Latest Updates
-
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
நீரிழிவு நோயை பற்றிய 10 வதந்திகள்!!!
சமீபத்திய ஆராய்ச்சி முடிவின் படி, இந்தியாவில் 61 மில்லியன் மக்களும், அமெரிக்காவில் 24 மில்லியன் மக்களும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது. ஆனால் இந்த நோய் பல மக்களை விழுங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலைக்கு பல்லாயிரக்கணக்கான புனைக் கதைகள் கூறப்படுகின்றன. இந்த நோயை பற்றி அறிந்த படித்த மக்கள் கூட இந்த பழங்கதைகளை கண்மூடித்தனமாக நம்புகின்றனர். அந்த புனைக்கதைகளில் பெரும்பாலும், நீரிழிவு நோயை பற்றியும், அதற்கான உணவு முறைகளை பற்றியும் தவறான கருத்துகளே கூறப்பட்டுள்ளன.
இதுப்போன்று சுவாரஸ்யமானவை: நீரிழிவை வெற்றி கொள்ள சில அற்புதமான வழிகள்!!!
நீங்களும் அதில் ஒருவராக இருப்பின், கீழே குறிப்பிடப்பட்ட 10 புனைக்கதைகளின் மூலம், விவரிக்கப்படும் நீரிழிவு நோயைப் பற்றிய உண்மை நிலையை எளிதில் புரிந்து கொள்ளலாம். நீரிழிவு நோயை பற்றியும், அதற்கான வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறையைப் பற்றியும் உலவி வரும் தவறான கருத்துகளில் மிகவும் பிரபலமான ஒன்று, நீரிழிவு நோயாளிகள் இனிப்பை தவிர்ப்பது ஆகும். எந்த வகையான உணவுகளை உண்பது நல்லது என கேட்கிறீர்களா? நல்லது, நீங்கள் எப்போது நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகிறீகளோ, அப்போதிலிருந்து கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை குறைக்க வேண்டும்.
உடனே கார்போஹைட்ரேட் உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டியதில்லை. சரிவிகித உணவை மேற்கொள்ள வேண்டும். அந்த சரிவிகித உணவில் கார்போஹைட்ரேட் ஒரு பகுதியாக இடம் பெற வேண்டும். உங்களுக்கு தேவையான சரிவிகித உணவில், கார்போஹைட்ரேட் உணவுகளை நடுநிலைமையோடு உட்கொள்ளலாம். நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவில் உள்ள கார்போஹைட்ரேட் அளவை தெரிந்து கொள்ள வேண்டும். இங்கே பட்டியலிடப்பட்டுள்ள நீரிழிவு நோயை பற்றிய புனைக்கதைகளின் மூலம் நீங்கள் நீரிழிவு நோயைப் பற்றிய உண்மைகளை புரிந்து கொள்ளலாம்.

அதிக எடை உள்ளவர்களே நீரிழிவு நோயாளிகள்
அதிக எடை உள்ளவர்களுக்கே நீரிழிவு நோய் வரும் என பெரும்பாலும் நம்பப்படுகிறது. ஆனால் உண்மை என்னவென்றால்,இன்சுலின் குறைவால், உடல் பருமனான மக்களுக்கு நீரிழிவு நோய் வருகிறது. ஆனால் உடல் பருமனான அனைவருக்கும் நீரிழிவு நோய் வரும் என்பது இல்லை. ஒல்லியான மக்கள் கூட, சில நேரங்களில் சிகிச்சை எடுத்து கொண்டிருப்பார்.

பழங்களை தவிர்க்கவும்
நீரிழிவு நோயைப் பற்றி பலவிதமான வதந்திகள் உலவினாலும், அதில் மிகவும் முக்கியமானது; பழங்களில் கார்போஹைட்ரேட் அதிகமாக இருப்பதால் அதை தவிர்க்க வேண்டும் என்பதே ஆகும். பொதுவாக இஇரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவதும், கூடுவதும் க்ளைசீமிக் இன்டெக்ஸின் அளவை பொறுத்தது. பழங்களில் குறைந்த அளவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அடங்கி உள்ளது. இதன் மூலம் நீரிழிவு நோயைப் பற்றி அறியலாம்.

