Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
யோகாவில் கலக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்… தினமும் காலை இதை குடித்துதான் டயட்டை ஃபாலோ பண்றாராம்..!
actress Keerthy Suresh diet and fitness secrets: தென்னிந்திய சினிமாவில் முக்கியமான நடிகையாக கீர்த்தி சுரேஷ் வலம் வருகிறார்... விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். ரஜினி நடித்த அண்ணாத்த திரைப்படத்தில் அவரது தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.
இதேபோன்று தெலுங்கிலும் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் தற்போது இந்தி திரையுலகிலும் அறிமுகமாகவுள்ளார். இந்நிலையில், அவர் யோகா செய்யும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமான லைக்குகளை குவித்து வருகிறது. அவருடைய ஃபிட்னஸ் மற்றும் டயட் என்ன? என்பது குறித்தும் அவரின் அழகின் ரகசியம் என்ன? என்பது குறித்தும் இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

தற்போது அட்லி இயக்கிய தெறி படம் இந்தியில் பேபி ஜான் என்ற பெயரில் எடுக்கப்பட்டு வருகிறது. அத்துடன் ரிவால்வர் ரீட்டா, கண்ணி வெடி உள்ளிட்ட படங்களிலும் கீர்த்தி சுரேஷ் தற்போது நடித்து வருகிறார். வருண் தவான் முன்னணி கேரக்டரில் நடிக்கும் இந்த படத்தில் சமந்தா ரோலில் கீர்த்தி சுரேஷ் இடம் பெற்றுள்ளார். இந்நிலையில் விளம்பரம் ஒன்றுக்காக நடிகை கீர்த்தி சுரேஷ் யோகா செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. இந்த காட்சியை கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் ட்ரெண்டாக்கியுள்ளனர்.
மேலும் அவரின் தினசரி வொர்க்அவுட் ரொட்டீன் மிகப்பெரிய மாற்றத்தை கொடுத்துள்ளது.. அது அவள் உடல் அமைப்பைப் பராமரிக்கவும், நல்ல நிறமான உடலைப் பராமரிக்கவும் உதவியாக இருந்தது.. 30 நிமிட கார்டியோ ஸ்பின்னிங் மற்றும் தசை பயிற்சிகள், தினசரி 20 நிமிட ஜாகிங் மற்றும் 10 நிமிட சைக்கிள் ஒட்டுதல் ஆகியவற்றால் நடிகையின் உடல் எடை குறைய ஆரம்பித்தது..
அத்துடன் நடிகை செய்யும் எடை பயிற்சி உடல் எடையை நிர்வகிக்கவும் குறைக்கவும் உதவுகிறது. அதனால் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் கலோரிகளை எரிக்க உதவுகிறது. சிறந்த இருதய ஆரோக்கியம், கட்டுப்படுத்தப்பட்ட இரத்த சர்க்கரை அளவுகள் புற்றுநோய் அபாயத்தைக் குறைத்தது மற்றும் வயிற்று கொழுப்பைக் குறைக்கிறது.. வலிமை பயிற்சி என்பது நடிகைக்கான சிறந்த உடற்பயிற்சி முறைகளில் ஒன்றாகும். இது அவரது அதிகமான எடையைக் குறைக்க உதவியது.
அதனைத் தொடர்ந்து நடிகை செய்யும் அமைதியான யோகா எடை குறைப்பு பயணத்தின் சிறந்த தேர்வுகளில் ஒன்றாகும். அவரது யோகாசனத்தில் கோமுகசனம், பலாசனம், தனுராசனம் மற்றும் தியானம் போன்ற யோகாசனங்கள் அடங்கும். யோகா மன அழுத்தம், நினைவாற்றல், ஆரோக்கியமான உணவு, தரமான தூக்கம் மற்றும் எடை இழப்பு ஆகியவற்றை நிர்வகிக்கிறது..
கீர்த்தி சுரேஷ் டயட்-ன் சீக்ரெட்
தினசரி காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் தவறாமல் ஒரு பானம் குடிப்பாராம், இந்த பானத்துடன் தனது நாளை தொடங்குவாராம். இந்த பானம் தான் இவரது டயட் முறையும் அழகு, உடல் எடை பராமரிப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.. அது என்ன பானம் குடிக்கிறார் என்பது குறித்தும் இதற்கு தேவையான பொருள் மற்றும் செய்முறை குறித்தும் இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...
தேவையான பொருட்கள்
1. பாலக் கீரை
2. செலரி கீரை
3. வெள்ளரி
4. புதினா
5. பூண்டு ஒன்று அல்லது இரண்டு
6. இஞ்சி
7. தண்ணீர்
8. சிறிய அளவு எலுமிச்சை சாறு
ஆரோக்கிய பானம் செய்முறை
முதலில் பாலக் கீரை சிறிது அளவு எடுத்து வெட்டிக் கொள்ளவும். செலரி கீரை சிறிதளவு எடுக்கவும். பின் ஒன்று அல்லது இரண்டு வெள்ளரியை வெட்டி எடுத்துக் கொள்ளவும். இதனுடன் சிறிதளவு புதினா இலை சேர்க்கவும். பூண்டு ஒன்று அல்லது இரண்டு உரித்து எடுத்துக் கொள்ளவும். இஞ்சி சிறிதளவு எடுக்கவும். இதை மிக்ஸி ஜார்-ல் போட்டு தண்ணீர் உற்றி நன்கு அரைக்கவும். இறுதியாக இதை வடிக்கட்டி சாறாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த சாறில் சிறிதளவு எலுமிச்சை சாற்றை பிழிந்துக் கொள்ளவும். அவ்வளவுதான் உங்கள் ட்ரிங் ரெடி.
ஆரோக்கிய நன்மைகள்
இந்த ஜூஸ் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கிறது. முகப் பொலிவு முதல் உடல் நச்சுத்தன்மை நீக்கம் வரை பல்வேறு நன்மைகள் இதில் உள்ளது. இந்த பானத்தை நீங்களும் குடிக்க விரும்பினால் காலை வெறும் வயிற்றில் தாராளமாக குடிக்கலாம். இது மிகுந்த நன்மை பயக்கும். இருப்பினும் உங்களுக்கு உடலில் வேறு ஏதும் பாதிப்பு இருந்தால், மருத்துவரை அணுகிய பிறகே இதுபோன்ற பானத்தை குடிக்கவும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
