ஏன் பழங்களையும் காய்கறிகளையும் நீங்கள் அன்றாடம் சேர்க்காமல் இருக்கக் கூடாது?

By: Divyalakshmi Soundarrajan
Subscribe to Boldsky

மனித வாழ்வில் பழங்கள் மற்றும் காய்கறிகள் ஏன் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது என்று உங்களுக்குத் தெரியுமா? ஏனெனில், பழங்கள் மற்றும் காய்கறிகள் அவற்றின் மருத்துவ குணத்தால் மனித உடலில் ஏற்படும் ஆரோக்கிய குறைபாடுகளைப் போக்கவல்லது.

why fruits and vegetables are vital for our health

இதனால் தான் அன்றாட உணவில் காய்கறிகள் மற்றும் பழங்கள் சேர்க்கப்படுகின்றன. இவை மனிதனின் ஆயுட்காலத்தையும் நீட்டிக்கிறது.

வாருங்கள் இப்பொழுது நாம் சில காய்கறிகள் மற்றும் பழங்களின் மருத்துவ குணங்களைப் பார்ப்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிள் சாப்பிட்டால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். இவை வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் மற்றும் நுரையீரல் புற்றுநோயையும் தடுக்குமாம். மேலும், மூட்டுகளுக்கு வலிமை சேர்க்குமாம்.

 பீன்ஸ்

பீன்ஸ்

பீன்ஸ் சாப்பிடுவதால் கொழுப்பு பிரச்சினைகள், மலச்சிக்கல், மூல நோய் மற்றும் சிலவகை புற்றுநோய்களை தடுக்கலாம்.

ஆப்ரிகாட்

ஆப்ரிகாட்

புற்றுநோயைத் தடுக்க, கண்பார்வை மேம்பட, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த, அல்மைசர் வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்க மற்றும் வயதாவதினால் ஏற்படும் சோர்வினை குறைக்க ஆப்ரிகாட் உதவுகிறது.

அவகெடோ

அவகெடோ

முகம் பொலிவுடன் இருக்க அவகெடோ சாப்பிடலாம். மேலும், இது கொழுப்பைக் குறைக்கவும், சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், பக்கவாதம் வராமலும் தடுக்கவும் உதவுகிறது.

கேரட்

கேரட்

கேரட் சாப்பிடுவது கண் பார்வை மற்றும் இதயத்திற்கு மிகவும் நல்லது. இவை மலச்சிக்கல் மற்றும் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. அதுமட்டுமல்ல, உடல் எடை குறைக்கவும் உதவுகிறது.

பீட்ரூட்

பீட்ரூட்

பீட்ரூட் அதிகபடியான இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. எலும்புகளை வலிமையாக்குகிறது. குறிப்பிட்ட வகையான புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இதயத்தைப் பாதுகாக்கிறது. உடல் எடை குறைய உதவுகிறது.

ப்ராக்கோலி

ப்ராக்கோலி

இது ஒரு சூப்பர் உணவு. இது உங்கள் கண் பார்வைக்கு மற்றும் எலும்புகளுக்கு நல்லது. மேலும் புற்றுநோய் வராமல் தடுக்க, இரத்த அழுத்தத்தைக் குறைக்க மற்றும் உங்கள் இதயத்தை பாதுகாக்க உதவுகிறது.

ப்ளூ பெர்ரி

ப்ளூ பெர்ரி

இவை இதயத்திற்கு நல்லது. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுபடுத்துகிறது. நினைவாற்றலை மேம்படுத்துகிறது மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

why fruits and vegetables are vital for our health

why fruits and vegetables are vital for our health
Story first published: Tuesday, March 7, 2017, 12:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter