Latest Updates
-
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசையில் தெரியாம கூட இந்த 5 பொருட்களை வீட்டு வாங்கிட்டு வராதீங்க..
தைராய்டு பிரச்சனை உடல் ஆரோக்கியத்தை எப்படியெல்லாம் பாதிக்கும்? - விளக்கும் டாக்டர்!
Thyroid Problems In Tamil: பெண்களிடையே பொதுவாக காணப்படும் ஒரு பிரச்சனை தான் தைராய்டு பிரச்சனைகள். தைராய்டு (Thyroid) என்பது கழுத்துப் பகுதியில் இருக்கும் சிறிய பட்டாம்பூச்சி வடிவ சுரப்பி ஆகும். இது உடலின் மெட்டபாலிசம் (Metabolism), ஆற்றல் உற்பத்தி, இதய துடிப்பு, உடல் வெப்பநிலை மற்றும் பல ஹார்மோன்களின் (Hormones) செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இப்படிப்பட்ட பல முக்கியமான பணிகளை செய்யக்கூடிய தைராய்டு சுரப்பி சரியாக செயல்படாத போது, உடலின் பல்வேறு உறுப்புகள் பாதிக்கப்படலாம். இந்த தைராய்டு பிரச்சனைகள் உடலை எப்படியெல்லாம் பாதிக்கும் என்பது குறித்து பெங்களூரு, எலக்ட்ரானிக் சிட்டியில் அமைந்துள்ள KIMS மருத்துவமனையின் நாளமில்லாச் சுரப்பியல் மற்றும் ஆண்மையியல் ஆலோசகரான டாக்டர். நந்தினி சங்கர நாராயணா அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது, "தைராய்டு குறைபாடுகள் பொதுவாக இரண்டு வகைப்படும். அவை ஹைப்போதைராய்டிசம் (Hypothyroidism) மற்றும் ஹைப்பர் தைராய்டிசம் (Hyperthyroidism). இதில் ஹைப்போதைராய்டிசம் என்பது தைராய்டு ஹார்மோன் குறைவாக இருப்பது மற்றும் ஹைப்பர் தைராய்டிசம் என்பது தைராய்டு ஹார்மோன் அதிகமாக இருப்பது ஆகும்.
ஹைப்போதைராய்டிசம் அறிகுறிகள்
ஹைப்போதைராய்டிச பிரச்சனையின் அறிகுறிகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன. அவை,
* உடல் எடை அதிகரித்தல்
* உடல் சோர்வு
* தோல் உலர்தல்
* முடி உதிர்தல்
* மலச்சிக்கல்
* மனச்சோர்வு
* மாதவிடாய் சுழற்சியில் மாற்றம்
* குளிரை தாங்க முடியாமை ஆகியவை அடங்கும்.
ஹைப்பர் தைராய்டிசம் அறிகுறிகள்
ஹைப்பர் தைராய்டிச பிரச்சனையின் அறிகுறிகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன. அவை,
* உடல் எடை குறைதல்
* பதட்டம்
* இதய துடிப்பு அதிகரித்தல்
* அதிக வியர்வை
* கை நடுக்கம்
* தூக்கமின்மை
* அதிக வெப்பத்தை தாங்க முடியாமை போன்றவை இடம்பெறும்.
தைராய்டு பிரச்சனை உடலை எப்படியெல்லாம் பாதிக்கிறது?
தைராய்டு மாற்றங்கள் தோல், செரிமானம், கருத்தரிப்பு திறன் (Fertility), மனநலம் மற்றும் இதய ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடும். பெண்களில் சிகிச்சை பெறாமல் விடப்படும் தைராய்டு பிரச்சினைகள் மாதவிடாய் சுழற்சியை பாதிப்பதுடன், கர்ப்பகால சிக்கல்களுக்கும் வழிவகுக்கலாம். மேலும், சிகிச்சை பெறாத தைராய்டு கோளாறுகள் அதிக கொலஸ்ட்ரால் (Cholesterol), இதய நோய் மற்றும் எலும்பு மெலிதல் (Osteoporosis) போன்ற பிரச்சினைகளின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.
தைராய்டு பிரச்சனையை கட்டுப்படுத்துவது எப்படி?
சில எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தைராய்டு ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும். சமநிலையான உணவுமுறை தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை மேம்படுத்தும். குறிப்பாக ஹைப்போதைராய்டிசம் உள்ளவர்கள் அயோடின் (Iodine), செலினியம் (Selenium), ஜிங்க் (Zinc) மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது நல்லது. மீன், முட்டை, பருப்புகள், பால் பொருட்கள் மற்றும் பச்சைக் காய்கறிகள் இதற்கு உதாரணங்களாகும்.
இதனுடன், தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது, போதிய தூக்கம் பெறுவது மற்றும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை எடுத்துக் கொள்வதையும், அதிக அளவில் பதப்படுத்தப்பட்ட (Processed) உணவுகளை உட்கொள்வதையும் தவிர்க்க வேண்டும்.
ஆரம்ப கட்டத்திலேயே தைராய்டு பிரச்சினைகளை கண்டறிவது மிகவும் முக்கியம். காரணமின்றி உடல் எடை மாற்றம், தொடர்ந்து சோர்வு அல்லது முடி உதிர்தல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி தைராய்டு ஹார்மோன் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்." என்று கூறினார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

