Latest Updates
-
பூரிக்கு இப்படி உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க... -
அக்டோபர் 04 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் -
சனி-சூரியன் எதிரெதிர் நிலையில் அமர்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா இந்த கேரளா ஸ்டைல் சிக்கன் மப்பாஸ் செஞ்சு பாருங்க - சுருக்குனு செமையா இருக்கும் -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? வரப்போற வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
4 முட்டை இருந்தா ஹைதராபாத் ஸ்டைலில் இந்த மாதிரி குருமா செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
மகாத்மா காந்தியின் பெயர் 5 முறை பரிந்துரைக்கப்பட்டும் அவருக்கு ஏன் நோபல் பரிசு கிடைக்கவில்லை தெரியுமா? -
கொங்கு ஸ்பெஷல் பருப்பு செலவு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மணமணக்கும்.. வரகரிசி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 03 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம்
கோடை வெயிலால் முகம் கருப்பாகாம இருக்கணுமா? அப்ப இந்த பழங்களை வெச்சு ஃபேஸ் பேக் போடுங்க..
Summer Skin Care Tips In Tamil: சுட்டெரிக்கும் கோடை வெயிலால் சருமம் சேதமடையாமல் இருக்கவும், சருமம் கருமையடையாமல் இருக்கவும் கடைகளில் விற்கப்படும் பலவிதமான அழகு சாதன பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகிறீர்களா? இருப்பினும் எந்த ஒரு பலனும் கிடைத்தபாடில்லையா? அப்படியானால் இப்படி வீணாக பணத்தை செலவழிப்பதற்கு பதிலாக, இயற்கை பொருட்களைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்பு கொடுங்கள்.

அதுவும் ஒருசில பழங்களைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்கும் போது, சருமமும் ஆரோக்கியமாக இருக்கும், சருமத்தின் பொலிவும் உடனடியாக அதிகரிக்கும். சரி, கோடை வெயிலின் போது எந்த பழங்களைக் கொண்டு சருமத்திற்கு ஃபேஸ் பேக் போடலாம் மற்றும் எப்படி போடலாம் என்று கேட்கிறீர்களா? கீழே சருமத்திற்கு உடனடி பொலிவைத் தரும் சில நேச்சுரல் பழ ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் உங்களுக்கு ஏற்றதை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள்.
1. வாழைப்பழ ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு நன்கு கனிந்த ஒரு வாழைப்பழத்தை எடுத்து நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
2. ஆப்பிள் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு மிக்சர் ஜாரில் பாதி ஆப்பிள் மற்றும் 5-8 திராட்சைப் பழங்களை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 25-30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்திற்கு பொலிவைத் தருவதோடு, ஒரு நேச்சுரல் சன் ஸ்க்ரீன் போன்றும் செயல்படும்.
3. பப்பாளி ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு நன்கு கனிந்த பப்பாளி பழத்தை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
4. ஆரஞ்சு ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் ஆரஞ்சு பழத்தின் சாற்றினை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் கடலை மாவை சேர்த்து, அத்துடன் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் நீரைப் பயன்படுத்தி மென்மையாக முகத்தை ஸ்க்ரப் செய்து கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி, சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ளும்.
5. மாம்பழ ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு நன்கு கனிந்த மாம்பழத்தை எடுத்து மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் ஒரு டீஸ்பூன் முல்தானி மெட்டி பொடியை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள பழங்களைக் கொண்டு ஃபேஸ் பேக்கை போடும் போது, சருமத்திற்கு தேவையான சத்துக்கள் கிடைத்து, சருமம் ஆரோக்கியமாக இருப்பதோடு, சருமம் கருமையாகாமல் அழகாகவும், பொலிவோடும் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications





