Latest Updates
-
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாஞ்சில் புளிக்குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும்
சர்க்கரை நோயை மூன்றே வழிகளில் கட்டுப்படுத்த மாவிலையை எப்படி பயன்படுத்தலாம்?
சர்க்கரை நோய்க்கு இன்றளவும் நிரந்தர தீர்வு இல்லை. அதிலும், ஆங்கில மருந்துகள் பக்கவிளைவுகள் தரும் மருத்துவமாக தான் இருக்கின்றன. இதற்கு தீர்வளிக்கும் மாவிலையின் நன்மைகள் நிறைய இருக்கின்றன.
மாவிலை என்றாலே திருவிழா மற்றும் பண்டிகை நாட்களில் நாம் வீட்டையும், ரோட்டையும் அலங்கரிக்க பயன்படுத்தும் ஒரு பொருளாக தான் நாம் பார்த்து வருகிறோம். ஆனால், மாவிலையில் பல ஆரோக்கிய நன்மைகளும் இருக்கின்றன.

முக்கியமாக மாவிலையில் சர்க்கரை நோயை கட்டுபடுத்தும் முக்கிய காம்பவுண்டுகள் இருக்கின்றன. இது நீரிழிவுக்கு ஒரு அருமருந்தாக பார்க்கப்படுகிறது...

நன்மைகள்!
காஃபிக் அமிலம் - சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.
மங்கிஃபெரின் - கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவை குறைக்க உதவுகிறது.
ஃபிளாவனாய்டுகள் - டைப் 2 நீரிழிவு ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. மேலும் இதய நோய்கள் உண்டாகாமல் தடுக்கிறது.
காலிக் அமிலம் - மாரடைப்பு மற்றும் டைப் 1 நீரிழிவு ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.

இரத்த சர்க்கரை அளவு!
மாவிலை இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, இரத்தத்தில் அதிக சர்க்கரை சேராமல் இருக்க பயனளிக்கிறது. இதனால், நீரிழிவை எளிதாக கட்டுபடுத்த முடியும்.

கொலஸ்ட்ரால்!
அதிக கொலஸ்ட்ரால் உங்கள் இதயத்தை பாதிக்கும். மாவிலையில் இருக்கும் பெக்டின், வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது.

பார்வை குறைபாடு!
ரெட்டினோபதி என்பது கண்பார்வை இழப்பு உண்டாக்கும் கோளாறு ஆகும். கட்டுப்படுத்தாத இரத்த சர்க்கரை அளவு இருந்தால் ரெட்டினோபதி உண்டாகும். மாவிலையில் இருக்கும் வைட்டமின் எ நல்ல கண் ஆரோக்கியத்தை அளிக்கிறது.

எப்படி பயன்படுத்த வேண்டும்?
* கொதிக்கும் நீரில் 10 - 15 மாவிலைகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.
* இரவு முழுவதும் அதை குளுமை அடைய செய்யுங்கள்.
* காலையில் அதை மாவிலை டீயாக காலை உணவருந்தும் முன்னர் குடித்து வாருங்கள்.
* இதை இரண்டு மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்து வாருங்கள்.
இதன் நல்ல விளைவு தெரிய / வெளிப்பட சிறிது காலம் பிடிக்கும். எனவே, சற்று பொறுமையுடன் இதை பின்பற்றி வந்தால், சர்க்கரை நோயில் இருந்து நல்ல தீர்வுக் கானம் முடியும்.



Click it and Unblock the Notifications
