Latest Updates
-
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசையில் தெரியாம கூட இந்த 5 பொருட்களை வீட்டு வாங்கிட்டு வராதீங்க.. -
75 ஆண்டுகளாக பயணிகளிடம் டிக்கெட்டே வாங்காமல் இயங்கும் இந்தியாவின் ஒரே ரயில் எது தெரியுமா? -
அக்டோபர் இறுதியில் நிகழும் குரு-கேது சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறைவதை பாப்பீங்க..
உடல் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப உணவியல் நிபுணர் சொல்ற இந்த 6 பானங்களை காலையில் குடிங்க..
Healthy Morning Drinks In Tamil: உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் நாம் உண்ணும் உணவுகளிலும், பழக்கவழக்கங்களிலும், வாழ்க்கை முறையிலும் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். அதுவும் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லாவிட்டாலும், சிறு மாற்றங்களை கொண்டு வந்து, அதை தினமும் தவறாமல் பின்பற்றும் போது, உடலில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம். முக்கியமாக காலை வேளையில் எழுந்ததும் குடிக்கக்கூடிய பானங்கள் உடலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியுமா? அதனால் தான் சிலர் காலையில் எழுந்ததும் ஒருசில பானங்களை குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

தற்போது நிறைய பேர் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இந்த பிரச்சனைகளுக்கு இயற்கையாகவே தீர்வு காண அல்லது கட்டுப்படுத்த நினைத்தால் ஒருசில காலை பானங்களை குடிக்க வேண்டும். உணவியல் நிபுணரான தீபா கிஷ்னாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்குச் சிறந்த துணையாக இருக்கக்கூடிய 6 சக்திவாய்ந்த காலை பானங்களை பகிர்ந்துள்ளார். அதுவும் எந்த பிரச்சனைக்கு எந்த பானத்தை காலையில் குடிக்க வேண்டும் என்று விரிவாக கூறியுள்ளார்.
1. தைராய்டு பிரச்சனை - மல்லி நீர்
* 1 டீஸ்பூன் மல்லி விதைகளை ஒரு டம்ளர் நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதை கொதிக்க வைத்து வடிகட்டி, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
* இந்த பானம் தைராய்டு அளவுகளை சமநிலையில் வைத்துக் கொள்ளவும், உடலின் மெட்டபாலிசம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை இயற்கையாகவே ஆதரிக்க உதவுகிறது.
2. பிசிஓஎஸ்/ஹார்மோன் சமநிலையின்மை - வெந்தய நீர்
* 1 டீஸ்பூன் வெந்தயத்தை ஒரு டம்ளர் நீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
* பின் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெந்தயத்துடன் அந்நீரைக் குடிக்க வேண்டும்.
* இந்த பானம் ஹார்மோன்களை சமநிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது.
3. சர்க்கரை நோய் - கிராம்பு நீர்
* 3-4 கிராம்பை ஒரு டம்ளர் நீரில் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி, வெதுவெதுப்பான நிலைக்கு வந்ததும் குடிக்க வேண்டும்.
* இந்த பானம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள ஆதரிக்கிறது.
4. உயர் இரத்த அழுத்தம்/இதய ஆரோக்கியம் - பட்டை நீர்
* ஒருடம்ளர் நீரில் 1/2 டீஸ்பூன் பட்டை தூள் அல்லது 1 சிறிய துண்டு பட்டையை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி குடிக்க வேண்டும்.
* இந்த பானம் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகிறது.
5. உப்புசம்/ வாய்வு தொல்லை/அஜீரணம் - ஓமம் + சீரக நீர்
* 1/2 டீஸ்பூன் ஓமம் மற்றும் 1/2 டீஸ்பூன் சீரகத்தை ஒரு டம்ளர் நீரில் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி குடிக்க வேண்டும்.
* இந்த பானம் வயிற்று உப்புசம், வாய்வு தொல்லை, அசிடிட்டி போன்றவற்றில் இருந்து நிவாரணம் அளித்து, செரிமானத்திற்கு உதவுகிறது.
6. வீக்கம்/மூட்டு வலி/பிசிஓஎஸ் வீக்கம் - கருஞ்சீரக நீர்
* 1/2 டீஸ்பூன் கருஞ்சீரக விதைகளை ஒரு டம்ளர் நீரில் இரவு முழுவதும் ஊறு வைக்க வேண்டும்.
* பின் அதை லேசாக கொதிக்க வைத்து இறக்கி குடிக்க வேண்டும்.
* இந்த பானம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, உடலினுள் மற்றும் மூட்டுக்களில் உள்ள வீக்கத்தையும், வலியையும் குறைக்கும்.
எனவே நண்பர்களே! உடல் ஆரோக்கியமாக இருக்க நினைத்தால், மேலே கொடுக்கப்பட்டுள்ள பானங்களை உங்களின் தினசரி காலை நேர வழக்கத்தில் சேர்த்து வாருங்கள். இதன் மூலம் இயற்கையாக ஒரு நல்ல மாற்றத்தை உடலில் காணலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

