Latest Updates
-
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...!
இனிப்பின் மீதுள்ள தீவிரமான ஆவலை கட்டுப்படுத்த சில டிப்ஸ்...
தாழ்மையான உணர்வுகள் மேலோங்கும் போதும், எதிலுமே நாட்டமில்லாமல் இருக்கும் போதும் இனிப்பு பண்டங்களின் மீது உங்களுக்கு தீராத ஆவல் ஏற்படுவதுண்டு. சர்க்கரையும் பிற இனிப்பு வகைகளும் உங்கள் ஆற்றல் திறனை ஊக்குவிக்கும் பொருட்களாக விளங்குகிறது. இவ்வகை ஆவல் நாம் எதிர்பார்க்காத போது எப்போது வேண்டுமானாலும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம். சில நேரங்களில் சாக்லேட் மற்றும் ஐஸ்-க்ரீம்களை தேடி பிரிட்ஜ்களில் நம் வேட்டை தொடருவதை நம்மால் கட்டுப்படுத்தவே முடியாமல் கூட போகும். அந்த அளவிற்கு நம் ஆவல் எல்லை மீறி போகும்.
இனிப்பு பண்டங்களுக்காக நாம் ஏங்குவதும், கிடைத்த இனிப்பு பொருட்களை மலைவிழுங்கி பாம்புகளை போல் விழுங்குவதும் நம் உடல்நலத்தை வெகுவாக பாதிக்கும். அது உங்கள் உடலில் அளவுக்கு மிஞ்சிய கொழுப்புகளை அதிகரிக்கச் செய்து விடும். சர்க்கரை என்ற கார்போஹைட்ரேட் உங்கள் உடலில் உடைந்து செரோடோனின் என்ற சந்தோஷ ஹார்மோனை சுரக்க வைக்கும். அதனால் உங்கள் ஆற்றல் திறன் அதிகரித்து, உங்கள் மன அழுத்தம் நீங்கி உங்களை சந்தோஷமாக இருக்கச் செய்யும். உங்கள் உடல் உங்களை இனிப்பு பண்டங்களை உண்ண தூண்டினால், உங்கள் உடலில் சர்க்கரை அளவு குறைந்து கொண்டு வருகிறது என்றும் அது மீண்டும் நிறைய வேண்டும் என்றும் இயற்கை முறையில் உங்களுக்கு வெளிப்படுத்தும் தகவலாகும்.
ஆனால் சர்க்கரை கலந்த பண்டங்களை அளவுக்கு அதிகமாக உண்ணும் போது, மேலும் மேலும் அவைகளை உண்ண வேண்டும் என்ற ஆவல் பிறப்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? அதனால் உங்கள் பசியை ஆற்றி உங்கள் ஆற்றல் திறனை அதிகரிக்கும் ஆற்றலை கொண்டுள்ளது இது. இருந்தாலும் கூட மேலும் மேலும் இனிப்புகளை அது உண்ண தூண்டி கொண்டே இருக்கும். இவ்வகை உணவுகள் இரத்தக் குழாய்களுக்குள் செல்லும் போது, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அது அதிகரிக்கச் செய்யும். அதன் விளைவாக மெதுவாக ஹார்மோன் இன்சுலின் சுரக்க ஆரம்பிக்கும். அதனால் சர்க்கரையானது, இரத்த குழாய்களில் இருந்து அணுக்களுக்குள் செல்ல கட்டாயப்படுத்தப்படும். இன்சுலின் அளவு துரதிஷ்டவசமாக அதிகரிக்கும் போது உங்கள் அணுக்கள் உணர்ச்சிவயப்பட்டு சர்க்கரை நோய், இதய நோய் போன்றவைகளை உண்டாக்கி விடும்.
ஆனால் சர்க்கரைக்கு அடிமையாவதை எப்படி தடுப்பது? சர்க்கரையின் மேல் ஏற்படும் தீவிரமான ஆவலை போக்க கம்மியாக உண்ண வேண்டும் என்று ஊட்டச்சத்து வல்லுனர்கள் பலர் அறிவுறுத்துகிறார்கள். இருப்பினும் இனிப்பு பண்டங்களை தவிர்க்கவும் அதனை தினசரி உண்ணுவதால் ஏற்படும் ஆபத்துக்களை பற்றி தெரிந்து கொள்ளவும், இதோ உங்களுக்காக சில டிப்ஸ்:

குறைவாக சாப்பிடுங்கள்
பிஸ்கட் ஆகட்டும் அல்லது சாக்லெட் ஆகட்டும், நீங்கள் எந்தளவுக்கு ஏங்குகிறீர்களோ அதனை விட குறைவாக உண்ணுங்கள். உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை இயல்பான அளவில் இருக்க வேண்டுமானால் குறைவாக உண்ணுங்கள். இவ்வகை பண்டங்களை நாள் முழுவதும் குறைச்சலாகவே எடுத்துக் கொள்ளுங்கள். இனிப்பின் மேல் உள்ள ஆவலை கட்டுப்படுத்த பெரிய இனிப்பு பண்டங்களுக்கு பதில் சிறிய சாக்லெட் ஒன்றை உண்ணுங்கள். இனிப்பின் மேல் உள்ள தீவிரமான நாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டுமானால் உங்களுக்கு பிடித்த இனிப்பு பண்டத்தை குறைவாக எடுத்துக் கொண்டால், நாளடைவில் இனிப்பு மீதான இந்த வெறித்தனமான பற்று குறையத் தொடங்கும்.

