For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கருப்பா இருக்கீங்கனு வருத்தமா இருக்கா? இந்த கடலைய அரைச்சு பூசுங்க கலராகிடுவீங்க...

இயற்கையான கெமிக்கல் இல்லாமல் சிகப்பழகு பெற இங்கே சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

|

சருமத்தில் மெலனின் இருப்பை பொறுத்தே மனித தோலின் நிறங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. சருமம் கருப்பு முதல் இளஞ்சிவப்பு நிறம் வரை பொதுவாக வகை படுத்தப்படுகிறது. சருமத்திற்கு அடியில் இரத்த குழாய்கள் இருக்கும். சரும நிறத்தில் வேறுபாடு உண்டாவதற்கு முக்கிய காரணம், மரபணு அல்லது பாரம்பரியம் ஆகும்.

Natural Tips to become Fair

நம்மால் சரும நிறத்தை மாற்ற இயலாது, ஆனால் அதன் அழகை இயற்கையான தீர்வுகள் கொண்டு பாதுகாக்க மற்றும் அதிகரிக்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நோ கெமிக்கல் பிளீச்

நோ கெமிக்கல் பிளீச்

ரசாயன ப்ளீச் மூலம் சருமத்தை வெண்மையாக்க முயற்சிக்க வேண்டாம். இதனால் சருமம் சேதமடையலாம். இதற்கு மாற்றாக இந்த வீட்டுத் தீர்வுகளை முயற்சிக்கலாம். எலுமிச்சை, தயிர், தேன், வெள்ளரிக்காய், பச்சை உருளைக் கிழங்கு, தக்காளி போன்றவற்றிற்கு இயற்கையான ப்ளீச் போன்ற தன்மைகள் இருப்பதால் இவற்றைப் பயன்படுத்தலாம்.

அரிசி மாவு

அரிசி மாவு

அரிசி மாவு நம்முடைய எல்லோர் வீடுகளிலும் இருக்கக்கூடியது தான். அந்த அரிசி மாவை வைத்தே நம்முடைய நிறத்தை அதிகரித்துக் கொள்ள முடியும். அரிசி மாவுடன் சிறிதளவு தயிர் சேர்த்து முகத்திற்கு தடவவும். பின்பு மென்மையாக சுழல் வடிவில் மசாஜ் செய்து, 5 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவவும்.

தயிர்

தயிர்

தயிர் ஒரு ஸ்பூன், சிறிதளவு தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து முகத்தில் தடவவும். இதனால் சருமம் வெண்மையாகிறது.

உருளைக்கிழங்கு சாறு

உருளைக்கிழங்கு சாறு

உருளைக் கிழங்கு சாறு மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து முகத்தில் தடவவும். உருளைக்கிழங்கு இயற்கையாகவே சருமத்தின் நிறத்தை மேன்மைப்படுத்த உதவும்.

கொண்டைக்கடலை

கொண்டைக்கடலை

கொண்டைக்கடலை பொடியில் சிறிதளவு நீர் சேர்த்து கலந்து முகத்தில் தடவவும். 15-20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும். இதனால் உங்கள் சருமம் வெண்மையாகிறது.

தக்காளி

தக்காளி

சிறிதளவு தயிர் மற்றும் தக்காளி சாற்றை கலந்து முகத்திற்கு தடவவும். பின்பு 20 நிமிடம் கழித்து குளிக்கவும். தினமும் குளிப்பதற்கு முன்பாக, இதை செய்து வரலாம்.

ஓட்ஸ்

ஓட்ஸ்

ஓட்சுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து முகத்திற்கு தடவி ஒரு ஸ்க்ரப் போல் பயன்படுத்தவும். இது ஒரு இயற்கை ஸ்க்ரப் என்பதால் இறந்த அணுக்கள் சருமத்தில் இருந்து விரைந்து வெளியேறி இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கும். ஓட்சுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவுவதால் முகத்தின் அழகு இயற்கையாக அதிகரிக்கிறது.

பால்

பால்

சிறிதளவு பாலுடன் 3 துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் தடவவும். அப்படியே ஊற விட்டு, 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும். சருமத் துளைகளுக்குள் ஒளிந்திருக்கும் அழுக்குகளை இது வெளியேற்றும்.

தேன்

தேன்

எலுமிச்சை சாற்றுடன் தேன் சேர்த்து தயாரிக்கும் கலவை ஒரு இயற்கையான ப்ளீச். இது சருமத்தில் உண்டாகும் கருமை மற்றும் பரு, கரும்புள்ளிகள் ஆகியவற்றையும் நீக்கி. சருமத்தை மென்மையாக வைத்திருக்கும் ஆற்றல் கொண்டது.

எலுமிச்சைப் பொடி

எலுமிச்சைப் பொடி

காய்ந்த எலுமிச்சை தோலை பொடியாக்கி சேமித்து வைத்துக் கொள்ளலாம். வீட்டில் தயாரிக்கும் பேஸ் பேக்குகளில் இந்த பொடியை சேர்ப்பதால் இயற்கை ப்ளீச்சின் தன்மை கிடைக்கிறது.

பழங்கள்

பழங்கள்

பிரெஷ் பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்கொள்ளுதல், அதிகமான அளவு தண்ணீர் பருகுதல், கடுமையான வெயிலில் வெளியில் செல்லாமல் இருத்தல் போன்றவை சரும அழகை பாதுகாக்கும் முயற்சிகள் ஆகும்.

இறுதியாக, நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே உங்களை நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். கருமையாக இருந்தாலும் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் முக்கியம். கருப்பு ஒரு வித அழகுதான் என்பதை மறக்க வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Natural Tips to become Fair-Fairness tips

Here we give you some beauty tips for fair skin that show you how to get fair skin naturally
Story first published: Tuesday, August 21, 2018, 18:02 [IST]
Desktop Bottom Promotion