For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ஒரு காய் போதும் உங்க முகத்த கலராக்க... ஆனா இப்படி யூஸ் பண்ணுங்க...

சரும அழகை எப்படி கூட்டுவது, அதிலும் ஜாதிக்காயை சருமத்துக்கு எப்படிஎ பயன்படுத்துவது என்பது பற்றி இங்கே விளக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

|

ஜாதிக்காய் ஒரு நறுமண மசாலாப் பொருள். உணவில் நறுமணத்திற்காகவும் சுவைக்காகவும் இது சேர்க்கப்படுகிறது. இந்திய உணவுகளில் பல்வேறு சமையலில் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தாயகம் இந்தோனேசியா. மைரிஸ்டிகா பிரெக்ரன்ஸ் என்னும் மரத்தின் விதைகளாக இது அறியப்படுகிறது.

Nutmeg For Skin: How To Use The Wonder Spice

வெப்பமண்டல நாடுகளில் வளரும் மரங்களில் இரண்டு மசாலாப் பொருட்களைத் தரும் ஒரே மரம் இதுவாகும். இதில் இருந்து கிடைக்கும் மற்றொரு மசாலாப் பொருள் ஜாதிப்பூ. சூப், கறி தொக்கு, மாமிசம் மற்றும் பல்வேறு இனிப்புகளில் இதனை சிறிதளவு சேர்ப்பதால் அதன் சுவை அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஊட்டச்சத்துக்கள்

ஊட்டச்சத்துக்கள்

ஜாதிக்காய் ஒரு மிகச்சிறந்த பொருளாக விளங்குவது இதன் சுவையால் மட்டுமல்ல, இது ஒரு மருத்துவ தன்மை வாய்ந்த பொருளும் கூட. ஜாதிக்காய் எண்ணெய் மற்றும் வெண்ணெய் பல்வேறு அழகு மற்றும் ஆரோக்கிய நன்மைகள் அடங்கியது. இதற்குக் காரணம், இதில் இருக்கும் முக்கிய ஊட்டச்சத்துகளான மெக்னீசியம், மங்கனீஸ், தாமிரம் மற்றும் வைட்டமின்கள் பி 1 மற்றும் பி 6 ஆகியவையாகும்.

Most Read : வேப்பிலையை இப்படி செஞ்சு தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க... சர்க்கரை நோய் எட்டியே பார்க்காது...

பயன்கள்

பயன்கள்

இதன் தனிப்பட்ட ஆரோக்கிய நன்மைகளை அறிந்து கொள்ள முற்படும்போது ஜாதிக்காய் சருமத்திற்கு எத்தகைய நன்மைகளை தருகிறது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். சருமம் மற்றும் கூந்தலுக்கு ஜாதிக்காய் சிறந்த நன்மைகளை வழங்குகிறது. இந்த பதிவில் நாங்கள் ஜாதிக்காய் மூலம் சருமத்திற்கு எவ்வாறு அழகு சேர்க்கலாம் என்பதை கூறவிருக்கிறோம். தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

சருமத்திற்கு ஜாதிக்காய்

சருமத்திற்கு ஜாதிக்காய்

நிறமிழப்பைக் குறைக்கிறது. சருமத்தில் உண்டாகும் நிறமாற்றம் மற்றும் நிறமிழப்பை குறைக்கும் தன்மை ஜாதிக்காய்க்கு உண்டு என்பது இதன் அற்புத நன்மைகளில் ஒன்றாகும். சருமத்தில் உண்டாகும் கருந்திட்டுகள், நிறமிழப்பு, சூரிய ஒளியில் இருந்து வெளிப்படும் புறஊதா கதிர்களால் உண்டாகும் கட்டிகள் , ஹார்மோன் மாற்றம், வயது முதிர்வு, மருத்துகளால் உண்டாகும் பக்க விளைவுகள் மற்றும் இதர சரும பிரச்சனைகளுக்கு ஜாதிக்காய் மிகச் சிறந்த தீர்வைத் தருகிறது.

ஜாதிக்காய் பேக் தயாரிப்பது எப்படி?

ஜாதிக்காய் பேக் தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள்:

ஜாதிக்காய் தூள்

எலுமிச்சை சாறு

யோகர்ட்

செய்முறை

மேலே கூறிய எல்லா மூலப்பொருட்களையும் ஒரு கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ளவும். இந்த கலவையை உங்கள் முகத்தில் அடர்த்தியாக தடவிக் கொள்ளவும். ஏழு முதல் எட்டு நிமிடங்கள் இந்த கலவை உங்கள் முகத்தில் இருக்கட்டும். பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும். பின்பு இதனைத் தொடர்ந்து முகத்திற்கு மாயச்ச்சரைசெர் பயன்படுத்தவும். ஒரு வாரத்திற்கு மூன்று முறை இதனை பயன்படுத்துவதால் நல்ல பலன் கிடைக்கும்.

MOST READ: இதயம் வேகமா துடிக்கும்போது ஒரு செகண்ட் எகிறி குதிச்சிருக்கா உங்களுக்கு? அது ஏன் தெரியுமா?

சருமத்தை மென்மையாக்க

சருமத்தை மென்மையாக்க

ஜாதிக்காயின் இயற்கையான சொரசொரப்பு தன்மை, சருமத்தை எக்ஸ்போலியெட் செய்ய உதவுகிறது. இதனால் சருமம் மென்மையாகவும் மிருதுவாகவும் மாறுகிறது. அழகை அதிகரிக்க பயன்படுத்தும் இதர சமையலறைப் பொருட்களுடன் சேர்த்து இதனை பயன்படுத்தலாம். இதனால் சருமம் இயற்கையாக பொலிவடைகிறது.

சருமத்தை தளர்த்த உதவும் பேக்

சருமத்தை தளர்த்த உதவும் பேக்

தேவையான பொருட்கள்

தேன்

கிராம்பு எண்ணெய்

ஜாதிக்காய்

எலுமிச்சை சாறு

பேக்கிங் சோடா

செய்முறை

தேன் மற்றும் கிராம்பு எண்ணெயில் பேக்கிங் சோடாவை சேர்க்கவும். பிறகு அந்த கலவையில் ஜாதிக்காய் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து விழுதாக்கவும். இந்த பேக் கொண்டு சருமத்தை மென்மையாக இரண்டு நிமிடம் மசாஜ் செய்யவும். ஜாதிக்காய் உங்கள் சரும துளைக்குள் இறங்கும்போது உங்கள் சருமம் சூடாவதை உங்களால் உணர முடியும். இதன் மூலம் உங்கள் சருமத்தின் ஆழம் வரை சென்று ஜாதிக்காய் செயல்படுகிறது. பிறகு வெதுவெதுப்பான நீரால் உங்கள் முகத்தைக் கழுவி துடைக்கவும்.

எண்ணெய் சருமத்திற்கு

எண்ணெய் சருமத்திற்கு

எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு ஒரு பிரச்சனை உள்ளது. காலையில் எவ்வளவு பிரெஷ்ஷாக இருந்தாலும் அந்த நாளின் முடிவில் முகத்தில் எண்ணெய் வழிந்து சருமத்தின் துளைகளுக்குள் எண்ணெய் ஊடுருவி துளைகளைப் பெரிதாக்குகிறது. இந்த பிரச்னைக்கு ஒரு சிறந்த தீர்வைத் தருவது ஜாதிக்காய். இது துளைகள் சுருங்குவதற்கு உதவுகிறது. இதனால் வழக்கமான ஆரோக்கிய சருமம் கிடைக்கப் பெறுகிறது. மேலும் ஜாதிகாய்க்கு அழற்சி எதிர்ப்பு மற்றும் கிருமி எதிர்ப்பு தன்மை இருப்பதால் கட்டிகள் மற்றும் பருக்கள் வராமல் சருமத்தை பாதுகாக்கிறது.

MOST READ: உட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது? வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்?

