For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க கையில சிவப்பு நிறத்துல சிறு சிறு புள்ளிகள் இருக்கா? அப்போ இத செய்யுங்க.

உங்கள் கைகளில் சிவப்பு நிறத்தில் இருக்கும் புள்ளிகளை சங்கடமாக உணருகிறீர்களா, அவற்றை எளிமையான முறையில் அகற்ற சில வழிகள் உள்ளன. இந்த சிவப்பு நிற புள்ளிகள் கெரடோசிஸ் பிலாரிஸ் என்றும் கூறப்படும்.

|

உங்கள் கைகளில் சிவப்பு நிறத்தில் இருக்கும் புள்ளிகளை சங்கடமாக உணருகிறீர்களா, அவற்றை எளிமையான முறையில் அகற்ற சில வழிகள் உள்ளன. இந்த சிவப்பு நிற புள்ளிகள் கெரடோசிஸ் பிலாரிஸ் என்றும் கூறப்படும். மிகவும் பொதுவான மற்றும் பாதிப்பில்லாத ஒன்று. மரபணுக்களினால் கூட இவை ஏற்படலாம். இந்த சிறிய சிவப்பு நிற புள்ளிகள் பெரும்பாலும் கைகளின் பின்புறத்தில் ஏற்படுகின்றன. இந்த சிவப்பு நிற புள்ளிகள் பெரும்பாலும் பெரியவர்களின் தொடைகள் மற்றும் பின்புறத்திலும் சிறியவர்களின் கன்னங்களிலும் ஏற்படுகிறது. அதாவது 50 சதவீத வயதுவந்தோர்களில் 40 சதவீதம் பேர்கள் கெரடோசிஸ் பிலாரிஸ்களால் பாதிக்கப்படுகிறார்கள். உங்களுக்கு மட்டும் உள்ளதா என்ற கவலை தேவையில்லை.

Ways To Get Rid Of Those Little Red Bumps On Your Arms

கெரடோசிஸ் பிலாரிஸ் ரோமங்களை சுற்றியுள்ள அதிகப்படியான கெரட்டின்களினால் ஏற்படுவதாகக் கருதப்படுகிறது. இவை தோலின் மேற்பரப்பில் ஏற்படுவதால் இந்த சிவப்பு நிற புள்ளிகள் வருகின்றன. ஆனால் இது வரையிலும் கெரடோசிஸ் பிலாரிஸுக்கு எந்தவித சிகிச்சையும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த கெரடோசிஸ் பிலாரிஸ் வெயில் காலத்தில் சற்று குறைவாகவும் மாலைகாலத்தில் சற்று அதிகமாகவும் இருக்கும். ஏனெனில் சருமம் வறண்டு இருக்கும் போது இது மிக மோசமானதாக மாறுகிறது. இதற்கான சில சிகிச்சைகள் உள்ளன. ஆனால் இவற்றை முழுவதுமாக அகற்ற முடியாது சற்று குறைக்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஈரப்பதம்

ஈரப்பதம்

உங்கள் ரோமங்களின் மேற்பரப்பை தடுப்பததால் தான் இந்த சிவப்பு நிற புள்ளிகள் ஏற்படுகிறது. எனவே உங்கள் சருமத்தில் இறந்த செல்களை மீட்ட வேண்டும். இதற்க்கு உங்கள் சருமத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளுவது அவசியம். அதாவது சாலிசிலிக் அமிலம், கிளைகோலிக் அமிலம், யூரியா அல்லது அம்மோனியம் லாக்டேட் போன்ற அமிலங்கள் உள்ள மாய்ஸ்சரைசர்கள் பயனுள்ளதாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். மேலும் நீங்கள் உபயோகிக்கும் சோப்பபில் கவனம் தேவை அந்த சோப்பு இன்னும் உங்கள் சருமத்தை வறண்ட சருமமாக மாற்றாது என்பதை உறுதி படுத்திக்கொண்டு பயன்படுத்துங்கள்.

MOST READ: முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் போகவே மாட்டேங்குதா? அப்போ அத மறைச்சுருங்க.

மேற்பூச்சு மருந்துகள்

மேற்பூச்சு மருந்துகள்

மாய்ஸ்சரைசர்கள் தவிர உங்கள் சிவப்பு நிற புள்ளிகளுக்கு நீங்கள் மேற்பூச்சு மருந்துகளை பயன்படுத்தலாம். கிளைகோலிக் அமிலம், ஆல்பா-ஹைட்ராக்ஸி அமிலம் உள்ள கிரீம்களை வாங்கி பயன்படுத்தலாம். இவை இறந்த உயிரணுக்களால் ஆன மேல்தோல் வெளிப்புற அடுக்குகளில் வேலை செய்கிறது. மற்றும் இயற்கையான வடிவிலான சாலிசிலிக் அமிலம், எக்ஸ்ஃபோலியேட், பிசபோலோல் மற்றும் ஷியா வெண்ணெய் ஆகியவை சிவந்த தன்மையைத் தணிக்கும் பண்புகளை கொண்டுள்ளது. மேலும் ஜோஜோபா எண்ணெய், கிராஸ்பீட் மற்றும் இனிப்பு பாதாம் எண்ணெய்கள் மென்மையாக்குவதற்கும் கடினமான திட்டுக்களை ஹைட்ரேட் செய்வதற்கும் உதவும். இவற்றில் எது உங்ககளுக்கு எதில் கிடைக்குமோ அவற்றை பயன்படுத்தலாம்.

