ஏர்போர்ட் பேஷன்: வருண் தவான் மற்றும் கிருதி சனோனின் டெனிம் லுக்!

By: Srinivasan P M
Subscribe to Boldsky

வருண் தவான் மற்றும் கிருதி சனோன் ஆகியோர் பாலிவுட்டின் புது முகங்கள். கவர்ச்சியான, திறமையான மற்றும் நவீன பேஷனில் மிதக்கும் நட்சத்திரங்கள். வருண் பெண்களிடையே ஒரு கட்டுறுதியான ஆணாகவும். கிருதி ஆண்களிடையே ஒரு இளவரசியாகவும் திகழ்கிறார்கள். தற்போது இருவரும் தில்வாலே பட ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறார்கள்.

அண்மையில் இந்தப் பட ஷூட்டிங்கில் இருந்து அவர்கள் திரும்புகையில் ஏர்போர்டில் அவர்களை படம் பிடித்தோம். வருண் சும்மா செம ஹாட்டா இருந்தாரு. கருப்பு நிற வெஸ்டையும் டெனிம் பேண்டையும் அணிந்திருந்தார். பொதுவாகவே கட்டுமஸ்தாகவும், கவர்ச்சியாகவும் அறியப்படுபவர் அவர்.

 Varun Dhawan And Kriti Sanon's Denim Looks

அழகாக, அருமையாக கொழுக் மொழுக்கென்று இருக்காங்கன்னு யாரையாவது சொல்லனும்னா, ஹீரோபண்தி படத்தில் நடிக்கத் துவங்கிய கிருதியைப் பார்த்து தான் சொல்ல வேண்டும். இவர் ஆக்வா கலர் டாப்ஸ் மற்றும், கால்களை ஒட்டிய நீல நிற டெனிம் மற்றும் அதற்குத் தோதாக கருப்பு நிற லெதர் ஜாக்கெட்டும், வெள்ளை ஸ்னீக்கர் ஷூக்களும் அணிந்திருந்தார்.

Airport Fashion: Varun Dhawan Denim Looks

மொத்தத்துல ரெண்டு பேரோட லுக்கும் சூப்பரா இருந்துது? நீங்க என்ன சொல்றீங்க? கமெண்ட் பண்ணுங்க...

English summary

Airport Fashion: Varun Dhawan And Kriti Sanon's Denim Looks

Varun Dhawan and Kriti Sanon are palying opposites in their new movie dilwale. We snapped them in sexy denim looks, when they were coming bck from shoot.
Story first published: Saturday, November 28, 2015, 16:08 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter