For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தேனும் தக்காளியும் கலந்த மாஸ்க் உங்கள் முகத்தில் எப்படி மேஜிக் செய்யும் என தெரியுமா?

இங்கே தக்காளி மற்றும் தயிரை வைத்து ஒரு பேஸ் பேக் செய்வது எப்படி என்று கொடுக்கப்பட்டுள்ளது. இதை செய்வதால் முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி, முகத்தை பொலிவுடன் வைக்க உதவும்.

By Divyalakshmi Soundarrajan
|

ஹோலிப் பண்டிகை முடிந்து விட்டது. வண்ணப் பொடிகள் தூவி விளையாடி மகிழ்ந்து விட்டோம். விளையாடிவிட்டு அந்த பொடிகளால் முகத்திலும் ஆடைகளிலும் ஏற்பட்ட கறைகளையும் கழுவி சுத்தம் செய்து விட்டோம். முகத்தின் மேலே ஏற்பட்ட கறையைப் போக்கினால் மட்டும் போதுமா என்ன?

வண்ணப் பொடிகள் இயற்கையான முறையில் தயாரிப்பது என்பது சாத்தியமன்று. எப்படியும் அவற்றை தயாரிக்க பல்வேறு இரசாயன வேதிப் பொருட்களை உபயோகித்திருப்பர். அவற்றை நம் சருமத்தில் பூசி விளையாடுவதால் நமக்கு ஆபத்து தான். அது நிறைய சருமப் பிரச்சனைகளை உருவாக்கக்கூடும்.

Tomato yogurt hydrating mask to soften your skin

அவ்வாறு அது எந்த பிரச்சனையையும் உருவாக்காமல் இருக்க வேண்டும் என்றால் உடனே இங்கே கொடுக்கப்பட்டுள்ள எளிமையான இயற்கை வைத்திய முறையை செய்துப் பாருங்கள்.

இங்கே தக்காளி மற்றும் தயிரை வைத்து ஒரு பேஸ் பேக் செய்வது எப்படி என்று கொடுக்கப்பட்டுள்ளது. இதை செய்வதால் முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி, முகத்தை பொலிவுடன் வைக்க உதவும். வாருங்கள், இப்போது அதற்குத் தேவையான பொருட்கள், செய்முறை மற்றும் அவற்றின் பிற பலன்கள் பற்றியும் தெரிந்துக் கொள்வோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்

1 . தக்காளி - 1

2 . தயிர் - 2 ஸ்பூன்

3 . எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்

4 . உப்பு - 1 ஸ்பூன்

 செய்முறை

செய்முறை

முதலில் தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அத்துடன் தயிர், எலுமிச்சைச் சாறு, உப்பு ஆகியவற்றை சேர்க்க வேண்டும். எல்லாவற்றையும் நன்கு ஒரு சேர கலந்துக் கொள்ள வேண்டும். ஒரு பேஸ்ட் போல கலந்துக் கொள்ள வேண்டும்.

 செய்முறை

செய்முறை

தக்காளி மற்றும் தயிர் கலந்த அந்த பேஸ்டை முகத்தின் எல்லா இடங்களிலும் பரவலாக தேய்த்துக் கொள்ள வேண்டும். ஒரு 5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். 10 நிமிடம் முகத்திலேயே ஊற விடுங்கள். பின்னர் குளிர்ந்த நீரினால் முகத்தைக் கழுவி விடுங்கள்

பிற நன்மைகள்

பிற நன்மைகள்

தக்காளியில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. இது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு நமது சருமத்திற்கும் பொழிவைத் தருகிறது.

பிற நன்மைகள்

பிற நன்மைகள்

தினமும் தக்காளியை முகத்திற்கு உபயோகிப்பதால் அது முகத்திற்கு நல்ல பிரகாசமான மற்றும் பொழிவான நிறத்தை நிச்சயம் கிடைக்கச் செய்கிறது.

பிற நன்மைகள்

பிற நன்மைகள்

தினமும் தக்காளி உபயோகிப்பது சருமத்திற்கு ஆக்ஸிஜனை உறிஞ்சிக் கொள்ள அனுமதிக்ககிறது. இதனால், முகத்தில் வயதாவதால் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் கோடுக்கள் வராமல் தடுக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tomato yogurt hydrating mask to soften your skin

Tomato yogurt hydrating mask to soften your skin
Story first published: Friday, March 31, 2017, 17:12 [IST]
Desktop Bottom Promotion