தோல் அகற்றுதல்

தோல் அகற்றுதல்

மேற்பூச்சுகளை விட மிக விரைவில் பதிலளிக்க கூடிய ஒன்று தோல் அகற்றுதல். 20 முதல் 30 சதவிகிதம் மருத்துவர்கள் இந்த முறையை பரிந்துரைக்கிறார்கள். அதாவது கிளைகோலிக் அமிலம் தோல்களில் உள்ள இறந்த திசுக்களை வெளியேற்றுகிறது. பின்னர், மேலோட்டமான காயத்தை உருவாக்குகிறது. உடலில் உள்ள இயற்கையான குணப்படுத்தும் செயல்முறையை தூண்டி புதிய தோல்களை வளர்ச்சியடையச் செய்கிறது. இந்த புதிய தோல் வளரும் போது நீங்கள் சற்று முன்னேற்ற்றை காணலாம்.

லேசர் முடி அகற்றுதல்

லேசர் முடி அகற்றுதல்

சிவப்பு நிற புள்ளிகள் உள்ள இடங்களில் நிறைய கனமான முடிகள் இருந்தால் நீங்கள் லேசர் முடி அகற்றுதல் முறையை கையாளலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். கைகளில் உள்ள முடியை வேர்களில் இருந்து அகற்ற இன்டென்ஸ் பல்சட் லைட் (ஐபிஎல்) ஒளிக்கதிர்கள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஒளிக்கதிர்கள் கெரடோசிஸ் பிலாரிஸ்களிலும் சற்று மாற்றத்தைக் கொடுக்கும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். மேலும் கெரடோசிஸ் பிலாரிஸ்களினால் பாதிக்கப்பட்டவர்கள் லேசர் முடி அகற்றுதல் முறை மூலம் சற்று திருப்பதி அடைந்துள்ளனர் என்றும் கூறுகிறார்கள்.

இயற்கையான தேர்வு

இயற்கையான தேர்வு

உங்களுக்கு லேசர் மற்றும் மற்ற செயல்பாடுகளில் ஈடுபாடு இல்லை என்றால் நீங்கள் இயற்கையான வழிகளில் செல்லலாம். மிகச்சிறந்த வழி தேங்காய் எண்ணெய். இது உங்கள் சருமத்தில் உள்ள சிவப்பு நிற புள்ளிகளை அகற்றுவதில் உதவும். கெரடோசிஸ் பிலாரிஸ் உள்ளவர்கள் உடனடியாக இந்த வழியை பின்பற்றலாம். தேங்காய் எண்ணெய் உங்களுக்கு எளிதில் கிடைக்க கூடிய ஒன்றாகும். தேங்காய் எண்ணெயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆரோக்கியமான வைட்டமின்கள் உள்ளன. இவை வறண்ட சருமத்தை ஹைட்ரேட் செய்கின்றன. மேலும் அரிப்புகளை போக்கி சிவப்பு புள்ளிகளை மறைய வைக்க உதவுகின்றன. ஆனால் இதற்கு சற்று நாட்கள் எடுத்துக் கொள்ளும்.

MOST READ: வேக்ஸிங் செய்வதற்கு முன்பு அது உங்கள் சருமத்திற்கு ஏற்றதானு கண்டு பிடிங்க

உணவு கட்டுப்பாடு

உணவு கட்டுப்பாடு

உடலில் உள்ள சிவப்பு நிற புள்ளிகள் மறைய வைக்க உங்கள் உணவிலும் கட்டுப்பாடு அவசியம். அதாவது உண்ணும் உணவில் அதிகமாக மெக்னீசியம் மற்றும் மினரல்களை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் கெரடோசிஸ் பிலாரிஸ்களில் மாற்றம் ஏற்படுவதை நீங்கள் உணருவீர்கள். அதாவது மெக்னீசியம் மற்றும் ஜிங்க் இரண்டும் வறண்ட மற்றும் அரிக்கும் சருமத்திற்கு பதிலளிக்க உதவுகிறது. எனவே இவற்றை உணவில் சேர்த்து விரைவில் சிவப்பு நிற புள்ளிகளை மறைத்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ways To Get Rid Of Those Little Red Bumps On Your Arms.

suffering with red, itchy, bumps that never go away, it’s time to test out one of these effective treatments. officially known as keratosis pilaris, is a very common, harmless, genetic condition that causes small, hard, skin colored to reddish bumps, most often on the back of the arms.
Story first published: Tuesday, August 20, 2019, 12:50 [IST]
Desktop Bottom Promotion