முகத்தில் உள்ள அசிங்கமான பிம்பிளைப் போக்கும் ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்குகள்!

Posted By:
Subscribe to Boldsky

ஏராளமான மக்கள் சந்திக்கும் ஓர் சரும பிரச்சனை தான் பிம்பிள். எண்ணெய் பசை சருமத்தைக் கொண்டவர்கள் தான் பிம்பிளால் அதிகம் அவஸ்தைப்படுவார்கள். அதோடு டீனேஜ் பருவ சிறுவர், சிறுமிகள் கூட இந்த பிம்பிளால் அதிகம் அவஸ்தைப்படுவார்கள். பிம்பிள் வந்தால், அது போகும் போது கருப்பு நிறத்தில் தழும்புகளை விட்டுச் செல்லும். இது சரும அழகை இன்னும் கெடுக்கும் வகையில் இருக்கும்.

Ayurvedic Face Masks For Pimple Problem

இப்படிப்பட்ட பிம்பிள் பிரச்சனைக்கு பலர் கடைகளில் விற்கப்படும் க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். அவற்றில் உள்ள கெமிக்கல்கள் உடனடியாக பிம்பிளைப் போக்குவதோடு, சருமத்தில் பக்க விளைவுகளையும் உண்டாக்கும். அதோடு சரும செல்களின் ஆரோக்கியமும் பாதிக்கப்படும்.

எனவே இப்படி சரும செல்களுக்கு தீங்கு உண்டாக்கும் க்ரீம்களைப் பயன்படுத்தி பிம்பிளைப் போக்குவதற்கு பதிலாக, இயற்கை வழிகளின் மூலம் பிம்பிளைப் போக்க முயற்சிப்பதே புத்திசாலித்தனம்.

அதிலும் ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் ஃபேஸ் மாஸ்க்குகளைப் போட்டு வந்தால், பிம்பிள் போவதோடு, சரும செல்களின் ஆரோக்கியமும் மேம்பட்டு, சரும பொலிவு அதிகரித்து, முகம் பிரகாசமாகவும், புத்துணர்ச்சியுடனும் அழகாகவும் காட்சியளிக்கும். சரி, இப்போது பிம்பிளைப் போக்கும் சில ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்குகளைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வேப்பிலை மற்றும் சிவப்பு சந்தனம்

வேப்பிலை மற்றும் சிவப்பு சந்தனம்

* ஒரு டேபிள் ஸ்பூன் வேப்பிலை பொடி மற்றும் 1 டேபிள் ஸ்பூன் சிவப்பு சந்தன பொடியை ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும்.

* இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால், முகத்தில் அசிங்கமாக இருக்கும் பிம்பிள் விரைவில் மறைந்துவிடும்.

சந்தனம் மற்றும் மஞ்சள்

சந்தனம் மற்றும் மஞ்சள்

* ஒரு பௌலில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் சந்தன பவுடரை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைத்து, நீரால் கழுவ வேண்டும்.

* இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வந்தால், முகத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

முல்தானி மெட்டி, புதினா, கிராம்பு

முல்தானி மெட்டி, புதினா, கிராம்பு

* 2-3 கிராம்பு, புதினா இலைகள் மற்றும் 1 டீஸ்பூன் முல்தானி மெட்டி ஆகியவற்றை நீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

* இந்த மாஸ்க்கில் உள்ள கிராம்பு சற்று எரிச்சலை உண்டாக்கும். அதனால் புதினா இலைகளை சற்று அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

வேப்பிலை, துளசி, சந்தனம்

வேப்பிலை, துளசி, சந்தனம்

* ஒரு பௌலில் சந்தன பவுடர், மஞ்சள் தூள், வேப்பிலை பொடி மற்றும் துளசி பொடி ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் முகத்தைக் கழுவ வேண்டும்.

* இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால், முகத்தில் இருக்கும் பிம்பிள் மட்டுமின்றி, வெள்ளைப்புள்ளிகளும் அகலும்.