அதிக அளவிலான கடின உழைப்பு கூடாது
நீரிழிவு நோயை பற்றியான வதந்திகளில், இதுவும் முக்கியமான ஒன்று. ஆனால் இது உண்மையல்ல. அதிக அளவில் உடற்பயிற்சிகளை மேற்கொண்டால், காற்றில்லா நிலை ஏற்பட்டு இரத்தத்தில் சக்கரையின் அளவு அதிகரிக்கும். இதனால் உடற்பயிற்சி செய்யும் போது, இதயத்துடிப்பை அளக்கும் மானிட்டரை அணிந்து கொண்டு, அதன் அளவை பரிசோதித்துக் கொண்டு, உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

உடற்பயிற்சி செய்யக்கூடாது
நீரிழிவு நோய் மற்றும் அதற்கான உணவு முறைகள் பற்றிய வதந்திகளில் இதுவும் ஒன்று. ஆனால் உண்மையில் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஏரோபிக் செய்வதன் மூலம், உடலை கட்டுடன் வைப்பதோடு, எடையையும் குறைக்கலாம். மேலும் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் கட்டுபாட்டோடு வைக்க முடியும்.

சர்க்கரை இல்லாத உணவுகள்
உங்களுக்கு சர்க்கரை இருந்தால் நீங்கள் இனிப்பு இல்லாத அல்லது இனிப்பின் அளவு குறைவாக உள்ள பிஸ்கட், குக்கீஸ் மற்றும் ஸ்வீட்ஸ் போன்றவற்றை உட்கொள்வீர். இதுவும் நீரிழிவுக்கு எதிரான 10 வதந்திகளில் அனைவரும் நம்பக்கூடிய ஒன்று. ஆனால் இது உண்மையல்ல. அந்த உணவுகளில் இனிப்பு இல்லாமல் இருக்குமே தவிர, கார்போஹைட்ரேட் அளவு இல்லாமல் போகாது. ஒரு வேளை, அந்த உணவில் கார்போஹைட்ரேட் அதிக அளவில் இருந்தால், இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.

இன்சுலின் ஊசிகள் அவசியம்
நீரிழிவு நோய்க்கு இன்சுலின் ஊசிகள் அவசியம் என வதந்திகள் உள்ளன. ஆனால் இந்த வதந்தியில், ஒரு வகை உண்மை உண்டு. போதிய ஹார்மோன் உற்பத்தி செய்ய இயலாத முதல் வகை பிரிவு சர்க்கரை நோய்க்கு இன்சுலின் ஊசி அவசியமாகும். இரண்டாவது வகைக்கு மாத்திரைகள் போதுமானது.

நீரிழிவு என்பது கடுமையான நிலை அல்ல
நீரிழிவு நோய் என்பது எளிதாக கருதக்கூடிய நோய் அல்ல. புறக்கணித்து அலட்சியம் செய்யகூடியது அல்ல. நீரிழிவு கடுமையான நோய் அல்ல என்பதும் 10 வகையான வதந்திகளில் ஒன்று. நீரிழிவு நோய் கண்டறியப்படாமல் இருந்தால், அது உள்ளிருந்து உங்களை கொன்று விடும். இது உங்கள் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை பாதித்து விடும். இந்நோயானது சிறுநீரகம் மற்றும் பல முக்கிய உறுப்புகளையும் பாதித்து விடும்.

மருந்துகளே போதுமானது
விரும்பியவற்றை சாப்பிட்டுக் கொண்டு, மருந்துகளை மட்டும் எடுத்துக் கொண்டால் போதுமானது என கருதுவது, 10 தவறான வதந்திகளில் ஒன்றாகும். மருந்துகளை எடுத்துக் கொள்ளவதோடு மட்டுமில்லாமல், கார்போஹைட்ரேட் அளவையும் இந்த நோய்க்கு கட்டுப்பாட்டிற்குள் வைக்க வேண்டும்.

இன்சுலின் சிக்கல்களைத் தோற்றுவிக்கும்
இன்சுலின் தீங்கு இழைக்கக் கூடியது என்பது மற்றொரு வகையான வதந்தி உள்ளது. ஆனால் உண்மையில் இன்சுலின் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாடாக வைக்க உதவும் பாதுகாப்பான ஹார்மோன்.

இரண்டாம் வகை முதல் வகை அளவிற்கு கொடியது அல்ல
இரண்டு வகைகளும், கட்டுப்படுத்தாமல் விட்டு விட்டால், மிகப் பெரிய பாதிப்புகளையும், சிக்கல்களையும் ஏற்படுத்திவிடும். இரண்டு வகைகளுக்குமே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும். ஆனால் வெவ்வேறான மருத்துவ முறைகளை கையாள வேண்டும்.



Click it and Unblock the Notifications











