நீரிழிவு நோயாளிகள் கார்ன் ப்ளேக்ஸ் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா?

Posted By:
Subscribe to Boldsky

நீரிழிவு என்பது ஒரு நோயல்ல; அது ஒரு பற்றாக்குறை. உடலில் இரத்த சர்க்கரையின் அளவு அதிகமாகி, இன்சுலின் அளவு குறைந்திருப்பதைத் தான் நீரிழிவு அல்லது சர்க்கரை நோய் என்று கூறுகின்றனர். நீரிழிவு இருந்தால், உண்ணும் உணவில் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆகவே உணவில் கட்டுப்பாட்டுடன் இருக்கிறேன் என்று, காலையில் ஒரு பௌல் கார்ன் ப்ளேக்ஸ் சாப்பிடுபவரா நீங்கள்?

அப்படியெனில் இந்த கார்ன் ப்ளேக்ஸை சாப்பிடுவது நல்லதா, கெட்டதா என்று யோசிக்க வேண்டும். என்ன தான் கார்ன் ப்ளேக்ஸ் சோளத்தைக் கொண்டு செய்யப்பட்டாலும், அதில் செயற்கை சுவையூட்டிகள் மற்றும் க்ளைசீமிக் இன்டெக்ஸ் அதிக அளவில் உள்ளது. இதனால் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்து, நீரிழிவு தீவிரமடையவும் வாய்ப்புள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
க்ளைசீமிக் இன்டெக்ஸ்

க்ளைசீமிக் இன்டெக்ஸ்

எப்படி கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்த உணவுகள் இரத்த சர்க்கரை அளவை உடனே உயர்த்துகிறதோ, அதேப்போல் கார்ன் ப்ளேக்ஸில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவு 83 ஆக உள்ளது. இவை இரத்த சர்க்கரை அளவை ஒரே நேரத்தில் அதிகமாக உயர்த்தும். எனவே நீரிழிவு நோயாளிகள் இதனை உட்கொள்ளும் முன் சிந்திக்க வேண்டும்.

புரோட்டீன் குறைவு

புரோட்டீன் குறைவு

கார்ன் ப்ளேக்ஸில் புரோட்டீன் குறைவாக உள்ளது. அதனால் தான் இதனை உட்கொண்ட பின்னரும் பசி உணர்வு இருக்கும். பின் உணவில் கட்டுப்பாடின்றி, கண்ட உணவுகளை உட்கொண்டு, நீரிழிவின் தீவிரத்தை சந்திக்க நேரிடும்.

குறைவான நார்ச்சத்து

குறைவான நார்ச்சத்து

இரத்த சர்க்கரையின் அளவை நார்ச்சத்துள்ள உணவுகள் கட்டுப்படுத்தும் மற்றும் இதய பிரச்சனைகள் ஏதும் நேராமல் பாதுகாக்கும். ஆனால் கார்ன் ப்ளேக்ஸில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால், இதனை உட்கொண்டு வருவதால் எவ்வித நன்மையும் விளையப் போவதில்லை.

உடல் பருமன்

உடல் பருமன்

கார்ன் ப்ளேக்ஸில் கொழுப்பு குறைவாக இருந்தாலும், கொழுப்பை உடலில் தேக்கும். மேலும் இதில் ஃபுருக்டோஸ் கார்ன் சிரப் அதிகம் உள்ளது. இத்தகைய கார்ன் ப்ளேக்ஸை பால் மற்றும் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து சாப்பிடும் போது, பாலில் உள்ள கொழுப்புக்கள் உடலில் தங்கி, உடல் பருமனை அதிகரித்து, இரத்த சர்க்கரை அளவில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி, வாழ்நாளின் அளவைக் குறைத்துவிடும்.

அதிகப்படியான சோடியம்

அதிகப்படியான சோடியம்

கார்ன் ப்ளேக்ஸில் சோடியம் உள்ளது. ஆய்வுகளில் ஒரு கப் கார்ன் ப்ளேக்ஸில் 1 பாக்கெட் உருளைக்கிழங்கு சிப்ஸில் உள்ளதை விட அதிகமாக சோடியம் நிறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால் இரத்த அழுத்தம் அதிகரித்து, இதய நோயால் பாதிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Is Corn Flakes Good For Diabetics?

There are several doubts if corn flakes is good for diabetes. In this article we tel you if corn flakes are good for diabtes or not. Take a look.
Story first published: Tuesday, June 9, 2015, 17:41 [IST]
Subscribe Newsletter