உங்கள் மூக்கில் இந்த அடையாளம் இருக்கா? அப்போ இத கண்டிப்பா படிச்சிருங்க!

Posted By:
Subscribe to Boldsky

முகத்தில் ப்ளாக்ஹெட்ஸ் வருவது இன்றைக்கு பலரது கவலையாக இருக்கிறது. வழக்கமாக பராமரிப்பது போலத்தான் பராமரிக்கிறேன் ஆனால் திடீரென்று இப்படியாகிவிட்டது என்ற கவலை எல்லாரிடத்திலும் இருக்கும்.

பலரும் ப்ளாக்ஹெட்ஸ் என்பது அழுக்குகள், சரியாக பராமரிகக்தாததால் ஏற்படுகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் ஒரு காரணம், அது மட்டுமே காரணமல்ல. அது எதனால் ஏற்படுகிறது, அதனை எப்படி போக்கலாம்.

Surprising Home remedies to Get Rid of Blackheads on Nose

எளிமுறையில் வீட்டிலேயே சரி செய்ய என்ன வழி ஆகியவற்றைப் பற்றி விவரமாக இக்கட்டுரையில் நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ப்ளாக்ஹெட்ஸ் என்றால் :

ப்ளாக்ஹெட்ஸ் என்றால் :

ப்ளாக்ஹெட்ஸ் என்பது ஒரு ஆக்னீ. பரு போலவே இருந்தாலும் அவை கருப்பாக தெரியும் என்பதால அதனை ப்ளாக்ஹெட்ஸ் என்று சொல்கிறார்கள். பலருக்கும் முகத்தில் இருக்கக்கூடிய டீ ஜோன் பகுதியில் தான் ப்ளாக் ஹெட்ஸ் நிறையத் தோன்றிடும்.

முன் நெற்றி, மூக்கு ஆகிய பகுதிகளில் தான் அதிகமாக தோன்றிடும். இதைத் தாண்டியும் சிலருக்கு கை,கால்,கன்னம்,கழுத்து,போன்ற பகுதிகளிலும் ஏற்படக்கூடும்.

காரணம் :

காரணம் :

இந்த ப்ளாக்ஹெட்ஸ் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. அவற்றில் முதன்மையான அழுக்கு. அழுக்கு என்றதும் உங்கள் சருமம் வெளியில் அழுக்காக இருக்கிறது என்று நினைக்காதீர்கள். அழுக்கு வெளியேறவில்லை என்றாலும் இப்படியான பிரச்சனை ஏற்படும்.

அதே போல உங்கள் சருமத்தில் அதிகப்படியாக எண்ணெய் சுரந்தாலும் அதிலும் அழுக்குப்படிந்து இப்படியான பிரச்சனைகள் ஏற்படும்.

எண்ணெய் சருமம் :

எண்ணெய் சருமம் :

இதுவும் ஒரு வகை பரு தான். ஆனால் இவை கருப்பு நிறத்தில் இருக்கும். பருவை விட இது மறைவதற்கு அதிக காலங்களை எடுத்துக் கொள்ளும். முகத்தில் கரும்புள்ளி தோன்றுவதற்கு வெறும் பாக்டீரியா மட்டுமே காரணமல்ல .

அதிக எண்ணெய் சுரப்பும், சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் வெளியேறாமல் சரும துவாரங்களை அடைத்துக் கொள்வதும் தான் முக்கியக் காரணம்.

தலைமுடி :

தலைமுடி :

தலைமுடிக்கும் சருமத்திற்கும் எதாவது சம்மந்தம் இருக்கிறதா? என்று யோசிக்காதீர்கள் கண்டிப்பாக இருக்கிறது. உங்கள் தலைமுடியில் பொடுகுப் பிரச்சனை ஏற்பட்டால், அதிக வறட்சி ஏற்பட்டு அரிப்பு ஏற்பட்டால் உங்கள் முகத்தில், சருமத்தில் அந்த பாதிப்பு பிரதிபலிக்கும்.

