சர்க்கரை நோயாளிகள் தக்காளியை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாமா?

Posted By:
Subscribe to Boldsky

இன்றைக்கு சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம். அதைவிட இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. இது சர்க்கரை நோயுடன் இன்னபிற உபாதைகளையும் அழைத்து வருவதால் சர்க்கரை என்று ஆரம்பித்தாலே பலருக்கும் பயம் தொற்றிக் கொள்கிறது.

அதைவிட சர்க்கரை நோய் வந்தால் போகும் அல்லது குணமாகும் நோயல்ல தொடர்ந்து சர்க்கரையை நம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும்.சர்க்கரையை நேரடியாக சாப்பிட்டால் தான் என்றல்ல,

நீங்கள் சாப்பிடும் ஒவ்வொரு உணவுப் பொருளிலும் சர்க்கரை இருக்கிறது என்று வேறு பீதியைக் கிளப்பி விட, எந்த உணவைப் பார்த்தாலும் இதைச் சாப்பிடலாமா? இதைச் சாப்பிட்டால் சர்க்கரை அளவு அதிகரிக்குமா என்ற கேள்வி நம்மை குடைந்து கொண்டேயிருக்கிறது.

Does Sugar Patient Consume Tomato?

நம் வீடுகளில் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று தக்காளி. தக்காளியில் சர்க்கரை இருக்கும் தானே.... அதனை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா? என்பது குறித்து என்றாவது யோசித்திருக்கிறீர்களா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தக்காளியில் :

தக்காளியில் :

தக்காளிப் பழத்தில் இல்லாத சத்துக்களே இல்லை எனலாம். இதில் வைட்டமின் ஏ, பி, சி, கே, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் புரதச்சத்து நிரம்பியிருக்கிறது.

கண்களுக்கு மிகவும் நல்லதான வைட்டமின் ஏ சத்தினை அதிக உணவுகளில் பெற முடியாது. அதேபோல் வைட்டமின் கே சத்தும் அரிதான ஒன்று. இந்த வைட்டமின் இரத்தக் கசிவுகளை கட்டுப்படுத்த உதவுகிறது.

தனித்துவம் :

தனித்துவம் :

இப்பழத்தின் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், தனியே சாப்பிட்டாலும், சமையலுக்கு பயன்படுத்தி சாப்பிட்டாலும் அதன் சத்து குறைவதே இல்லை.இப்பழத்தை வேக வைக்காமல் பச்சையாகவும் சாப்பிடலாம், சாறுபிழிந்தும் பருகலாம். நல்ல பலனைத் தரும்.தக்காளியில் பல வகைகள் உண்டு

கார்ப்ஸ் மற்றும் சர்க்கரை :

கார்ப்ஸ் மற்றும் சர்க்கரை :

ஒரு கப் அளவு தக்காளி பழத்தை சாப்பிடுவதால் நமக்கு 32 கலோரி கிடைக்கிறது. இவற்றில் 88 சதவீத கலோரி ஏழு கிராம் கார்போஹைட்ரேட்டிலிருந்தும் இவற்றில் கிட்டதட்ட 68 சதவீத கார்போஹைட்ரேட் 4.75 கிராம் சர்க்கரையிலிருந்து கிடைக்கின்றன.

ஏன் முக்கியம்? :

ஏன் முக்கியம்? :

உணவில் சர்க்கரை அளவு சரி பார்க்கும் போது கார்போஹைட்ரேட் அளவு சரிபாக்க வேண்டியது மிகவும் அவசியம். கார்போஹைட்ரேட் செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது. இது சர்க்கரையில் உள்ள குளுக்கோஸை உடைக்கும் வேலையைச் செய்கிறது.

நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் எனர்ஜி என்பது மிகவும் அவசியமான ஒன்று.

எவ்வளவு எடுக்கலாம்? :

எவ்வளவு எடுக்கலாம்? :

ஒரு நாளைக்கு சராசரியாக நீங்கள்1500 கலோரி வரை எடுத்துக் கொண்டால் போதுமானது. நீங்கள் சாப்பிடும் உணவுகள், ஸ்நாக்ஸ் எல்லாமே இதில் அடக்கம் என்பதை மறக்க வேண்டாம்.

ஒரு கிராம் கார்போஹைட்ரேட்டில் 4 கலோரி கிடைக்கும். அப்படியென்றால் நீங்கள் 600லிருந்து 900 கிராம் அளவு கார்போஹைட்ரேட் எடுக்கலாம். அன்றைக்கு கூடுதலாக ஏதேனும் இனிப்பு பண்டங்கள் சாப்பிட நேரந்தால் இந்த அளவை குறைத்துக் கொள்வது நலம்.

நார்ச்சத்து :

நார்ச்சத்து :

தக்காளியில் நார்ச்சத்து அதிகம். நீங்கள் சாப்பிடும் உணவு முறையாக செரிப்பதற்கு நார்ச்சத்து மிகவும் அவசியமான ஒன்றாகும்.

அதே நேரத்தில் கார்போஹைட்ரேட் செய்வது போல குளோக்கோஸ் பிரிக்கும் வேலையை ஃபைபர் செய்வதில்லை. ஆயிரம் கலோரிக்கு பதினான்கு கிராம் ஃபைபர் இருக்க வேண்டியது அவசியம்.