எண்ணெய் சருமத்திற்கு ஜாதிக்காய் பேக்

எண்ணெய் சருமத்திற்கு ஜாதிக்காய் பேக்

தேவையான பொருட்கள்

ஜாதிக்காய் தூள்

தேன்

செய்முறை

இரண்டு மூலப்பொருட்களையும் ஒன்றாகக் கலந்து உங்கள் சருமத்தில் தடவவும். பத்து நிமிடங்கள் இந்தக் கலவை உங்கள் முகத்தில் இருக்கட்டும். தேன் மற்றும் ஜாதிக்காய் ஆகிய இரண்டிற்கும் கிருமி எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் இது சருமத்தை அழுக்கு மற்றும் கட்டிகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.

இளமையான சருமத்துக்கு

இளமையான சருமத்துக்கு

ஜாதிக்காயில் அன்டி ஆக்சிடென்ட் மற்றும் வயது முதிர்வைத் தடுக்கும் தன்மை உண்டு. மேலும் அணுக்களை சேதப்படுத்தும் கூறுகளுடன் இது போராட உதவுகிறது. இந்த கூறுகள் உங்கள் சருமத்தில் அழுத்தத்தை உண்டாக்கி உங்களை முதிர்ச்சியுடன் தோன்றச் செய்கிறது. இந்த அழுத்தம் காரணமாக முகத்தில் மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்கள் தோன்றுகிறது. இதனைத் தவிர்க்க உங்கள் அழகு குறிப்புகளில் ஜாதிக்காயை பயன்படுத்தலாம்.

ஜாதிக்காய் பேஸ் பேக்

தேவையான பொருட்கள்

ஜாதிக்காய் தூள்

தேன்

யோகர்ட்

செய்முறை

ஜாதிக்காய் தூள், தேன் மற்றும் யோகர்ட் சேர்த்து ஒரு கலவை தயாரிக்கவும். இதனை உங்கள் முகத்தில் தடவி பத்து நிமிடம் அப்படியே விடவும். பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும்.

MOST READ: உங்க முடியும் இப்படி அடர்த்தியா கருகருன்னு வளரணுமா? கடுகு எண்ணெயை இப்படி தேய்ங்க...

இயற்கை க்ளென்சர் - ஜாதிக்காய்

இயற்கை க்ளென்சர் - ஜாதிக்காய்

ஜாதிக்காய் சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்க வைக்க உதவுகிறது. இதனால் சருமம் சோர்வடையாமல் தடுக்கிறது. மேலும் வயது முதிர்விற்கான அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது. கடையில் விற்கும் மற்ற அழகு சாதனப் பொருட்களை வாங்கி பயன்படுத்துவதைக் காட்டிலும் இந்த இயற்கை மூலப்பொருளை பயன்படுத்தி உங்கள் அழகை மேம்படுத்துவது சருமத்திற்கு ஏற்றதாக கருதப்படுகிறது. இதனால் சருமத்திற்கு சிறந்த சிகிச்சை அளிக்க முடிகிறது.

க்ளென்சிங் டோனர் செய்வது எப்படி ?

க்ளென்சிங் டோனர் செய்வது எப்படி ?

ஆர்கானிக் பால் அல்லது தேங்காய் பால்

ஜாதிக்காய் தூள்

இந்த இரண்டு மூலப்பொருட்களையும் ஒன்றாகக் கலந்து முகத்திற்கு தடவவும். பாலில் இருக்கும் லாக்டிக் அமிலம் சருமத்திற்கு மிருதுவான தன்மையை அளிக்க உதவுகிறது. உங்கள் சருமம் அழகாகவும் பொலிவாகும் மாறுகிறது.

உங்கள் சரும அழகைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் ஜாதிக்காயை இனி நிச்சயம் பயன்படுத்திப் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Nutmeg For Skin: How To Use The Wonder Spice

here we are giving some tips for your skin beauty particularly with Nutmeg. and How To Use The Wonder Spice.
Story first published: Saturday, October 13, 2018, 14:48 [IST]
Desktop Bottom Promotion