கரும்புள்ளி மறையவில்லை என்று சொல்லி வெறும் அதற்கான மேற்பூச்சு வேலைகளை மட்டும் செய்து கொண்டேயிருந்தால் எவ்வளவு காலம் ஆனாலும் கரும்புள்ளி மறையாது. உங்களின் தலையையும் சுத்தமாக பராமரிக்க வேண்டும்.

மருந்துகள் :

மருந்துகள் :

சில வகை மருந்துகளின் பின் விளைவுகளாகவும் சிலருக்கு கரும்புள்ளிகள் தோன்றலாம். ஆண்ட்ரோஜெனிக் ஸ்டிராய்ட்ஸ்,ஆண்ட்டி கன்வல்சண்ட்ஸ்,கார்டிகாஸ் ஸ்டிராய்ட்ஸ் மற்றும் லித்தியம் கலந்த மருந்துகள் கரும்புள்ளியை ஏற்படுத்திடும்.

இதன் முக்கிய வேலையை கரும்புள்ளியை உருவாக்குவது அல்ல, இந்த வகை மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் பின் விளைவாக முகத்தில் கரும்புள்ளி தோன்றுகிறது

ஹார்மோன் மாற்றங்கள் :

ஹார்மோன் மாற்றங்கள் :

நம் முகத்தில் தோன்றிடும் பருவாக இருந்தாலும் சரி, கரும்புள்ளியாக இருந்தாலும் சரி அதற்கு ஹார்மோன் மாற்றங்கள் முக்கியமான இடத்தை வகிக்கின்றன. இதற்கு உதாரணமாக பெண்கள் பருவயதை அடையும் போது முகத்தில் பருக்கள் தோன்றுகிறதல்லவா? அது போலத்தான். சில பெண்களுக்கு மாதவிடாய் நேரம் நெருங்கி விட்டதென்றால் பருக்கள் வந்து விடும். மாதவிடாய் முடிந்ததும் பருக்கள் தானாக மறையும்.

மேக்கப் :

மேக்கப் :

சருமத்தில் அதிகப்படியாக மேக்கப் போடுவதும் ஆபத்து. உங்கள் சருமத்திற்கு ஒவ்வாத மேக்கப் போடுவது, சருமத்தில் இருக்கும் அழுக்குகள் வெளியேற முடியாத வண்ணம் எப்போதும் ஹெவியான மேக்கப் போடுவது, நீங்கள் பயன்படுத்தும் மேக்கப் ப்ராடெக்ட்ஸ் அடிக்கடி மாற்றிக் கொண்டேயிருப்பது ஆகியவையும் ஓரு காரணமாக இருக்கிறது.

வியர்வை :

வியர்வை :

இதனை சரியாக முகத்தை பராமரிக்காமல் இருப்பது என்று எடுத்துக் கொள்ளலாம். நாள்ன் முழுமைக்கும் முகத்தில் சேரும் அழுக்குகள் அன்று இரவோ அல்லது மாலையிலோ முகத்தை கழுவிட வேண்டும்.

இல்லையென்றல அழுக்கள் சேர்ந்து கரும்புள்ளியை உருவாக்கும். சில நேரங்கள் அது பாக்டீரியா தொற்றாக உருவாகி அது பெரும் பிரச்சனையை ஏற்படுத்திடும்.

கிள்ளாதீர்கள் :

கிள்ளாதீர்கள் :

சிலர் பரு தோன்றுவிட்டதும் உடனே அதனைக் கிள்ளி எடுத்து விடுவார்கள். கைகளால் நெருடிக் கிள்ளிவிடப்பட்ட பருவின் சீழ் அகன்றவுடன் தோலில் ஒரு பள்ளம் ஏற்பட்டு வடுவாக, நிலைத்து விடும். அடிக்கடி பருக்களைத் தொடுவதாலும் அழுத்துவதாலும் அவை பெருத்து ஆழமாக ஆகிவிடுவதும் உண்டு.

