கோக் போன்ற சோடா பானங்களை பருகுவதால் உடல் உறுப்புகளுக்கு ஏற்படும் அபாயம்!!!

Posted By:
Subscribe to Boldsky

வெளியிடங்களுக்கு சென்றால், வீட்டு விசேசங்கள், விருந்தினர் வரும் பொழுது என இளநீர், தண்ணீர் தந்து வரவேற்ற வழக்கம் மறைந்து, கோக், பெப்சி போன்ற சோடா குளிர் பானங்கள் கொடுத்து வரவேற்கும் பழக்கம் வந்துவிட்டது. இன்றைய தலைமுறை மத்தியில் உடல்பருமன், இதயநலன், நீரிழிவு அதிகரித்து வருவதை கண்டு அதிர்ச்சி அடையும் நமக்கு, இந்த மாற்றம் தான் இதற்கான காரணம் என அறியாமல் போய்விட்டது.

சமீபக் காலமாக உலகம் முழுவதும் சோடா பானங்களை பருக வேண்டாம் என பல மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரித்து வருகிறார்கள். இந்தியா நீரிழிவு பாதிப்பில் அசுர வேகத்தில் முன்னேறி வருகிறது. இதில் இருந்து விடுபட வேண்டும் எனில், கோக் போன்ற சோடா பானங்களை பருகுவதை கைவிட வேண்டும். இனி, கோக் போன்ற சோடா பானங்களை பருகுவதால் உடல் உறுப்புகளுக்கு ஏற்படும் அபாயம் பற்றி பார்க்கலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உள்ளுறுப்பு கொழுப்பு

உள்ளுறுப்பு கொழுப்பு

இத்தனை நாட்கள் கோக் போன்ற சோடா பானங்கள் பருகுவதால் வயிற்றில் கொழுப்பு சேர்ந்து தொப்பை வருகிறது என்று தான் எண்ணி வந்தனர். ஆனால், சமீபத்திய ஆய்வில், உள்ளுறுப்புகளிலும் கொழுப்பு சேர்ந்து உடலு உறுப்புகளுக்கு அபாயமாக இது அமைகிறது என நியூயார்க் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பாதிப்படையும் உள்ளுறுப்புகள்

பாதிப்படையும் உள்ளுறுப்புகள்

கோக் போன்ற சோடா பானங்கள் பருகுவதால், கல்லீரல், கணையம் மற்றும் குடல் போன்ற உள்ளுறுப்புகள் வெகுவாக பாதிக்கப் படுகின்றன. இதனால் தான் பெரும்பாலான உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

அதிகரிக்கும் அபாயங்கள்

அதிகரிக்கும் அபாயங்கள்

உள்ளுறுப்பு கொழுப்பு அதிகமாவதால் தான் டைப் 2 நீரிழிவு மற்றும் இதயநலக் கோளாறுகள் போன்ற பாதிப்புகள் அதிகம் ஏற்படுகின்றது எனவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளானர்.

இன்சுலின்

இன்சுலின்

கோக் போன்ற குளிர் பானங்களை அன்றாடம் பருகுவதால் தான் இன்சுலின் குறைபாடு ஏற்படுகிறது. மேலும் இதனால் தான் நடுவயதிலேயே பலருக்கு நீரிழிவு நோய் அபாயம் ஏற்படுகிறது எனவும் அமெரிக்க தேசிய உடல்நல நிறுவனம் அறிவித்துள்ளது.

நடுவயதினர் அச்சம்

நடுவயதினர் அச்சம்

கோக் போன்ற சோடா பானங்களை பருகுவதால் நடுவயது மக்கள் தான் பெருமளவு பாதிக்கப் படுகிறார்கள். இதில் சேர்க்கப்படும் செயற்கை இனிப்பூட்டிகள் தான் இதற்கான முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

ஆய்வு

ஆய்வு

அமெரிக்க உடல்நல நிறுவனம் நடத்திய ஆய்வில் 1003 பேர் பங்கெடுத்துக் கொண்டனர். இவர்கள் அனைவரும் சராசரியாக 45 வயதுடைய நபர்கள் ஆவார்கள்.

நான்கு பிரிவுகள்

நான்கு பிரிவுகள்

எப்போதும் குடிக்காதவர்கள், எப்போதாவது குடிப்பவர்கள், அவ்வப்போது குடிப்பவர்கள், தினமும் ஒருமுறையாவது குடிப்பவர்கள் என நான்கு பிரிவாக ஆய்வில் பங்கெடுத்தவர்களை பிரித்தனர்.

அபாயம்

அபாயம்

இதில் அவ்வப்போதும், தினமும் கோக் போன்ற சோடா பானங்களை பருகும் நபர்கள் மத்தியில் உள்ளுறுப்புகளில் அதிகமான அளவு கொழுப்பு சேர்ந்து உடல்நல அபாயத்தை அதிகளவு ஏற்படுவதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இவர்களிடம் ஆறாண்டுகள் தொடர்சியாக ஆய்வு நடத்தி ஆய்வறிக்கையை வெளியிட்டனர்.

அமெரிக்க இதயநல பத்திரிக்கை

அமெரிக்க இதயநல பத்திரிக்கை

இந்த ஆய்வறிக்கை அமெரிக்க இதயநல பத்திரிக்கையில் (American heart association journal) வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Coke And Soda Drinks Can Up Dangerous Deep Fat

In recent study researches found that, middle age adults affects a lot because of drinking coke and soda drinks. It affects their individual organs.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter