Latest Updates
-
சூரியன் துலாம் ராசிக்குள் நுழையப்போவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
தாபா ஸ்டைல் ராஜ்மா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அருமையா இருக்கும் -
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்னென்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்!
தலைமுடி உதிர்வை நிறுத்தி, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கணுமா? அப்ப இந்த வெங்காய ஹேர் மாஸ்க்கை போடுங்க..
Hair Growth Tips In Tamil: தலைமுடி உதிர்வது என்பது சாதாரணம் தான். எவ்வளவு முடி உதிர்கிறதோ, அதற்கேற்ப முடி வளரும். ஆனால் எப்போது ஒருவருக்கு தலையில் கையை வைக்கும் போதெல்லாம் கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதோ, அப்போது சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. உடனே தலைமுடிக்கு கூடுதல் பராமரிப்பைக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.

தலைமுடி உதிர்வை தடுப்பதற்கு கடைகளில் ஏராளமான தலைமுடி பராமரிப்பு பொருட்கள் உள்ளன. இருப்பினும், கெமிக்கல் கலந்த பொருட்களால் பராமரிப்பு கொடுப்பதை விட, இயற்கை வழிகளைப் பின்பற்றுவதே சிறந்தது. ஏனெனில் கடைகளில் விற்கப்படும் பல பிராண்டுகள் இயற்கையான முடி பராமரிப்புப் பொருட்களையே அதிகம் கொண்டுள்ளன. அதில் ஒன்று தான் வெங்காயம்.
இந்த வெங்காயத்தைக் கொண்டு தலைமுடிக்கு ஹேர் மாஸ்க் போட்டு வரும் போது, ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் அதிகரித்து, முடியின் மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடியின் வளர்ச்சி தூண்டப்படும். கீழே முடியின் வளர்ச்சியை அதிகரித்து, தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் 3 வெங்காய ஹேர் மாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தி வர, தலைமுடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
1. தேன் மற்றும் வெங்காய சாறு ஹேர் மாஸ்க்
* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தேனை எடுத்து, 1/2 கப் வெங்காய சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை ஸ்கால்ப்பில் தடவி, சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.
* பிறகு 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் மைல்டு ஷாம்பு மற்றும் கண்டிஷனரைப் பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
* இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு 1 முறை பயன்படுத்தலாம்.
2. வெங்காய சாறு மற்றும் இஞ்சி மாஸ்க்
* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் வெங்காய சாறு மற்றும் இஞ்சி சாற்றினை சம அளவில் எடுத்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை ஸ்கால்ப்பில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
* பிறகு 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் மைல்டு ஷாம்பு மற்றும் கண்டிஷனரைப் பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
* இந்த ஹேர் மாஸ்க்கை ஒருநாள் விட்டு ஒருநாள் பயன்படுத்தலாம்.
3. தேங்காய் எண்ணெய் மற்றும் வெங்காய சாறு ஹேர் மாஸ்க்
* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் தேங்காய் எண்ணெய் மற்றும் வெங்காய சாற்றினை 1:1 என்ற விகிதத்தில் எடுத்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் தடவி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு மைல்டு ஷாம்பு மற்றும் கண்டிஷனரைப் பயன்படுத்தி முடியை அலச வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 1-2 முறை இந்த ஹேர் மாஸ்க்கை பயன்படுத்தலாம்.
குறிப்பு: வெங்காய ஹேர் மாஸ்க்கை தலையில் பயன்படுத்தும் போது, அந்த சாறு துணியில் வழியாமல் இருக்க ஷவர் கேப்பை அணிந்து கொள்ளுங்கள். முக்கியமாக வெங்காய ஹேர் மாஸ்க்கை பயன்படுத்தும் முன் அலர்ஜி உள்ளதா என்பதை பரிசோதித்து பார்த்து பின் பயன்படுத்த வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