க்ளைசீமிக் இன்டெக்ஸ் உள்ள உணவுகளை தேர்ந்தெடுங்கள்
சர்க்கரையின் மீதான நாட்டத்தை கட்டுப்படுத்த உங்களுக்காக இன்னொரு டிப்ஸ் - க்ளைசீமிக் இன்டெக்ஸ் உள்ள உணவுகளை உண்ணுங்கள். இது உங்கள் உடலில் ஆற்றல் திறனை நாள் முழுவதும் மெதுவாக அதிகரிக்கும். அதனால் நீங்கள் திடீரென வீழ்ச்சி அடையமாட்டீர்கள். இனிப்பு பண்டங்களின் மேல் உள்ள அதீத நாட்டத்தை குறைக்க நட்ஸ், பழுப்பு நிற சாதம், ஸ்டார்ச் இல்லாத காய்கறிகள், பயறு வகைகள் மற்றும் ஓட்ஸ் போன்ற க்ளைசீமிக் இன்டெக்ஸ் அடங்கிய உணவுகளை உண்ணுங்கள்.

வென்னிலா நறுமணம் கை கொடுக்கும்
சர்க்கரை பொருட்களின் மீதுள்ள நாட்டத்தை குறைக்க முடியவில்லையா? அப்படியானால் வென்னிலா நறுமணம் கொண்ட திரவியத்தை கொஞ்சம் தூவி விடுங்கள். சர்க்கரை மீதுள்ள அதீத ஆவலை கட்டுப்படுத்த காற்று நறுமணம் (ஏர் ப்ரெஷ்னெர்) அல்லது வென்னிலா நறுமணம் கலந்த மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள். சர்க்கரையின் மீதான உங்களின் ஏக்கத்தை வென்னிலா நறுமணம் கடுமையாக கட்டுப்படுத்திவிடும்.

சந்தோஷத்தின் அளவை அதிகரியுங்கள்
உங்கள் மூளையில் செரோடோனின் என்ற சந்தோஷ ஹார்மோனை சுரக்க வைப்பது தான் கார்போஹைட்ரேட்டின் வேலையாகும். அதனால் தான் மன அழுத்தம் ஏற்படும் வேளையில் சர்க்கரைக்காகவும். இனிப்பு பண்டங்களுக்காகவும் நாம் அதிகமாக ஏங்குகிறோம். இப்படிப்பட்ட தீவிரமான ஆவலை கட்டுப்படுத்த நெரொலி அல்லது எலுமிச்சை கலந்த அதிமுக்கிய எண்ணெய்யை பயன்படுத்தலாம். இது உங்கள் மனநிலையை சந்தோஷமாக வைத்திருக்கும். இதற்கு இன்னொரு வழியும் கூட உள்ளது; உங்கள் காதலனை கூப்பிட்டு உங்களை கட்டி அணைத்துக் கொள்ளச் சொல்லுங்கள் அல்லது உங்களை சந்தோஷப் படுத்தும் வகையான நடவடிக்கையில் ஈடுபட சொல்லுங்கள்.

தூண்டுதலாக இருக்கும் காரணங்களை கண்டறியுங்கள்
சர்க்கரை மீதுள்ள அதீத நாட்டத்தை குறைக்க அல்லது கட்டுப்படுத்த எவ்வகை தூண்டுதலுக்கும் விழுந்து விடாதீர்கள். எந்த சூழலில் உங்களுக்கு இந்த உணர்வு ஏற்படுகிறது என்பதை முதலில் கண்டறியுங்கள். பின் அவைகளை தவிர்த்திடுங்கள். உதாரணத்திற்கு, உங்கள் அலுவலகத்துக்கு செல்லும் பாதையில் காபி கடை வருவதால் அதனை குடிக்கும் ஆவல் ஏற்பட்டால், வேறு பாதையில் அலுவலகத்திற்கு செல்லுங்கள். இதனால் இவ்வகை ஆவலை நீங்கள் கட்டுப்படுத்தலாம்.

சூயிங் கம்மை மெல்லுங்கள்
இனிப்புக்காக ஏங்கும் பழக்கத்தை முழுவதுமாக நிறுத்தாமல் அதனை கட்டுப்படுத்த மட்டும் வேண்டுமா? அப்படியானால் சூயிங் கம் மெல்லும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். சூயிங் கம்மை மெல்லுவதால் இனிப்புகளின் மேல் உங்களுக்கு இருக்கும் அதீத ஏக்கம் குறையும் என்பது பொதுவாக அனைவருக்கும் தெரிந்தது தான்.
மேற்கூறிய சில வழிகளே இனிப்புகளின் மேல் உங்களுக்கு இருக்கும் அதீத ஆவலை கட்டுப்படுத்துவதற்கான வழிகளாகும். இதனை பின்பற்றினால் இப்பழக்கத்திற்கு அடிமையாகாமல் சர்க்கரை நோய் வராமல் ஆரோக்கியமாக வாழலாம்.



Click it and Unblock the Notifications











