ஸ்வரோவ்ஸ்கியின் தீபாவளி கலை நிறுவல் நிகழ்வின் போது கிரேக்க கடவுள் போல் தோற்றமளித்த தமன்னா!

By: Ashok CR
 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க
    ஷேர் செய்ய    ட்வீட் செய்ய    ஷேர் செய்ய கருத்துக்கள்   மெயில்

இந்திய சினிமாவில் மிகவும் புகழ்பெற்ற நட்சத்திரமாக திகழ்பவர் தமன்னா பாட்டியா. இவர் தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் தான் முக்கியமாக தோன்றுகிறார். 2005-ல் சந்த் சா ரோஷன் செஹ்ரா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் இவர். அழகாகவும், வசீகரமாகவும் உள்ள இவர் மிகுந்த வலிமையையும் கவர்ச்சியையும் கொண்டுள்ளார். சமூக நிகழ்வுகள் என வரும் போது தமன்னா மிகவும் முனைப்புடன் செயலாற்றுகிறார்.

சமீபத்தில் ஸ்வரோவ்ஸ்கியின் தீபாவளி நிறுவல் நிகழ்வின் போது இவர் அங்கு காணப்பட்டார். மும்பையில் உள்ள பல்லாடியம் மால் வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், டெரானி கௌசுவர் ஸ்ட்ரேப்லெஸ் கவுன் ஒன்றை அணிந்து ஆளுமை தோற்றுத்துடன் காணப்பட்டார் தமன்னா. ஊதா நிற ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து, இந்த நிகழ்விற்கு வந்த அனைவரையும் தன்னை திரும்பி பார்க்க வைத்தார். கிட்டத்தட்ட ஒரு கிரேக்க கடவுளை போலவே காட்சியளித்தார்.

Tamannaah's Greek Goddess Look At The Launch Of Swarovski's Diwali Art Installation Event

மேலும் மிகவும் குறைந்தளவிலான மேக்-அப் மற்றும் அணிகலன்களை மட்டுமே போட்டிருந்தார். இது அவருக்கு சிறந்த தோற்றத்தை அளித்தது. மேலும் தன் கூந்தலை அப்-டூ ஸ்டைலில் அலங்கரித்திருந்தார். மேலும் தன் ஊதா நிற கவுனிற்கு ஒத்துப்போகின்ற வகையில் மினுமினுக்கும் கைப்பை ஒன்றை வைத்திருந்தார்.

மிக அழகாகவும் அற்புதமாகவும் அவர் காட்சியளித்தார். அவருடைய தோற்றத்தை நாங்கள் விரும்புகிறோம், நீங்களும் தானே?

Subscribe Newsletter