சர்க்கரை நோயா? அதை வீட்டிலேயே கட்டுப்படுத்த இதோ சில வழிகள்...!

Posted By:
Subscribe to Boldsky

சர்க்கரை நோய் என்பது மிகவும் வேகமாக பரவி வரும் வாழ்நாள் முழுவதும் அவஸ்தைப்படக்கூடிய ஒரு கோளாறாகும். இதை வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களில் சிறு மாற்றங்களின் மூலம் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியும்.

World Diabetes Day: Home Remedies For Diabetes That Really Work!

சர்க்கரை நோய் என்பது ஒரு நோயல்ல குறைபாடாகும். அதுவும் உடலில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த இயற்கையாக கணையம் இன்சுலினை சுரக்கும். இந்த கணையத்தின் செயல்பாடு பாதிக்கப்படும் போது, உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இதைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்து மாத்திரைகளை அன்றாடம் எடுக்க வேண்டியிருக்கும்.

ஆனால் இந்த சர்க்கரை நோயை வீட்டிலேயே கட்டுப்படுத்த முடியும். இன்று உலக சர்க்கரை நோய் தினம் என்பதால், தமிழ் போல்ட் ஸ்கை சர்க்கரை நோயை வீட்டிலேயே எப்படி கட்டுப்படுத்துவது என்று கொடுத்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
துளசி

துளசி

தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சிறிது துளசி இலைகளை வாயில் போட்டு மென்று சாப்பிட, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.

ஆளி விதை (Flax seeds)

ஆளி விதை (Flax seeds)

1 டேபிள் ஸ்பூன் ஆளி விதைப் பொடியை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படும்.

பட்டை

பட்டை

சர்க்கரை நோய் உள்ளவர்கள், தினமும் 1/2 டீஸ்பூன் பட்டைப் பொடியை உணவில் சேர்த்து வர, சர்க்கரை அளவு குறைவதோடு, உடல் எடை கட்டுப்பாட்டுடன் இருந்து, இதய நோய்க்கான அபாயம் குறையும்.

க்ரீன் டீ

க்ரீன் டீ

க்ரீன் டீயும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். இதற்கு அதில் உள்ள சக்தி வாய்ந்த பாலிஃபீனால்கள் தான் காரணம். எனவே காலையில் எழுந்ததும் அல்லது உணவு உண்பதற்கு முன் ஒரு கப் க்ரீன் டீ குடியுங்கள்.

முருங்கை இலைகள்

முருங்கை இலைகள்

சிறிது முருங்கை இலைகளை அரைத்து சாறு எடுத்து, காலையில் வெறும் வயிற்றில் தினமும் குடித்து வர, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

பாகற்காய்

பாகற்காய்

சர்க்கரை நோய் இருப்பவர்கள், வாரத்திற்கு ஒருமுறை பாகற்காயை சமைத்து சாப்பிடுவது நல்லது. இன்னும் வேகமான பலன் கிடைக்க, மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஒரு டம்ளர் பாகற்காய் ஜூஸை வெறும் வயிற்றில் குடியுங்கள்.

வேப்பிலை

வேப்பிலை

கொளுந்து வேப்பிலையை அரைத்து சாறு எடுத்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், இரத்த சர்க்கரை அளவு சட்டென்று குறைந்து, கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

நாவல் பழம்

நாவல் பழம்

தினமும் காலையில் 5-6 நாவல் பழங்களை சாப்பிட, இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். வேண்டுமானால், நாவல் பழத்தை விதைகளை உலர்த்தி பொடி செய்து, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, தினமும் காலையில் குடித்து வந்தாலும், சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

World Diabetes Day: Home Remedies For Diabetes That Really Work!

Suffering from diabetes? Here are some handy tips that can help keep that sugar level down.
Subscribe Newsletter