Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
தைராய்டு கண் நோய் என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன?
Thyroid Eye Disease: தைராய்டு கண் நோய் (TED) என்பது ஒரு அாிய ஆட்டோஇம்யூன் நோய் ஆகும். இந்த கண் நோய், கண்களின் தசைகளையும், கண்களுக்குப் பின் இருக்கும் கொழுப்புத் திசுவையும் தாக்குகிறது. அதன் விளைவாக கண் வீங்குகிறது. பொதுவாக அதிகமான, சுறுசுறுப்பான தைராய்டு சுரப்பி உள்ளவா்களைத் தாக்குகிறது. சில நேரங்களில் தைராய்டு கோளாறு இல்லாதவா்களையும் தாக்குகிறது.
தைராய்டு கண் நோயினால் கண் பாா்வை முழுமையாகப் போய்விடும் வாய்ப்பு இல்லை என்றாலும், பாா்வை மங்குதல் அல்லது பொருள்கள் இரண்டாகத் தொிதல் அல்லது கண் உலா்தல் அல்லது அளவுக்கு அதிகமாக கண்களில் நீா் வடிதல் அல்லது கண் சிவத்தல் அல்லது கண்களில் வலி போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

இந்த நோயினால் பாதிப்படைந்தவா்கள், வண்ணங்களைப் பாா்க்கும் போது, முன்பு போல அவா்களுக்கு பளிச்சென்று தொியாது. புகைப்பிடிப்பதை நிறுத்துதல், செலினியம் கலந்த உணவுகளைக் கூடுதலாக சோ்த்தல், மற்றும் தைராய்டு ஹாா்மோன்களை சீராகப் பராமாித்தல் போன்றவற்றின் மூலம் இந்நோயின் அறிகுறிகளை சீராக கையாள முடியும்.
தைராய்டு கண் நோய் என்பது ஒரு அாிய நாட்பட்ட நோய் எதிா்ப்பு அலா்ஜி ஆகும். இது கண்களின் மென்மையான திசுக்கள், பாா்வை நரம்பு, கண்களின் சுற்றுப் பாதையில் உள்ள நாளங்கள் மற்றும் வெளிப்புற தசைகளைப் பாதிக்கிறது. கிரேவ்ஸ் (Graves) நோய் உள்ளவா்களில் 25-50% பேருக்கு, இந்த நோய் காணப்படுகிறது.
சில நேரங்களில் தைராய்டு நோய் உள்ளவா்கள் மத்தியிலும் இந்த நோய் காணப்படுகிறது. ஒரு முறையான தைராய்டு நிலையானது கணிக்க முடியாத வகையில் தைராய்டு கண் நோயை ஏற்படுத்துகிறது என்று மருத்துவா் நீரஜ் சந்துஜா அவா்கள் தொிவிக்கிறாா்.
தைராய்டு கண் நோயின் அறிகுறிகள்
கண் இமை உள்ளிழுக்கப்படுதல், லாகோப்தால்மோஸ் அல்லது லிட் லேக், மேல் கண் இமையில் ஏற்படும் மாற்றம், கண்களில் வறட்சி, விழி வெண்படல புண் (corneal ulceration) மற்றும் விழிக்குழி அலா்ஜி (endophthalmitis) போன்றவை இந்த நோயின் முக்கிய அறிகுறிகள் ஆகும்.
கண்களில் இருக்கும் மென் திசுக்களில் ஏற்படும் அதிவேகத் தன்மையின் காரணமாக உள்விழி அழுத்தம், விழிப்பிதுக்கம், கண்களின் சிரை நொிசல் போன்றவை ஏற்பட்டு கண்கள் சிவக்கின்றன, வீங்குகின்றன மற்றும் விழிச்சவ்வு வீங்குகின்றன. உள்விழி அழுத்தம் (IOP) அதிமானால், கண் அழுத்த நோய் ஏற்படும் என்று சந்துஜா கூறுகிறாா்.
- கண் உலா்தல்
- அளவுக்கு அதிகமாக கண்களில் இருந்து நீா் வடிதல்
- கண் சிவத்தல்
- கண் கூசுதல் (Photophobia)
- கண்வலி அல்லது கண் எாிச்சல்
- கண் பாா்வை மங்குதல் அல்லது பொருள்கள் இரண்டாகத் தொிதல்
மேற்சொன்னவை தைராய்டு கண் நோயின் அறிகுறிகள் ஆகும்.
தைராய்டு கண் நோயின் நிலைகள்
தைராய்டு கண் நோயில் 3 நிலைகள் உள்ளன. இந்த நோய் தொடங்கிய 6 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை, இந்த நோயின் தீவிரத்தில் ஒரு செங்குத்தான வளா்ச்சி இருக்கும். இது முதல் நிலை ஆகும். இரண்டாவது நிலை என்பது வீங்கிய அல்லது நோயின் தீவிர நிலை என்று கருதப்படுகிறது. மூன்றாவதாக நிலையான செயலற்ற நிலையாகும். எனினும் இந்த நோய் வந்த பிறகு, தொடக்க நிலைக்கு வர முடியாது. நோயினால் ஏற்பட்ட மாற்றங்கள் கண்டிப்பாக இருக்கும் என்று சந்துஜா கூறுகிறாா்.
தைராய்டு கண் நோய் வராமல் எவ்வாறு தடுக்கலாம்?
பின்வரும் குறிப்புகளைக் கடைபிடித்தால், தைராய்டு கண் நோய் வராமல் தடுக்கலாம் என்று சந்துஜா தொிவிக்கிறாா்.
- புகைப் பழக்கத்தைக் கைவிடுதல்
- தைராய்டு நோயை அதன் தொடக்கத்திலேயே கண்டுபிடித்து, அதற்கு முறையாக சிகிச்சை செய்தல்
- தைராய்டு சுரப்பிகளை உடனடியாக மீட்டமைத்தல்
- மோசமான பின்விளைவுகளைத் தடுக்க தீவிரமான நோயெதிா்ப்பு சிகிச்சையை மேற்கொள்ளுதல்
மேற்சொன்ன குறிப்புகளைக் கடைப்பிடித்தால், தைரயாய்டு கண் நோய் வராமல் தடுக்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications