இந்தியாவை அச்சுறுத்தும் சர்க்கரை வியாதி வராமல் இருக்க முன்னெச்சரிகை வழி என்ன?

Written By:
Subscribe to Boldsky

சர்க்கரை வியாதியால் இந்தியாவில் 50 % இறப்பு அதிகரித்துள்ளது என்பது அதிர்ச்சியான விஷயம்.

மக்கள் தொகைப் போலவே சர்க்கரைவியாதியிலும் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா உலகளவில் இரண்டாவது இடம் பெற்றுள்ளது.

50% death rate increased by diabetes in India

69 மில்லியன் மக்கள் இந்தியாவில் சர்க்கரைவியாதியால் பாதிக்க்ப்படுகிறார்கள். இதில் 36 மில்லியன் மக்கள் இன்னும் பரிசோதனைகுட்படாமல் இருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இதய நோய்க்கு அடுத்தபடியாக :

இதய நோய்க்கு அடுத்தபடியாக :

இதய நோயால்தான் இந்தியாவில் அதிக மக்கள் இறக்கிறார்கள். சர்க்கரைவியாதினால் 50 % மக்கள் இறக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து நுரையீரல் மற்றும் காச நோயால் இறக்கிறார்கள்

2015ல் இறப்பு விகிதம் :

2015ல் இறப்பு விகிதம் :

2015ல் சர்க்கரைவியாதியால் 346,000 இறந்துள்ளனர் என்று குளோபல் பர்டன் டிஸீஸ் (GBD) என்ற உலக சுகாதார அமைப்பு கூறியிருக்கிறது.

1995ல் 2.7 சதவீதம் இருந்த சர்க்கரைவியாதி இறப்பு 2015ல் 3.3 சத்வீதமாக உயர்ந்துள்ளது.

சர்வே :

சர்வே :

100000 மக்களில் ஏறக்குறைய 26 பேர் சர்க்கரை வியாதியால் இறக்கிறார்களாம். சர்க்கரை வியாதி மரபு ரீதியாகவும், வாழ்க்கை முறையினாலும் இந்திய மக்களுக்கு வருகிறது .

எச்சரிக்கை :

எச்சரிக்கை :

சர்க்கரை வியாதி என்பது ஒரு நாள்பட்ட வியாதி, கணையம் இதனால் பாதிக்கப்படுகிறது என்பதொடு நிறுத்தாமல் மொத்த உடலையும் பாதிக்கிறது. வாழ் நாளை குறைக்கிறது என எச்சரிக்கை மணியை அடித்துள்ளது GBD.

சர்க்கரை வியாதியினால் வரும் விளைவுகள் :

சர்க்கரை வியாதியினால் வரும் விளைவுகள் :

சர்க்கரை வியாதி பல நோய்களுக்கு வழிவகுக்கிறது.இதய நோய், சிறு நீரக செயலிழப்பு, கண் பார்வை குறைதல், நரம்பு சிதைவு என பல ஆபத்தான நோய்களை தருகிறது.

இதில் மற்ற நாடுகளில் 60 வயதிற்கு பிறகுதான் சர்க்கரை வியாதி ஏற்படுகிறது. ஆனால் இந்தியாவில் 40 வயதுகளில் தொடங்குகிறது.

எனவே இந்தியா விழிப்புணவோடு செயல்பட வெண்டும் என்று உலக சுகாதார மையங்கள் அறிவுறுத்துகின்றன.

இதற்கு தீர்வு :

இதற்கு தீர்வு :

நிச்சயம் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டால் சர்க்கரை வியாதியை தடுக்கலாம். மரபு ரீதியாக பெற்றோருக்கு இருந்தால், அவர்களின் பிள்ளைகள் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும்.

நிறைய காய் மற்றும் பழங்கள், ப்யிற்சி நிறைய நீர் அருந்துதல் என ஒழுங்கான வாழ்க்கை முறையை வாழ்ந்தால் சர்க்கரைவியாதி வராமல் உங்கள் ஆயுளை நீட்டிக்கலாம் என்று சொல்கிறார்கள் வல்லுநர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

50% death rate increased by diabetes in India

In India 50 % death rate is increased due to Diabetes over 11 years and this disease may not only affect pancreas also entire body
Story first published: Friday, October 14, 2016, 14:40 [IST]
Subscribe Newsletter