For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குளிர்காலத்தில் ஏற்படும் சரும பிரச்சினைகளை தீர்க்க இந்த பழ தோள்களை இப்படி பயன்படுத்துங்கள்..!

|

நமது உடலில் கால மாற்றத்திற்கு ஏற்ப பலவித மாற்றங்கள் உண்டாகும். இது உள்ளிருக்கும் உறுப்புகளுக்கும், வெளியே உள்ள உறுப்புகளுக்கும் பொருந்தும். வெயில் காலத்தில் எப்படி உறுப்புகளுக்கு அதிக நீர்சத்து தேவைப்படுகிறதோ, அதே போன்று குளிர் காலத்திலும் நம் உடலுக்கு சில தேவைகள் உண்டாகும்.

குளிர்காலத்தில் ஏற்படும் சரும பிரச்சினைகளை தீர்க்க இந்த பழ தோள்களை இப்படி பயன்படுத்துங்கள்..!
அந்த வகையில் நமது முகத்திற்கும் இது போன்ற சில மாற்றங்கள் ஏற்படும். முக வறட்சி, ஈரப்பதம் குறைதல், வெடிப்பு போன்ற பல பிரச்சினைகள் நமது சருமத்தில் குளிர் காலத்தில் உண்டாகும். இதை சரி செய்ய புதுசா எதையும் செய்ய தேவையில்லை.

நம் வீட்டில் இருக்க கூடிய பழங்களை இந்த பதிவில் கூறுவது போல பயன்படுத்தினாலே போதும். இவ்வாறு செய்தால் எல்லா முக பிரச்சினைகளுக்கு எளிதில் முற்றுப்புள்ளி தந்து விடலாம். குளிர் காலத்தில் முகத்தை பராமரிக்க பழங்களை எப்படி பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆரஞ்சு தோல்

ஆரஞ்சு தோல்

பலவித மருத்துவ பயனும், ஆரோக்கிய பயனும் கொண்டது இந்த ஆரஞ்சு தோல். இதனை இவ்வாறு பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். இதற்கு தேவையானவை..

தேன் 1 ஸ்பூன்

தயிர் 3 ஸ்பூன்

ஓட்ஸ் ஸ்பூன் 1 ஸ்பூன்

ஆரஞ்சு தோல் பொடி 2 ஸ்பூன்

செய்முறை

செய்முறை

முதலில் ஆரஞ்சு தோலை காய வைத்து அரிது கொள்ளவும். பிறகு ஓட்ஸையும் சேர்த்து மீண்டும் அரைத்து கொள்ள வேண்டும். இந்த கலவையுடன் தேன், தயிர் முதலியவற்றை கலந்து முகத்தில் தடவவும். 20 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முக வறட்சி நீங்கும்.

ஆப்பிள்

ஆப்பிள்

கால் வாசி ஆப்பிளை அரைத்து கொண்டு அவற்றுடன் 1 ஸ்பூன் தேன் கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் சென்று முகத்தை வெது வெதுப்பான நீரில் கழுவவும். இவ்வாறு வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் முகம் ஈரப்பதம் பெற்று பொலிவாக இருக்கும்.

வாழைப்பழம்

வாழைப்பழம்

முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி, வெண்மையாக மாற்ற இந்த குறிப்பை ட்ரை செய்து பாருங்கள். இஹற்கு தேவையான பொருட்கள்...

வாழைப்பழம் 1

தேன் 1ஸ்பூன்

தயிர் 1 ஸ்பூன்

MOST READ: விதைகள் இல்லாத பழங்கள் சாப்பிட்டால் மரண பிடியில் மாட்டி கொள்வீர்கள்..! திடுக்கிடும் தகவல்..!

செய்முறை

செய்முறை

வாழைப்பழத்தை சிறிது சிறிதாக அரிந்து, மசித்து கொள்ளவும். பிறகு இதனுடன் தேன் மற்றும் தயிரை சேர்த்து முகத்தில் பூசவும். 15 நிமிடத்திற்கு பின்னர் முகத்தை கழுவலாம். எளிதில் முகத்தை வெண்மையாக வைத்து கொள்ளும் குறிப்பு இதுவே.

தக்காளி

தக்காளி

உடல் ஆரோக்கியத்திற்கு எப்படி தக்காளி பயன்படுகிறதோ, அதே போன்று முகத்தின் அழகை மெருகேற்ற தக்காளி உதவுகிறது. இந்த பலனை அடைய தேவையான பொருட்கள்...

பழுத்த தக்காளி 1

மஞ்சள் 1 ஸ்பூன்

தயிர் 1 ஸ்பூன்

செய்முறை

செய்முறை

தக்காளியின் விதையை நீக்கி விட்டு, அரைத்து கொள்ளவும். பிறகு இதனுடன் மஞ்சள் மற்றும் தயிர் சேர்த்து முகத்தில் தடவவும். 20 நிமிடத்திற்கு பின் முகத்தை வெது வெதுப்பான நீரில் கழுவவும். இந்த குறிப்பை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலனை அடைய முடியும்.

பப்பாளி

பப்பாளி

பலவித நற்பயன்களை தர கூடிய பழங்களில் ஒன்று பப்பாளி. இதனை முகத்திற்கு இந்த குறிப்பில் கூறும் பொருள்களோடு சேர்த்து பயன்படுத்தினால் குளிர் கால சரும பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கலாம்.

தேவையானவை :-

பப்பாளி 10 பீஸ்

தேன் 1 ஸ்பூன்

எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்

MOST READ:தாம்பத்தியத்தில் உங்கள் மனைவியை திருப்திப்படுத்த, இந்த மூலிகை டீயை தினமும் 1 கப் குடியுங்கள்..!

செய்முறை :-

செய்முறை :-

பப்பாளியை நன்றாக மசித்து கொள்ளவும். பிறகு இதனுடன் தேன் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து முகத்தில் பூசவும். 10 நிமிடம் வரை முகத்தில் மசாஜ் கொடுக்கலாம். பிறகு இதனை குளிர்ந்த நீரில் கழுவி விடவும்.

மேற்சொன்ன குறிப்புகள் அனைத்துமே குளிர் கால சரும பிரச்சினைகளை தீர்க்க உதவும் குறிப்புகள். தவறாமல் ட்ரை செய்து பாருங்கள் நண்பர்களே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Homemade fruit face packs that are ideal for winter

Homemade fruit face packs that are ideal for winter
Story first published: Wednesday, January 30, 2019, 17:33 [IST]
Desktop Bottom Promotion