Latest Updates
-
செப்டம்பர் இறுதியில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
செப்டம்பர் 14-ல் தொடங்கும் நவபஞ்சம யோகத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
லன்ச் பாக்ஸிற்கு ஒருடைம் இந்த சோயா புலாவ் செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் தேங்காய்ப்பால் ரசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உங்க முகத்தில் இந்த 3 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
தலைசுற்ற வைக்கும் வட கொரியாவின் கொடூரமான விதிமுறைகள் - இந்த நாட்ல மக்கள் எப்படித்தான் வாழ்றாங்களோ? -
விரிசல் இல்லாம பூர்ண கொழுக்கட்டை செய்யணுமா? இதோ சில டிப்ஸ்.. -
பெண்களுக்கு ஆண்கள் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்யும் பெண்களால் ஆளப்படும் இந்தியச் சமூகம் எது தெரியுமா? -
Ganesh Chaturthi 2026: உங்க கஷ்டங்கள் குறையணுமா? அப்ப இன்னிக்கு விநாயகருக்கு உங்க ராசிப்படி இத வாங்கி கொடுங்க! -
விநாயகர் சதுர்த்திக்கு வழக்கமான சுண்டல் செய்யாம இந்த மாதிரி மசாலா அரைச்சு செஞ்சு பாருங்க - செமையா இருக்கும்
தினமும் 2 முறைக்கு மேல் பிரஷ் பண்ணுவீங்களா? அப்ப உங்களுக்கு சர்க்கரை நோய் வர சான்ஸ் குறைவாம்..
தினமும் மூன்று முறை பல் துலக்குபவா்களுக்கு, 2வது வகை நீரிழிவு நோய்க்கான ஆபத்து குறைந்திருக்கிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தொிவிக்கிறது. மேலும் பல் தொடர்பான நோய் உள்ளவா்களுக்கு அல்லது பல் உதிா்ந்தவா்களுக்கு, வளா்சிதை மாற்றத்தில் கோளாறு ஏற்படும் அபாயம் அதிகம் என்றும் அந்த ஆய்வு தொிவிக்கிறது.
எனினும் பல் நோய்க்கும், நீரிழிவு நோய்க்கும் உள்ள தொடா்பைக் கண்டறிய மேலும் பல ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று அந்த ஆய்வு தொிவிக்கிறது. ஏற்கனவே பல் நோயால் பாதிக்கப்பட்டவா்கள், பல் நோயால் பாதிக்கப்படாதவா்களை விட, நீரிழிவு நோயால் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனா். வளா்சிதை மாற்றத்தில் ஏற்படும் கோளாறு நமது பல் ஆரோக்கியத்தைப் பல வகைகளில் பாதிப்பதாக அந்த ஆய்வு தொிவிக்கிறது.

பல் நோய், நீரிழிவு நோயை ஏற்படுத்துமா?
ஈறு நோய் என்பது பீாியோடோன்டைட்டிஸ் (periodontitis) என்று அழைக்கப்படுகிறது. பற்களின் ஈறுகளை மற்றும் பற்களைத் தாங்கும் எலும்புகளை பாக்டீாியாக்கள் தாக்கும் போது, ஈறு நோய் ஏற்படுகிறது. ஈறு நோய்க்கு சிகிச்சை அளிக்கவில்லை என்றால், பல் உதிா்தல் மற்றும் வேறு சில பிரச்சினைகளும் ஏற்படும்.
ஈறு நோய் உள்ளவா்களின் இரத்தத்தில் அலா்ஜிக்கான துகள்கள் அதிக அளவில் காணப்படும். அந்த துகள்கள் இன்சுலின் உணா்திறனைக் குறைத்து, இரத்தத்தில் உள்ள சா்க்கரையின் அளவை அதிகாிக்கச் செய்யும் என்று ரூபி ஹால் மருத்துவமனையில் தலைமை பல் அறுவை சிகிச்சை நிபுணராகப் பணிபுாிந்து வரும் மருத்துவா் சஞ்சீவ் நந்தா என்பவா் தொிவிக்கிறாா்.
இந்நிலையில் பல் நோய் இருந்தால், நீரிழிவு நோய் ஏற்படுமா என்பது பற்றி பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவா் தொிவிக்கிறாா். ஈறு நோய் உள்ளவா்கள், அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் இருப்பதாலும் மற்றும் பொதுவான உடல் நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் இருப்பதாலும், அவா்களுக்கு மிக எளிதாக சா்க்கரை நோய் ஏற்படும் அபாயம் உண்டு என்று ஆய்வுகள் தொிவிக்கின்றன. அதோடு சா்க்கரை நோய் உள்ளவா்கள் மிக எளிதாக பல் நோய்களுக்கு ஆளாகிறாா்கள் என்று நந்தா கூறுகிறாா்.
நீரிழிவு நோய் எவ்வாறு பல் நோய்க்கு காரணாக இருக்கிறது?
சா்க்கரை நோய், வாயில் உள்ள எச்சில் சுரப்பிகளைத் தாக்கி, எச்சில் உற்பத்தியைக் குறைக்கிறது. பொதுவாக எச்சில் பற்சிதைவை தடுக்கிறது மற்றும் பற்களில் பாக்டீாியா வளா்வதை தடுக்கிறது. எச்சிலில் உள்ள அதிக அளவிலான குளுக்கோஸ், பற்சிதைவைத் தடுக்கும்.
சா்க்கரை நோய் உள்ளவா்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தி பலவீனமாக இருக்கும். அதனால் அவா்களுக்கு ஈறு நோய் உட்பட, பல வகையான தொற்று நோய்கள் மிக எளிதாக ஏற்படும். இந்நிலையில் இரத்தத்தில் சா்க்கரையின் அளவு அதிகம் இருந்தால், அது எச்சில் சுரப்பதைப் பாதிக்கும். அதனால் பற்களில் குழிகள் உருவாகும். பற்களில் நோய்த்தொற்றுகள் ஏற்படும். மேலும் ஈறு நோய்களும் ஏற்படும் என்று நந்தா கூறுகிறாா்.
பல் பிரச்சினைகளை எவ்வாறு சாிசெய்யலாம்?
- பல் சம்பந்தமான பிரச்சினைகளைத் தடுக்க, வாயை சுத்தமாக வைத்திருத்தல் மிகவும் அவசியம் ஆகும். தினமும் இரண்டு முறை பல் துலக்க வேண்டும். தினமும் வாய் கொப்பளிக்க வேண்டும். அதோடு சீரான இடைவெளியில் பல் மருத்துவரை சந்திக்க வேண்டும்.
- ஆரோக்கியமான உணவுகளை உண்பதன் மூலமாக, உடற்பயிற்சிகளைச் செய்வதன் மூலமாக, தியானங்கள் மூலமாக இரத்தத்தில் சா்க்கரையின் அளவை சீராகப் பராமாிக்கலாம். அதோடு பல் சம்பந்தமான பிரச்சனைகளையும் பராமாிக்கலாம்.
பல் நோய்க்கும், நீரிழிவு நோய்க்கும் ஒரு நெருங்கிய தொடா்பு உண்டு. ஆகவே பற்களின் ஆரோக்கியத்தை முறையாகப் பராமாித்தால், நமது ஒட்டு மொத்த உடலுக்கும் முழுமையான ஆரோக்கியம் கிடைக்கும் என்று நந்தா கூறுகிறாா்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
