக்கு நன்மைகள்தராது. அதேபோல, வாழைப்பழத்தில் அநேக நன்மைகள் இருந்தாலும், அதிலும் சர்க்கரையளவு அதிகமுள்ளதால், நீரிழிவு பாதிப்புள்ளவர்கள் தவிர்க்கவேண்டிய பழமாகிவிட்டது.

முலாம்பழமும், தர்பூசணி பழமும்

முலாம்பழமும், தர்பூசணி பழமும்

இந்தப்பழங்களில் வைட்டமின் மற்றும் கார்போஹைட்ரேட் நிரம்பி, சுவையில் சிறந்ததாக இருந்தாலும், தர்பூசணியிலும், முலாம்பழத்திலும், கூடுதலாக சர்க்கரை இருப்பதால், இவை, டயாபடிஸ்காரர்கள், உண்ணுவதற்கு ஏற்ற பழமில்லை.

ஆப்ரிகாட் மற்றும் அன்னாசிப்பழம

ஆப்ரிகாட் மற்றும் அன்னாசிப்பழம

ஆப்ரிகாட் மற்றும் அன்னாசியில் வைட்டமின் உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் இருந்தாலும், மிக அதிகமுள்ள சர்க்கரையால், இந்தப்பழங்களை, சர்க்கரை பாதிப்புள்ளவர்கள் சாப்பிடக்கூடாது, என்கிறார்கள்.

ஆயினும், பெர்ரி வகைப்பழங்களை, சர்க்கரை பாதிப்புள்ளவர்கள் சாப்பிடலாம், அதனால், இரத்தத்தில் சர்க்கரை அளவு, ஏறாது என்கிறார்கள், மருத்துவர்கள்.

சீன உணவுகள்

சீன உணவுகள்

ஃப்ரைடு ரைஸ், ஃப்ரைடு நூடுல்ஸ் போன்ற மசாலா நிறைந்த சீன உணவுகளில் அதிக கொழுப்பு, அதிக கார்ப், அதிக சோடியம் மற்றும் அதிக கலோரி இருப்பதால், சர்க்கரை பாதிப்புள்ளவர்களுக்கு, இவை அதிக ஆபத்தை விளைவிக்கும் உணவாகக் கருதப்படுகிறது.

கேக் வகைகள்

கேக் வகைகள்

கேக்களில் அதிகமுள்ள இனிப்பு, 800 கிராம் கலோரி, 120 கிராம் கார்ப் போன்றவை, டயாபடிஸ்காரர்களுக்கு, நல்ல செய்தியல்ல. அவர்கள் கேக்குக்கு மாற்றாக, முஃபின் எனும் அப்பம் போன்ற கேக்கை, தின்னலாம்.

பழச்சாறு

பழச்சாறு

பழச்சாறுகளில் அதிகமுள்ள சர்க்கரையும், கலோரியும், அவற்றை, டயாபடிஸ் உள்ளவர்கள் குடிக்கமுடியாதபடி, செய்துவிடுகின்றன. அவர்கள் இனிப்பு குறைந்த பழச்சாறுகளை குடிக்கலாம். அதன்மூலம், இரத்த சர்க்கரை அளவை சீராகப் பராமரிக்க முடியும்.

கடலைமிட்டாய்

கடலைமிட்டாய்

கடலைமிட்டாய், பாதாம், முந்திரிமிட்டாய், இரத்தத்தில் சர்க்கரை அளவை, அதிகரித்துவிடும். ஆயினும், நிலக்கடலையை, தனியாக தின்பதன்மூலம், இரத்தத்தில் சர்க்கரையளவு கட்டுப்படும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

கார்ன்ஃபிளேக்ஸ்

கார்ன்ஃபிளேக்ஸ்

கார்ன்ஃபிளேக் மற்றும் தானிய ரொட்டிகள், பால் இவற்றில் உள்ள இனிப்புத்தன்மை, இரத்த சர்க்கரையை அதிகப்படுத்திவிடும். மாறாக நவதானிய மாவில் செய்த அடை அல்லது தோசை வகைகளை சாப்பிட, இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவு, கட்டுப்படும்.

உலர்ந்த பழங்கள்

உலர்ந்த பழங்கள்

உலர் திராட்சை, பேரிட்சை போன்ற சர்க்கரை அதிகமுள்ள பழங்களில், பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற உலர் நட்ஸை பாலுடன் கலந்து சாப்பிடும்போது, அது சர்க்கரை மற்றும் கலோரி அதிகமுள்ள தீனியாக மாறிவிடுகிறது. இவற்றை சாப்பிட்டால், இரத்த சர்க்கரை அளவு அதிகரித்து, உடல்நலம் பாதிப்படையும்.

உணவைத் தீர்மானிப்பது.

உடலுக்கு நன்மை தரும் உணவுகளை, நீரிழிவுகாரர்கள் அறிந்து, அதனை முறையாக சாப்பிட்டு வருவதன் மூலம், சர்க்கரை அளவை, கட்டுப்பாட்டில் வைக்கமுடியும். மேலும், ஒவ்வொரு உணவிலும் உள்ள கார்போஹைட்ரேட், கொழுப்பு, சோடியம் மற்றும் கலோரி அளவுகளை அறிந்திருப்பதன் மூலம், அவற்றை சாப்பிலாமா, வேண்டாமா, என்பதை, தாங்களே தீர்மானித்துக் கொள்ளமுடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

foods to avoid for diabetes

Importantly, eating the wrong foods can raise your blood sugar and insulin levels and promote inflammation, which may increase your risk of disease
Story first published: Friday, April 6, 2018, 18:00 [IST]