முகம் களையிழந்து இருக்குதா? கடலைமாவை இப்படி யூஸ் பண்ணி ஜொலிப்பை பெறுங்க!!

Posted By: Suganthi Ramachandran
Subscribe to Boldsky

கடலை மாவு நாம் நீண்ட காலமாக அழகு பராமரிப்புக்கு பயன்படுத்தி வந்த பொருளாகும். இதை தினமும் பேஸ் பேக்காக பயன்படுத்தினால் நிறைய நன்மைகள் கிடைக்கும். இது உங்கள் அழகை மேம்படுத்த செய்கிறது.

கடலை மாவு ஒரு அற்புதமான இயற்கை பியூட்டி பொருளாகும். இது அகலமான பரந்த சருமம் மற்றும் முடிக்கு மாஸ்க்காக பயன்படுத்தலாம்.

The 5 Best Gram Flour Face Packs To Treat Common Skin Issues

உண்மையாக சொல்லப் போனால் ஒவ்வொரு இந்தியர்களும் தங்களது இளமை பருவத்தில் கடலை மாவு மாஸ்க் பயன்படுத்தி தங்களது களையிழந்த முகம், முகச் சுருக்கம், சூரிய ஒளிக்கதிர்களால் சரும பாதிப்பு போன்றவற்றை சரியாக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பர்.

இங்கே உங்களுக்காக டாப் 5 கடலை மாவு பேஸ் பேக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக இது உங்கள் சரும பிரச்சினைகளுக்கு தீர்வு தரும். சரி வாங்க அதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1.களையிழந்த முகத்திற்கு பேஸ் பேக்

1.களையிழந்த முகத்திற்கு பேஸ் பேக்

தேவையான பொருட்கள் :

2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு

2 டேபிள் ஸ்பூன் சந்தனப் பொடி

2 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் ஜூஸ்

2 டேபிள் ஸ்பூன் தக்காளி ஜூஸ்

2 டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸ்

கொஞ்சம் யோகார்ட்

கொஞ்சம் ரோஸ் வாட்டர்

செய்முறை

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை நன்றாக கலக்க வேண்டும். கலவையானது மிகவும் கெட்டியாக மற்றும் நீர்மமாக இல்லாமல் சரியான பதத்தில் இருக்க வேண்டும். இப்பொழுது இந்த பேஸ்ட்டை பிரஷ் அல்லது கைவிரல்களால் முகத்தில் தடவி 20 நிமிடங்கள் உலர வைக்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் உங்கள் சருமம் புத்துணர்ச்சி பெறும்.

2. சரும நிறமாற்றத்திற்கான பேஸ் பேக்

2. சரும நிறமாற்றத்திற்கான பேஸ் பேக்

தேவையான பொருட்கள்

2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு

2 டேபிள் ஸ்பூன் பால்

2 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் ஜூஸ்

2 டேபிள் ஸ்பூன் தக்காளி ஜூஸ்

2 டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸ்

2 டேபிள் ஸ்பூன் யோகார்ட்

கொஞ்சம் மஞ்சள் தூள்

செய்முறை

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை நன்றாக கலந்து பேஸ்ட்டாக்கி முகத்தில் தடவி தேய்க்க வேண்டும். பிறகு 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் வெயிலினால் ஏற்பட்ட கருமையை போக்கிடும்.

 3.சருமம் வயதாவதை தடுக்கும் பேஸ் பேக்

3.சருமம் வயதாவதை தடுக்கும் பேஸ் பேக்

தேவையான பொருட்கள்

2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு

2 டேபிள் ஸ்பூன் பால்

2 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் ஜூஸ்

1 முட்டையின் வெள்ளை கரு

2 விட்டமின் ஈ மாத்திரைகள்

2 டேபிள் ஸ்பூன் யோகார்ட்

2 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய்

செய்முறை

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை நன்றாக கலந்து பேஸ்ட்டாக்கி முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைக்க வேண்டும். இதை உலர விடக் கூடாது. அதற்கு கொஞ்சம் பால் எடுத்து பிரஷ் அல்லது காட்டன் பஞ்சில் நனைத்து முகத்தில் தடவ வேண்டும். பிறகு 20 நிமிடங்கள் கழித்து நீரில் கழுவினால் உங்கள் சருமம் மாற்றம் பெற்றிருப்பதை காணலாம்.

4.முகப் பருவிற்கான பேஸ் பேக்

4.முகப் பருவிற்கான பேஸ் பேக்

தேவையான பொருட்கள்

டேபிள் ஸ்பூன் கடலை மாவு

2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி

2 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் ஜூஸ் அல்லது ரோஸ் வாட்டர்

2 டேபிள் ஸ்பூன் வேப்பிலை பொடி

2 டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸ்

2 டேபிள் ஸ்பூன் யோகார்ட்

செய்முறை

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை நன்றாக கலந்து பேஸ்ட்டாக்கி முகத்தில் தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும். பிறகு நீரில் கழுவ வேண்டும். இதை தினமும் செய்து வந்தால் உங்கள் முகப் பருக்கள் குறைந்திருப்பதை காணலாம்.

 5.முகத் தழும்புகளுக்கான பேஸ் பேக்

5.முகத் தழும்புகளுக்கான பேஸ் பேக்

தேவையான பொருட்கள்

2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு

2 டேபிள் ஸ்பூன் சந்தனப் பொடி

கொஞ்சம் யோகார்ட்

கொஞ்சம் மஞ்சள் தூள்

2 விட்டமின் ஈ மாத்திரைகள்

செய்முறை

மேலே குறிப்பிட்டுள்ள எல்லா பொருட்களையும் நன்றாக கலந்து பேஸ்ட்டாக்கி முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து நீரில் கழுவினால் உங்கள் முகத் தழும்புகள் குறைந்திருப்பதை காணலாம். இந்த பேஸ் பேக்கை நீங்களும் பயன்படுத்தி உங்கள் சரும பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வையுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The 5 Best Gram Flour Face Packs To Treat Common Skin Issues

The 5 Best Gram Flour Face Packs To Treat Common Skin Issues
Story first published: Saturday, July 1, 2017, 7:00 [IST]