பருக்களைக் கிள்ளுவது தவறு. நெருடாமல், தொடாமல் இருந்தால் பருக்கள் வடுவின்றித் தாமே மறைந்துவிடும். கிள்ளுவதால் அரைகுறையாகப் பழுத்த பருக் கட்டி உடைந்து, பெரும் வேதனைகளைக் கொடுத்திடும்.

மூக்கு :

மூக்கு :

பலருக்கும் கரும்புள்ளி ஏற்படும் முக்கிய இடம் மூக்கு தான். ப்ளாக்ஹெட்ஸ் போக்குவதற்காக என்று சொல்லி கெமிக்கல் கலந்த விதவிதமான க்ரீம்களை வாங்கி உங்களை சோதனை எலிகாளாக மாற்றாமல் இயற்கையாகவே கெமிக்கல் கலக்காத பொருட்களைக் கொண்டு எப்படி கரும்புள்ளியை போக்கலாம் என்று யோசியுங்கள்.

வீட்டிலிருக்கும் பொருட்கள் என்பதால் இதற்கென்று தனிப்பட்ட செலவுகள் உங்களுக்கு ஆகாது. அதோடு இதனை செய்துள்ள உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். என்ன முயற்சித்துப் பார்க்க தயாரா?

கற்றாழை :

கற்றாழை :

கற்றாழையின் ஜெல்லை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தினமும் தடவி மசாஜ் செய்து கழுவினால், நாளடைவில் கரும்புள்ளிகள் வருவதை தவிர்க்கலாம்.

வேப்பிலை :

வேப்பிலை :

வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரில் ஆவிப்பிடித்து, முகத்தை நல்ல சுத்தமான துணியால் துடைத்தால், கரும்புள்ளிகள் போய்விடும்.

கடலை மாவு :

கடலை மாவு :

கடலை மாவை பால் மற்றும் எலுமிச்சை சாறு ஊற்றி கலந்து, வேண்டுமெனில் அத்துடன் சிறிது தேனையும் சேர்த்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், இயற்கையாகவே கரும்புள்ளிகள் போய்விடும்.

 சந்தனம் :

சந்தனம் :

சந்தனப் பொடியில், சிறிது மஞ்சள் தூளை சேர்த்து, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் கலந்து, முகத்திற்கு தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

பட்டை :

பட்டை :

பட்டையை பொடி செய்து, அதில் தேன் ஊற்றி கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் இரவு படுக்கும் போது தடவி, காலையில் எழுந்து கழுவினாலும் நல்ல பலன் கிடைக்கும்.

 பாதாம் :

பாதாம் :

பாதாமை இரவில் படுக்கும் போது பாலில் ஊற வைத்து, காலையில் எழுந்து பேஸ்ட் போல் அரைத்து, முகத்தில் தடவி கையால் மென்மையாக மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, மீண்டும் பாலை முகத்தில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, வெது வெதுப்பான நீரில் அலச வேண்டும்.

டூத் பேஸ்ட் :

டூத் பேஸ்ட் :

கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் டூத் பேஸ்ட் தடவி காய வைத்து, பின் மென்மையாக மசாஜ் செய்து, 5-10 நிமிடம் ஆவி பிடித்து, காட்டனால் தேய்த்து எடுத்து, இறுதியில் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் வெளியேறுவ தோடு, சருமத்துளைகளும் மூடிக் கொள்ளும்.

ஆலிவ் ஆயில் :

ஆலிவ் ஆயில் :

ஆலிவ் ஆயிலை 5-6 டீஸ்பூன் ஆலிவ் ஆயிலில், 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்து, பின் ஆவிப்பிடித்து, ஈரமான துணியால் தேய்த்தால், கரும்புள்ளிகள் எளிதில் நீங்கி விடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Surprising Home remedies to Get Rid of Blackheads on Nose

Surprising Home remedies to Get Rid of Blackheads on Nose