புதினா மற்றும் துளசி

புதினா மற்றும் துளசி

* 6-8 புதினா இலைகளுடன், துளசி இலைகளையும் எடுத்து அரைத்து, அத்துடன் கடலை மாவை சேர்த்து நீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* பின் அந்த கலவையை முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

* இப்படி தினமும் ஒருமுறை செய்து வந்தால், முகத்தில் உள்ள பிம்பிள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

பட்டை

பட்டை

* பட்டையை லேசாக வறுத்து, பொடி செய்து கொள்ள வேண்டும். பின் அதில் தேன் மற்றும் குளிர்ந்த பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* பின்பு இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

* பிம்பிள் அதிகம் இருப்பவர்கள் இந்த மாஸ்க்கை தினமும் பயன்படுத்துவது நல்லது.

கற்றாழை மற்றும் மஞ்சள்

கற்றாழை மற்றும் மஞ்சள்

* ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொண்டு, அத்துடன் 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து நீரில் கழுவ வேண்டும்.

* இப்படி தினமும் செய்து வந்தால், பிம்பிள் வருவதைத் தடுக்கலாம்.

மஞ்சள், தேன் மற்றும் பால்

மஞ்சள், தேன் மற்றும் பால்

* ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அந்த கலவையை நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* பின் அதை முகத்தில் தடவி சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்து, 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

முல்தானி மெட்டி மற்றும் எலுமிச்சை சாறு

முல்தானி மெட்டி மற்றும் எலுமிச்சை சாறு

* ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடி, 1/2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு நீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* பின் அந்த கலவையை முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் முகத்தை நீரால் கழுவ வேண்டும்.

* இந்த மாஸ்க் பிம்பிளின் வளர்ச்சியைக் குறைத்து, பிம்பிள் பிரச்சனையில் இருந்து முற்றிலும் விடுவிக்கும்.

பூண்டு மற்றும் தேன்

பூண்டு மற்றும் தேன்

* சிறிது பூண்டு பற்களை அரைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் இந்த கலவையை பிம்பிள் மீது தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும்.

* இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்தால், பிம்பிள் காணாமல் போகும்.

மாதுளை

மாதுளை

* மாதுளையின் விதைகளை அரைத்து, தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் இந்த கலவையை முகத்தில் தடவி சிறிது நேரம் நன்கு ஊற வைத்து, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

* இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 4 முறை செய்து வர, பிம்பிள் சீக்கிரம் மறைந்துவிடும்.

எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர்

எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர்

* எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டரை சரிசம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

* பின் பஞ்சுருண்டை பயன்படுத்தி, இந்த கலவையை முகத்தில் தடவ வேண்டும்.

* 10 நிமிடம் கழித்து மீண்டும் தடவ வேண்டும். பின்பு 30 நிமிடம் கழித்து, முகத்தைக் கழுவுங்கள். பிம்பிள் மாயமாய் மறையும்.

கேரட்

கேரட்

* நற்பதமான கேரட்டை அரைத்து, அத்துடன் சிறிது தேன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

* பின் அந்த கலவையை முகத்தில் தடவி நன்கு காய வையுங்கள்.

* மாஸ்க் நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுங்கள். இப்படி தினமும் செய்தால் பிம்பிள் போவதோடு, சருமமும் பொலிவோடு இருக்கும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

* இது மற்றொரு சிறப்பான பிம்பிளைப் போக்க உதவும் மாஸ்க். இதற்கு வைட்டமின் ஏ, பி, சி நிறைந்த உருளைக்கிழங்கு போதும்.

* ஒரு பௌலில் உருளைக்கிழங்கை அரைத்து, சிறிது தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

தக்காளி

தக்காளி

* பாதி தக்காளியை அரைத்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இதனால் பிம்பிள் விரைவில் மறைந்துவிடும்.

* இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால், பிம்பிள் பிரச்சனையே வராது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ayurvedic Face Masks For Pimple Problem

Here are some ayurvedic face masks for pimple problem. Read on to know more...
Subscribe Newsletter