For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த பொருட்களை மட்டும் தப்பி தவறி கூட உங்க முகத்துல நேரடியா பயன்படுத்தாதீங்க...!

வெள்ளை வினிகர் அல்லது ஆப்பிள் சைடர் வினிகராக இருந்தாலும், அதை முழுவதுமாக முகத்தில் பயன்படுத்துவது தீங்கு விளைவிக்கும்.

|

கொரோனா பரவல் காரணமாக கடந்த 40 நாட்களாக அரசு அறிவித்த ஊரடங்கால், பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறோம். தங்களுடைய முக அழகை மேலும் மெருகேற்ற பார்லருக்கு பெரும்பாலான பேங்க்ல செல்லுவது வழக்கம். தற்போது நாடுமுழுவதும் லாக்டவுனில் இருப்பதால், தங்கள் அழகை பற்றி நிறைய பேர் கவலை கொள்கிறார்கள். இந்நிலையில், வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து பலர் அழகு சாதன கிரீம்களாக பயன்படுத்துகிறார்கள்.

Natural ingredients you should never use directly on the face

இயற்க்கை பொருட்களை வைத்து அழகு படுத்திக்கொள்வது நல்லதுதான் என்றாலும், அதன் தன்மை அறிந்து பொருட்களை சருமத்தில் உபயோகப்படுத்த வேண்டும். ஹேர் ஸ்பாக்கள் முதல் ஸ்க்ரப்ஸ் வரை, இப்போது முயற்சிக்க நிறைய வீட்டு வைத்தியங்கள் உள்ளன. இருப்பினும், சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் சில பொருட்களை நாம் தவிர்க்க வேண்டியது அவசியம். தோலில் நேரடியாகப் பயன்படுத்தக் கூடாத சமையலறை பொருட்களின் பட்டியலை இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சை இயற்கையில் அமிலமானது மற்றும் உண்மையில் உங்கள் சருமத்தை இது எரிக்கும். நீங்கள் அதை ஒரு கலவையில் நீர்த்துப்போகச் செய்து குறைந்த அளவில் பயன்படுத்தலாம். மேலும், முகத்தில் தடவுவதற்கு முன்பு பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள். பேட்ச் டெஸ்ட் என்பது ஒரு குறிப்பிட்ட பொருள் ஒருவரின் தோலில் ஒவ்வாமை வீக்கத்தை ஏற்படுத்துகிறதா என்பதை தீர்மானிக்க பயன்படுத்தப்படும் ஒரு முறையாகும்.

MOST READ: இந்த ஊட்டச்சத்து குறைவாக இருந்தால் உங்க எலும்புகள் பெரும் ஆபத்தில் உள்ளது என்று அர்த்தம்...!

டூத் பேஸ்ட்

டூத் பேஸ்ட்

முகத்தின்மீது பற்பசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவான அழகு ஹேக்குகளில் ஒன்றாகும். இது பருவின் அளவைக் குறைக்க முடியும் என்றாலும், இது உங்கள் சருமத்தை எரிச்சலடையச் செய்து தடிப்புகளையும் ஏற்படுத்தும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

எலுமிச்சை சாற்றைப் போலவே, பேக்கிங் சோடாவையும் சருமத்தில் நேரடியாகப் பயன்படுத்தக்கூடாது. இது உங்கள் சருமத்தை எரிச்சலடைய செய்யும். குறிப்பாக உணர்திறன் வாய்ந்த தோல் உள்ளவர்களுக்கு இது அதிக எரிச்சலூட்டும். மேலும், இதில் இயற்கையாக காரத்தன்மை இருப்பதால், இது பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

MOST READ: உடலுறவில் 'குதிரை' பலம் பெற தினமும் இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க போதும்...!

வினிகர்

வினிகர்

வெள்ளை வினிகர் அல்லது ஆப்பிள் சைடர் வினிகராக இருந்தாலும், அதை முழுவதுமாக முகத்தில் பயன்படுத்துவது தீங்கு விளைவிக்கும். இது உங்கள் சருமத்தை எரிச்சலூட்டும் மற்றும் தடிப்புகளை ஏற்படுத்தும். மேலும், இது நிறமிக்கு வழிவகுக்கும்.

உப்பு மற்றும் சர்க்கரை

உப்பு மற்றும் சர்க்கரை

சர்க்கரை மற்றும் உப்பின் சிறிய துகள்கள் கூர்மையான விளிம்புகளைக் கொண்டுள்ளன. அவை தோல் சிராய்ப்புகளை ஏற்படுத்தும். உங்களுக்கு உணர்திறன் வாய்ந்த சருமம் இருந்தால், இந்த பொருட்களை உங்கள் முகத்தில் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Natural ingredients you should never use directly on the face

Here we are talking about the natural ingredients you should never use directly on the face.
Story first published: Thursday, May 14, 2020, 17:22 [IST]
Desktop Bottom Promotion