சர்க்கரை :

சர்க்கரை :

தக்காளி இனிப்புச் சுவை கொடுத்தாலும் இது சர்க்கரை அதிகமிருக்கும் உணவுப்பொருள் கிடையாது. சாதரணமாக ஒரு கப் தக்காளியில் முப்பது கலோரி, ஏழு கிராம் கார்ப்ஸ்,நாலு கிராம் சர்க்கரை மற்றும் இரண்டு கிராம் ஃபைபர் இருக்கிறது.

ஒரு கப் தக்காளியை நீங்கள் எடுத்துக்கொள்வதால் ஒரு ஸ்பூன் சர்க்கரை எடுத்துக் கொள்வதற்குச் சமம்.

ஒப்பீடு :

ஒப்பீடு :

ஒரு நாளைக்கு காலையில் இட்லிக்குத் தொட்டுக்கொள்ள சட்னியில் ஆரம்பித்து, மதியம்,இரவு என எல்லா நேர உணவுகளில் தக்காளி அவசியம் இடம் பெறும்.

ஒரு சில உணவுகளைத் தவிர்த்து... ஒரு கப் அளவு ஒரு ஸ்பூன் சர்க்கரைக்குச் சமம் என்றால் ஒரு நாளைக்கு தக்காளி மூலமாக மட்டுமே உங்கள் உடலில் எவ்வளவு சர்க்கரை கிடைக்கிறது என்று பாருங்கள்.

செயற்கை சுவையூட்டி :

செயற்கை சுவையூட்டி :

இயற்கையான இனிப்பூட்டிக்கும், செயற்கைக்கும் இருக்கிற வித்யாசங்களில் முதன்மையானது அதில் இருந்து நமக்கு கிடைக்கும் நியூட்ரிசியன் வேல்யூ தான்.

தக்காளியில் இயற்கையான சர்க்கரையே இருக்கிறது, இதனால் இது உடலுக்கு ஆரோக்கியமானது தான்.

 தக்காளியின் செரிமானத்திற்கு :

தக்காளியின் செரிமானத்திற்கு :

தக்காளியில் சர்க்கரை இருக்கும் அதே நேரத்தில் நார்ச்சத்தும் இருக்கிறது. இது தக்காளியை எளிதில் ஜீரணமாக்க வைக்கிறது. அத்துடன் உங்களுக்கு எனர்ஜியும் கிடைத்திடும். நேரடியான இனிப்பு பண்டங்களிலிருந்து கிடைக்கும் சர்க்கரையை விட இது ஆரோக்கியமானது. அவை நம் ரத்தச் சர்க்கரையளவை உயர்த்துவது போல தக்காளி செய்வதில்லை.

 குறைவான கலோரி :

குறைவான கலோரி :

பூவாகி, காயாகி கனியாகும் தன்மை, அத்துடன் அதிலிருக்கும் விதைகள் இவை மட்டுமே தான் தக்காளியை பழங்கள் பட்டியலில் சேர்க்க காரணம். ஆனால் இதனை சில நேரங்களில் காய்கறிகளின் பட்டியலில் சேர்கிறோமே ஏன் என்று யோசித்திருக்கிறீர்களா?

தக்காளியிலிருந்து நமக்கு மிகக் குறைவான கலோரி கிடைப்பது தான். அதோடு இதில் குறைவான கார்போஹைட்ரேட் கிடைக்கிறது. பெரும்பாலும் காய்கறிகளிலிருந்து தான் இப்படியான சத்துக்கள் நமக்கு கிடைக்கும்.

கெட்சப் :

கெட்சப் :

இன்றைக்கு டொமேட்டே கெட்ச்சப் பயன்பாடு மிகவும் சர்வ சாதரணமாகிவிட்டது. பொதுவாக தக்காளியிலிருந்து நம்ம குறைவான சர்க்கரையை கிடைக்கும்.

இதே நீங்கள் டொமேட்டோ சாஸ்,கெட்ச்சப்,ஜூஸ் என்று வெவ்வேறு வடிவங்களில் சேர்க்கும் போது அதில் சேர்க்கப்படும் கூடுதல் பொருட்களால் சர்க்கரை அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

இவற்றை நீங்கள் பாக்கெட் உணவாக வாங்கி பயன்படுத்தும் போது, அதில் சேர்க்கப்பட்டிருக்கும் பட்டியலை ஒரு முறை சரிபார்த்திடுங்கள்.

சர்க்கரை நோயாளிகளே...

சர்க்கரை நோயாளிகளே...

நீங்கள் தாரளமாக தக்காளியை உங்கள் உணவில் சேர்க்கலாம். இதிலிருந்து கிடைக்ககூடிய சர்க்கரையின் அளவை விட பிறச் சத்துக்களின் எண்ணிக்கை தான் அதிகம்.

இதனைச் செய்யாதீர்கள் :

இதனைச் செய்யாதீர்கள் :

தக்காளி இனிப்பு சுவையுடன் லேசான புளிப்புச் சுவையையும் கொண்டிருக்கும். அதனால் சுவையை அதிகரிக்கிறேன் என்று சொல்லி நீங்கள் சேர்க்ககூடிய கூடுதல் பொருட்களால் ரத்தச் சர்க்கரையளவு அதிகரிக்கலாம்.

தக்காளியை ஜூஸாக எடுத்துக் குடிப்பதை முடிந்தளவு தவிர்க்கவும், ஏனென்றால் இதில் கூடுதல் இனிப்பிற்காக செயற்கையான சுவையூட்டிகள் சேர்க்கப்படும். தக்காளி சூப் குடிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Does Sugar Patient Consume Tomato?

Does Sugar Patient Consume Tomato?
Story first published: Thursday, December 7, 2017, 13:00 [IST]