For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க முகமும், கழுத்தும் ரொம்ப கருப்பா இருக்கா? அதை நீக்க இதோ சில வழிகள்!

உங்கள் முகம் மற்றும் கழுத்து மிகவும் கருப்பாக உள்ளதா? அதை இயற்கைப் பொருட்களைக் கொண்டு வெள்ளையாக்க நினைக்கிறீர்களா? நம் வீட்டு சமையலறையில் உள்ள சில பொருட்கள் அதற்கு உதவி புரியும்.

|

சருமத்தின் நிறம் கருமையாவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் வெயிலில் அதிகம் சுற்றுவது, முதுமை, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அதிகப்படியான நிறமிகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. பல பெண்கள் தங்கள் சருமத்தின் நிறத்தை வெள்ளையாக காட்டுவதற்கு, மேக்கப் போடுவார்கள். ஆனால் அப்படி மேக்கப் போடும் பல பெண்களுக்கு தங்களுக்கு சருமத்திற்கு பொருந்தும் சரியான பொருட்களைத் தேர்ந்தெடுக்க தெரிவதில்லை.

Natural Home Remedies For Uneven Skin Tone On Face And Body

உங்களுக்கும் அப்படி எந்த பொருட்களைத் தேர்ந்தெடுப்பது என்று தெரியவில்லையா? அப்படியானால் மேக்கப் போடுவதை முதலில் நிறுத்திவிட்டு, இயற்கை வழியில் எப்படி சருமத்தை அழகாக்குவது என்று தெரிந்து, அதை முயற்சி செய்யுங்கள். இந்த கட்டுரையில் முகம் மற்றும் கழுத்தில் உள்ள கருமையைப் போக்கி, சருமத்தின் நிறத்தை அதிகரித்துக் காட்டும் சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதை தினமும் செய்தால், நீங்கள் எப்போதும் பளிச்சென்று அழகாக ஜொலிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வழி #1

வழி #1

ஆட்டுப் பால், பேக்கிங் சோடா மற்றும் கடலை மாவு போன்றவை சருமத்தைப் பெற உதவும் சிறப்பான பொருட்கள். ஆட்டுப் பால் சருமத்திற்கு மென்மை அளிக்கும், கடலை மாவு மற்றும் பேக்கிங் சோடா இறந்த செல்களை நீக்கி, சரும நிறத்தை அதிகரித்துக் காட்ட உதவும்.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

* ஆட்டுப் பால் - 2 டேபிள் ஸ்பூன்

* கடலை மாவு - 1 டீஸ்பூன்

* பேக்கிங் சோடா - 1 டீஸ்பூன்

பயன்படுத்தும் முறை:

பயன்படுத்தும் முறை:

* முதலில் ஒருது பௌலில் ஆட்டுப் பால் மற்றும் கடலை மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அதில் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, முகத்தில் தடவ வேண்டும்.

* 15 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

வழி #2

வழி #2

எலுமிச்சை மற்றும் தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு நன்மை அளிக்கக்கூடிய பொருட்கள். இவை சருமத்திற்கு ஊட்டமளிப்பதோடு, சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும். இந்த பொருட்களைக் கொண்டு ஸ்கரப் தயாரித்து, சருமத்திற்கு பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள கருமைகள் மாயமாய் மறைந்துவிடும்.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

* எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்

* சர்க்கரை - 1 டீஸ்பூன்

* தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்

பயன்படுத்தும் முறை:

பயன்படுத்தும் முறை:

* ஒரு பௌலில் தேங்காய் எண்ணெய், சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

வழி #3

வழி #3

பால் பவுடர் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க மற்றும் சருமத்தின் மென்மைத்தன்மையை அதிகரிக்க மிகவும் நல்ல பொருள். பால் பவுடரில் லாக்டிக் அமிலம் உள்ளது. இது சருமத்திற்கு பொலிவைத் தரும்.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

* பால் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்

* ஆரஞ்சு ஜூஸ் - 1 டேபிள் ஸ்பூன்

பயன்படுத்தும் முறை:

பயன்படுத்தும் முறை:

* ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் பால் பவுடர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவ வேண்டும்.

* 15 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரால் முகம் மற்றும் கழுத்தை கழுவ வேண்டும்.

வழி #4

வழி #4

தேன் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, சரும ஆரோக்கியத்திற்கும் நல்லது. சொல்லப்போனால் இது ஒரு வரப்பிரசாதம். தக்காளியில் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கத் தேவையான வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளன.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

* தக்காளி சாறு - 1 டேபிள் ஸ்பூன்

* தேன் - 1 டேபிள் ஸ்பூன்

* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

பயன்படுத்தும் முறை:

பயன்படுத்தும் முறை:

* ஒரு சிறிய கிண்ணத்தில் தக்காளி சாறு, தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு ஒருசேர கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அதை கருப்பாக இருக்கும் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் மட்டுமின்றி, கை, கால்களிலும் தடவலாம்.

* 15 நிமிடம் நன்கு ஊற வைக்கவும். பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

வழி #5

வழி #5

மஞ்சளில் மருத்துவ பண்புகள் அதிகம் உள்ளது. இது பொலிவிழந்து காணப்படும் சருமத்தை பொலிவாக்க உதவுவதோடு, முகத்தில் உள்ள பருக்களையும் தடுக்கும். ஆரஞ்சு ஜூஸ், சருமத்தின் நிறத்தை அதிகரித்துக் காட்ட உதவும்.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

* ஆரஞ்சு ஜூஸ் - 1 டேபிள் ஸ்பூன்

* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

பயன்படுத்தும் முறை:

பயன்படுத்தும் முறை:

* ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ் மற்றும் 1 டீஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* பின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.

* பின்பு நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

* இறுதியில் துணியால் துடைத்துவிட்டு, மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்த வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Natural Home Remedies For Uneven Skin Tone On Face And Body

Do you also feel uneven skin tone on your face and neck? Try these beauty hacks for nourished, hydrated and an even skin tone.
Story first published: Friday, October 25, 2019, 16:49 [IST]
Desktop Bottom Promotion