உங்க விரல் நகங்கள் இப்படி இருக்கா? அப்ப கொலஸ்ட்ரால் ஆபத்தான நிலையில் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...

Symptoms Of High Bad Cholesterol In Tamil: என்ன தான் கொலஸ்ட்ரால் உடலின் சீரான செயல்பாட்டிற்கு இன்றியமையாததாக இருந்தாலும் அந்த கொலஸ்ட்ரால் உடலில் அளவுக்கு அதிகமாகும் போது, அதன் விளைவாக உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. முக்கியமாக கொலஸ்ட்ரால் அளவுக்கு அதிகமாக உடலில் சேர்ந்தால், முதலில் பாதிக்கப்படுவது இதயம் தான்.

ஏனெனில் இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, அது இதயத்திற்கு செல்லும் தமனிகளில் ப்ளேக்குகளை உருவாக்கி, இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. உடலில் அதிகளவு கொலஸ்ட்ரால் இருப்பதை குறிக்கும் நிலை தான் ஹைபர்கொலஸ்டிரோலீமியா. நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த பொதுவான ஆரோக்கிய பிரச்சனையால் உலகளவில் மில்லியன் கணக்கான பாதிக்கப்பட்டுள்ளனர்.

Cholesterol Symptoms In Tamil Warning Signs of High Bad Cholesterol Levels On Nails And Fingers

அதுவும் பெண்களை விட ஆண்கள் தான் இந்த கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அதிகம் அவதிப்படுகிறார்கள். அதோடு பெண்களுக்கு தெரியும் கொலஸ்ட்ரால் அறிகுறிகளும், ஆண்களுக்கு தெரியும் கொலஸ்ட்ரால் அறிகுறிகளும் வெவ்வேறு விதமாக இருக்கலாம். இந்த கொலஸ்ட்ரால் அறிகுறிகளை புறக்கணித்தால், இதயம் மோசமாக சேதமடைந்துவிடும்.

எனவே கொலஸ்ட்ரால் அறிகுறிகளை தெரிந்து கொண்டு, அவற்றை அனுபவித்தால், உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொண்டால், இதய நோயைத் தடுத்து, உயிரிழப்பதைத் தடுக்கலாம். இப்போது ஆண்களின் உடலில் கொலஸ்ட்ரால் அதிகம் இருந்தால், விரல் நகங்களின் மூலம் தெரிய வரும் அறிகுறிகள் என்னவென்பதைக் காண்போம்.

மஞ்சள் நிற நகங்கள்

விரல் நகங்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறதா? இப்படி நகங்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படுவதை சாந்தோமாஸ் என்பர். சாந்தோமாஸ் என்பது தோலுக்கு அடியில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதன் வெளிப்பாடுகள். அதாவது, உடலில் கொலஸ்ட்ரால் அதிகளவில் இருந்தால், நகங்கள் இம்மாதிரி காணப்படும்.

வழக்கத்திற்கு மாறான வெள்ளையான நகங்கள்

உங்கள் நகங்கள் வெளிரிய அல்லது வெள்ளை நிறத்தில் காணப்படுகிறதா? அப்படியானால் உடலில் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளது என்று அர்த்தம். பொதுவாக உடலில் இரத்த ஓட்டம் குறைவாக இருந்தால், சருமம் வெளுத்துப் போய் காணப்படும். அதுவும் விரல் நகங்கள் வழக்கத்திற்கு மாறாக வெள்ளையாக காணப்பட்டால், உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்ததன் காரணமாக இரத்த ஓட்டம் குறைவாக உள்ளது என்று அர்த்தம்.

தடித்த நகங்கள்

உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், அது நகங்களை தடிமனாக்கலாம். மோசமான இரத்த ஓட்டம் பெரும்பாலும் அதிக கொழுப்புடன் தொடர்புடையது என்பதால், நகங்கள் தடிமனாக இருப்பதைக் கண்காணித்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

நக வளர்ச்சி குறைவு

கொலஸ்ட்ரால் உடலில் அதிகமாக இருந்தால் வெளிப்படும் மற்றொரு அறிகுறி நகங்களின் வளர்ச்சி மிகவும் குறைவாக இருக்கும். உங்களின் நகங்களின் வளர்ச்சி மந்தமாகவோ அல்லது குறைவாகவோ இருப்பதை உணர்ந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

நகங்களின் நிறங்களில் மாற்றம்

நகங்களின் நிறங்கள் நீற நிறத்திலோ அல்லது கருமையாகவோ தென்பட்டால், உடலில் கொலஸ்ட்ரால் ஆபத்தான அளவில் அதிகரித்துள்ளது என்று அர்த்தம். இப்படியான நிற மாற்றம் மோசமான இரத்த ஓட்டத்தினால் ஏற்பட்டிலாம். எனவே இந்த அறிகுறி தெரிந்தால், கவனமாக இருங்கள்.

நகங்கள் உடைவது

ஒருவரது நகங்கள் விரைவில் அல்லது எளிதில் உடையக்கூடியதாக இருந்தால், இரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால் இருக்கிறது என்பதை உடல் நமக்கு உணர்த்துகிறது. நகங்கள் உடைவது மற்ற ஆரோக்கிய பிரச்சனைகளின் அறிகுறியாகவும் உள்ளது. மொத்தத்தில் உடையக்கூடிய நகங்கள் இயல்பானவை அல்ல, உங்கள் உடல் சில கடுமையான உடல்நல சவால்களுடன் போராடுவதால் இது நடக்கிறது.

எனவே மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை ஒருவர் சந்தித்தால், அவற்றை சாதாரணமாக நினைக்காமல் உடனே மருத்துவரை அணுகி, இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை பரிசோதனை செய்யுஙகள்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Sunday, March 3, 2024, 12:46 [IST]
Desktop Bottom Promotion