Latest Updates
-
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும -
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா
தலைமுடி அடர்த்தியா நீளமா வளரணுமா? அப்ப சித்த மருத்துவர் கூறும் இந்த 3 கீரைகளை சாப்பிடுங்க..!
Hair Care Tips In Tamil: தற்போது ஒவ்வொருவரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் தலைமுடி உதிர்வு. இப்படி ஒருவருக்கு தலைமுடி உதிர்வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமாக மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவற்றால் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி, தலைமுடியின் ஆரோக்கியமும் தான் பாதிக்கப்படும். எப்படியெனில் இப்படியான பழக்கங்களால் தலைமுடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல், தலைமுடி பலவீனமடைந்து உதிரத் தொடங்குகிறது.

எனவே தலைமுடி உதிரத் தொடங்கினால், வெறும் எண்ணெய்களை கொண்டு மட்டும் தலைமுடிக்கு பராமரிப்பு கொடுக்காமல், தலைமுடியின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் தேவையான சத்துக்கள் நிறைந்த உணவுகளையும் உட்கொள்ளுங்கள். அதுவும் காய்கறிகள், பழங்கள் மட்டுமின்றி, கீரைகளையும் உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.
சித்த மருத்துவரான ஜெய ரூபா அவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும், தலைமுடி உதிர்வை குறைக்கவும் சாப்பிட வேண்டிய 3 கீரைகள் குறித்து பகிர்ந்துள்ளார். இந்த கீரைகளை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், முடி கொட்டுவதையும் தடுக்கலாம், தலைமுடியும் அடர்த்தியாக வளரும்.
1. முருங்கைக்கீரை
தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் மிகச்சிறந்த கீரைகளுள் ஒன்று முருங்கைக்கீரை. இந்த கீரையில் ஏராளமான நுண் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. முக்கியமாக கால்சியம், புரோட்டீன், இரும்புச்சத்து போன்றவை அதிகமாக உள்ளன. இந்த மூன்றும் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, முடியின் வேர்கால்களுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதனால் தலைமுடி உதிர்வதும் குறைவும், புதிதாக தலைமுடியும் வளரத் தொடங்கும். அதற்கு இந்த கீரையை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும். அதுவும் முருங்கைக்கீரையை சூப்பாக எடுப்பது நல்லது.
2. கறிவேப்பிலை
கறிவேப்பிலையும் தலைமுடியின் வளர்ச்சியையும், தலைமுடி உதிர்தலையும் தடுக்கும். அதற்கு ஒரு கறிவேப்பிலையின் இலையை எடுத்து, அதில் ஒரு உலர் திராட்சையை வைத்து மென்று சாப்பிட வேண்டும். இப்படி காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 10-20 கறிவேப்பிலை உட்கொண்டு வந்தாலே, தலைமுடியின் வளர்ச்சி மேம்படுவதை நன்கு காணலாம். ஏனெனில் கறிவேப்பிலையில் பீட்டா கரோட்டீன் மற்றும் இரும்புச்சத்து உள்ளது. அதுமட்டுமின்றி, இளநரை வருவதும் தடுக்கப்பட்டு, தலைமுடி நன்கு கருகருவென்று வளரும்.
3. பொன்னாங்கண்ணி கீரை
பொன்னாங்கண்ணி கீரை உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும். அதுமட்டுமின்றி, தலைமுடிக்கு தேவையான லுடீன் மற்றும் ஜியாந்தைன் போன்ற முக்கியமான நுண் ஊட்டச்சத்துக்களும் உள்ளன. இந்த பொன்னாங்கண்ணி கீரையை தொடர்ந்து உட்கொண்டு வரும் போது, முடியின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். சித்தர்கள் 48 நாட்கள் தொடர்ந்து உட்கொண்டு வந்தாலே முடியின் வளர்ச்சி மேம்படும் என்று கூறியுள்ளார்கள். 48 நாட்கள் எடுக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, அவ்வப்போது இந்த கீரையை உணவில் சேர்த்து வாருங்கள்.
இந்த 3 கீரைகளுமே விலைக் குறைவானது தான். ஆனால் அதனால் கிடைக்கும் நன்மைகளோ ஏராளம். எனவே நண்பர்களே! இதுவரை தலைமுடி உதிர்வை தடுக்க எத்தனையோ வழிகளை பின்பற்றியும் எந்த பலரும் கிடைக்காவிட்டால், இந்த 3 கீரைகளை உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

