For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாள் பூரா... விளையாடிட்டு வர்ற குழந்தைக்கு இந்த ட்ரீட்மெண்ட் கொடுங்க!

விளையாட்டில் மூழ்கியிருக்கும் குழந்தை சருமத்தை பாதுகாப்பதில் கவனம் செலுத்தாது. அதற்காக சில யோசனைகள்.

|

குழந்தைகளின் கவனம் அதிகப்படியான நேரம் விளையாட்டில் தான் இருக்கும். அதிக நேரம் வெயிலில் இருப்பதால் அவர்களின் சருமத்திற்கு பொலிவிழந்து காணப்படுவதுடன் அலர்ஜி போன்ற சருமப்பிரச்சனைகளும் வரும்.

Skin care Tips for kids

Image Courtesy

குழந்தைகளுக்கு மிகவும் மென்மையான சருமம் இருக்குமென்பதால் நாம் அதனை கவனமாக கையாள வேண்டும். குழந்தைகளுக்கு பெரியவர்கள் பயன்படுத்துவதைப் போல க்ரீம் பயன்படுத்த முடியாது என்பதால் வீட்டிலேயே செய்யக்கூடிய சில குறிப்புகள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பால் மற்றும் மஞ்சள் :

பால் மற்றும் மஞ்சள் :

மஞ்சளில் பால் சேர்த்து பேஸ்ட்டாக கலந்து கொள்ளுங்கள், அதனை குழந்தையின் முகம், கை,கால்களில் தடவி காய்ந்தது கழுவிவிடலாம். இவை சருமத்தில் தொற்று ஏற்படாமல் காப்பதுடன், வெயிலினால் ஏற்படும் கருமையை நீக்கும்.

ஓட்ஸ் மிக்சர் :

ஓட்ஸ் மிக்சர் :

ஓட்ஸ் அத்துடன் மூன்று டீஸ்ப்பூன் தக்காளிப்பழச்சாறு ஒரு டீஸ்ப்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்தக் கலவையை குழந்தையின் முகத்தில் தடவுங்கள். சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.

கெமிக்கல் :

கெமிக்கல் :

குழந்தைகளின் சருமத்தில் கெமிக்கல் க்ரீம்,லோஷன் போன்றவற்றை தடவாதீர்கள். சிராய்ப்பு, அரிப்பு போன்ற தொல்லை இருந்தால் ஆலிவ் வேரா ஜெல் தடவலாம்.

தேங்காய் எண்ணெய் :

தேங்காய் எண்ணெய் :

சிறந்த மாய்சரைசராக செயல்படும் தேங்காய் எண்ணெயை குழந்தையின் சருமத்தில் தடவி லேசாக மசாஜ் செய்திடுங்கள். இதனால் குழந்தையின் தசை மற்றும் எலும்புகள் வலுவடையும்.

உணவுகள் :

உணவுகள் :

ஆரோக்கியமான உணவுகளை குழந்தைகளுக்கு கொடுங்கள். பச்சைக் காய்கறிகறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். பழங்களில் இருக்கும் ஆன்ட்டி ஆக்ஸிடண்ட் குழந்தையின் செயல்திறனை அதிகரிக்கும் அத்துடன் சருமத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

பீட்ரூட் :

பீட்ரூட் :

வெயில் விளையாடிவிட்டு முகமெல்லாம் கருத்துப்போய் வரும் குழந்தைகளுக்கு இதனை செய்யலாம். பீட்ரூட்டை சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு ஸ்பூன் மஞ்சளை கலந்து முகம் மற்றும் கையில் தடவுங்கள். இருபது நிமிடங்களில் கழுவிவிடலாம்.

 கொண்டக்கடலை :

கொண்டக்கடலை :

ஒரு கைப்பிடியளவு கொண்டக்கடலையை அரைத்து பொடியாக்கிக்கொள்ளுங்கள். அத்துடன் பயித்தம் மாவு, இரண்டு டீஸ்ப்பூன் பால் சேர்த்து சருமத்தில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும். இதனைத் தொடர்ந்து செய்தால் சருமத்தில் தேவையற்ற முடி வளர்வது தவிர்க்கப்படும்.

தண்ணீர் :

தண்ணீர் :

குழந்தையை அடிக்கடி தண்ணீர் குடிக்கச்செய்திடுங்கள். அதிகப்படியான தண்ணீர் குடித்தால் தான் உடல் நீர்சத்துடன் இருக்கும். உடலிலிருக்கும் நச்சுக்கள் விரைவாக வெளியேறவும் வழிவகுக்கும். உடல் ஆரோக்கியமாக இருந்தால் சருமமும் ஆரோக்கியத்துடன் காணப்படும்.

புதினா :

புதினா :

புதினா இலைகளை கசக்கி சாறு எடுத்து அதனை குழந்தையின் முகத்தில் தடவலாம். இதனால் குழந்தையின் சருமத்தில் வரும் அலர்ஜிகள் தவிர்க்கப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Skin care Tips for kids

Skin care Tips for kids
Story first published: Monday, August 7, 2017, 18:22 [IST]
Desktop Bottom Promotion