Latest Updates
-
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா -
சிகரெட்டை நிறுத்திய பிறகு நுரையீரல் சுத்தமடைய உண்மையில் எவ்வளவு காலம் ஆகும்? விளக்கும் நுரையீரல் நிபுணர்!
வாழ்க்கை முறை மாற்றத்தினால் நீரிழிவை சீராக வைக்கலாம்!!!
தற்போதைய நோய்களில் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தான் அதிகம் உள்ளது. இத்தகைய நோய் உண்மையில் முற்றிலும் குணமாகாது. ஆனால் அவற்றை அளவுக்கு அதிகமாகவிடாமல், சீராக வைக்க முடியும். இவை அனைத்தும் வாழும் வாழ்க்கை முறையைப் பொறுத்ததே ஆகும். ஆகவே நீரிழிவு இருப்பது தெரிந்துவிட்டால், பின் நிச்சயம் வாழும் வாழ்க்கை முறையிலும் சில மாற்றங்கள் வேண்டும். இத்தகைய மாற்றங்களை மேற்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்காமல் தடுக்க முடியும்.
ஆனால் அவ்வாறு வாழ்க்கை முறையில் மாற்றங்களை கொண்டு வராவிட்டால், பின் இரத்தத்தில் சர்க்கரையின் அளவானது அதிகரித்து, சில நேரங்களில் கண் தெரியாமல் கூட போய்விடும். மேலும் தற்போதைய அவசர உலகில் வாழ்க்கை முறையானது சரியாக இல்லை. அதிலும் வேலைக்கு செல்பவர்களுக்கு, அதிக வேலைப் பளுவினால் மன அழுத்தம், மன இறுக்கம் போன்றவை ஏற்பட்டு, உடலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எனவே உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, ஒருசில மாற்றங்களை அவ்வப்போது நிகழ்த்தினால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, நீரிழிவு இருந்தாலும் அதிகரிக்காமல் இருக்கும்.
அதுமட்டுமின்றி, நீரிழிவைக் கட்டுப்படுத்த மருத்துவர் கொடுத்த போதிய மருந்துகளையும் மறக்காமல் சாப்பிட வேண்டும். சரி, இப்போது எத்தகைய மாற்றங்களை பின்பற்ற வேண்டும் என்று பார்ப்போமா!!!

நடைப்பயிற்சி
இறுக்கமான வாழ்க்கை முறையில் நடைப்பயிற்சி ஒரு சிறந்த மற்றும் ஆரோக்கியமான உடற்பயிற்சி. எனவே அலுவலகத்திற்கு செல்லும் போதோ அல்லது காலையில் எழுந்தோ சிறிது நேரம் நடைப்பயிற்சியை செய்யும் பழக்கத்தை கொள்ள வேண்டும். இதனால் உடல் எடை அதிகரிக்காமலும் இருக்கும்.

யோகா
சில ஸ்பெஷல் யோகாசனங்களை செய்து வந்தாலும், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம். எனவே தினமும் உடலை பிட்டாகவும், நீரிழிவை சரிசெய்யவும் யோகாசனங்களை செய்ய வேண்டும்.

இயற்கை இனிப்புகள்
செயற்கை இனிப்பான சர்க்கரையை உணவில் சேர்ப்பதை தவிர்த்து, இயற்கை இனிப்புகளான தேன் மற்றும் சுகர்-ப்ரீ போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.

மனஅழுத்தத்தை குறைப்பது
தற்போது நிறைய பேர் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் அதிகப்படியான வேலை அழுத்தம் தான். எனவே அதனை சரிசெய்ய அவ்வப்போது தியானம் செய்வதைப் பழக்கமாக கொள்ள வேண்டும்.

கார்போஹைட்ரேட்டை தவிர்ப்பது
டயட்டில் கார்போஹைட்ரேட்டை அதிகம் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக ஒளிச்சேர்க்கை செய்யும் உணவுப் பொருட்களான அரிசி மற்றும் உருளைக்கிழங்கை அறவே தவிர்க்க வேண்டும். இந்த இரண்டையும் சிறிது கூட உணவில் சேர்க்கக் கூடாது. அதற்கு பதிலாக ப்ரௌன் அரிசி, கோதுமை பிரட் மற்றும் தினை மாவு போன்றவற்றை அளவாக சேர்த்துக் கொள்ளலாம்.

எடை
அளவான எடை இருந்தால், நீரிழிவை நிச்சயம் கட்டுப்படுத்த முடியும். அதற்கு அதிக எடையும், நீரிழிவும் உள்ளவர்கள், எடையை குறைக்கும் உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்து வர வேண்டும்.

மாத்திரைகள் சாப்பிடுவது
என்னதான் வாழ்க்கை முறையை மாற்றினாலும், நீரிழிவைக் கட்டுப்படுத்தும் மாத்திரை மற்றும் மருந்துகளை தவறாமல் சாப்பிட வேண்டும். இல்லையெனில், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து, உடலின் மற்ற அனைத்து உறுப்புக்களும் பாதிக்கப்படும்.

அடிக்கடி சாப்பிடுவது
நீரிழிவு இருந்து, அதனை தடுப்பதற்கு மருந்துகளை உட்கொள்ளும் போது, இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறை கொஞ்சம் சாப்பிட வேண்டும். அவ்வாறு சாப்பிடாவிட்டால், பின் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிகவும் குறைந்து ஆபத்தான நிலையை உண்டாக்கிவிடும்.

அடிக்கடி இரத்த பரிசோதனை
மாதத்திற்கு ஒரு முறை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பரிசோதிக்க வேண்டும். பின், அதற்கேற்றாற் போல் நடந்து கொள்ள வேண்டும்.

ஆல்கஹால்
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு, ஆல்கஹால் மிகப் பெரிய எதிரி. ஏனெனில் இதில் சர்க்கரை மற்றும் கொழுப்புக்கள் அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி, ஆல்கஹாலில் எளிய சர்க்கரைகள் இருப்பதால், எளிதில் ஆக்ஸிஜனேற்றப்படுகிறது.

முழு உடல்நல பரிசோதனை
நீரிழிவு என்பது சாதாணமான நோய் அல்ல. அது முற்றினால் உடலின் மற்ற உறுக்கபுளான கண்கள், சிறுநீரகம், இதயம் மற்றும் பல உறுப்புகள் பாதிக்கப்படும். எனவே ஆறு மாதத்திற்கு ஒரு முறை உடலை முழுமையாக பரிசோதித்துவிட வேண்டும்.



Click it and Unblock the Notifications
