For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கற்பூரம் கொண்டு உங்கள் கூந்தல் மற்றும் சரும அழகை அதிகப்படுத்தும் அருமையான வழிகள்!!

By Bala Karthik
|

கற்பூரத்தில் சிகிச்சை பண்புகள் நிறைந்திருக்க, சருமம் மற்றும் கூந்தலை பராமரிக்க இந்த கற்பூரம் பல வகைகளில் நமக்கு உதவி புரிகிறது. கற்பூரத்தை அன்றாட அழகு வாழ்க்கையில் உபயோகிக்கும் ஒரு பொருளாக நீங்கள் இவ்வளவு நாட்கள் பார்க்கவில்லையென்றால்...

Overall Beauty Benefits Of Camphor

கீழே குறிப்பிடப்படும் பயன்பாடுகளின் பட்டியல் வாயிலாக, இனிமேல் உபயோகிக்க முன்வருவீர்கள் என்பதில் சந்தேகம் வேண்டாம். உங்கள் சருமத்தையும் கூந்தலையும் பாதுகாக்கும் கற்பூரத்தின் பயன்பாடுகள் என்ன என்பதனை நாம் இப்பொழுது பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சருமத்தின் அரிப்புக்கான சிகிச்சை:

சருமத்தின் அரிப்புக்கான சிகிச்சை:

சில கற்பூரத்தை உங்கள் கைகளில் எடுத்துகொள்ளுங்கள். அதனை சூடான தேங்காய் எண்ணெய் கொண்டு உருக்கி கொள்ளுங்கள்.

அந்த கற்பூரம் நன்றாக உருகிவிட...அந்த கலவையை கொண்டு, உங்கள் முகத்தையும், உடம்பையும் நன்றாக தேய்த்து மசாஜ் செய்து கொள்ளுங்கள். ஓர் இரவு வைத்திருந்து...சூடான தண்ணீரை கொண்டு காலையில் முகத்தை கழுவ வேண்டும்.

முகப்பருக்களுக்கு முடிவு கட்ட :

முகப்பருக்களுக்கு முடிவு கட்ட :

உங்கள் சருமத்தில் ஏற்படும் அரிப்பை மட்டுமே இந்த கற்பூரம் போக்குவது அல்ல. அத்துடன்...முகப்பரு, வீக்கம், பருக்கள் ஆகியவற்றையும் இந்த கற்பூரம் கொண்டு நம்மால் சரிசெய்ய முடிகிறது.

சில துளசி இலைகளை எடுத்துகொள்ளுங்கள். அதனை நன்றாக அரைத்து பேஸ்ட் போல் வைத்துகொள்ளுங்கள். அத்துடன், இரண்டு அல்லது மூன்று சொட்டு கற்பூர எண்ணெயை அந்த பேஸ்டுடன் சேர்த்து கொள்ளுங்கள். அதனை உங்கள் முகப்பருக்களின் மீது தேய்த்து கொள்ளுங்கள்.

சில மணி நேரங்கள் காத்திருந்து, அதன்பின் குளிர்ந்த நீரினை கொண்டு கழுவுங்கள். கற்பூரம் மற்றும் துளசியை கொண்டு முகப்பருக்களை அகற்றுவது மிகவும் எளிதாகவும் இருக்கிறது.

சூரிய எரிச்சலில் இருந்து விடுதலை தரும் கற்பூரம்:

சூரிய எரிச்சலில் இருந்து விடுதலை தரும் கற்பூரம்:

ஒரு ஸ்பூன் அலோ வேரா ஜெல்லை எடுத்துகொள்ளுங்கள். அத்துடன் இரண்டு ஸ்பூன் கற்பூர எண்ணெயையும், ½ சிட்டிகை மஞ்சளையும் சேர்த்து கொள்ளுங்கள்.

அவற்றை நன்றாக பிசைந்து, அந்த முகமூடி போன்ற கலவையை சூரியனால் சருமம் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள்.

10 நிமிடங்களுக்குப் பின் குளிர்ந்த நீரினை கொண்டு உங்கள் சருமத்தை கழுவுங்கள். இந்த பேஸ் மாஸ்க், உங்களுடைய சருமத்தில் சூரியனால் ஏற்பட்ட எரிச்சலை போக்கவும், தோலை சுத்தமாக வைத்துகொள்ளவும் உதவி புரிகிறது.

 உச்சந்தலையில் ஏற்படும் அரிப்பை போக்க வழி:

உச்சந்தலையில் ஏற்படும் அரிப்பை போக்க வழி:

கொஞ்சம் கற்பூர எண்ணெயை எடுத்து கொள்ளுங்கள். அத்துடன் அதற்கு சமமான தேங்காய் எண்ணெயையும் எடுத்துகொண்டு இரண்டையும் கலந்து கொள்ளுங்கள். அந்த கலவையை, உங்கள் உச்சந்தலையில் நன்றாக தேய்த்து மசாஜ் செய்து கொள்ளுங்கள்.

அதன் பின்னர் சூடான டவலை கொண்டு உங்கள் முடியை முடிந்துவிடுங்கள். ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஷாம்பு போட்டு உங்கள் தலையை நன்றாக கழுவி விடுங்கள்.

பொடுகு பிரச்சனைக்கு முடிவு கட்டும் கற்பூரம்:

பொடுகு பிரச்சனைக்கு முடிவு கட்டும் கற்பூரம்:

கற்பூர எண்ணெயை, ஒரு சில சொட்டுகள் ஷாம்புடனோ அல்லது கண்டிஷ்னருடனோ சேர்த்து பயனடைந்து பொடுகை போக்கலாம்.

இந்த கலவையை கொண்டு உங்கள் உச்சந்தலையை மசாஜ் செய்துகொண்டு...அதன் பின் குளிர்ந்த நீரினை கொண்டு உங்கள் கூந்தலை கழுவ வேண்டும்.

பொடுகை போக்க மற்றுமொரு வழியாக...இரண்டு ஸ்பூன் தயிரையும், இரண்டு ஸ்பூன் கற்பூர எண்ணெயையும் கலந்து கொண்டு...அந்த கலவையை உங்கள் உச்சந்தலையில் தேய்த்து, ஒரு மணி நேரத்திற்கு பிறகு கழுவுவதன் மூலம் பொடுகை நாம் போக்கலாம்.

முடி உதிர்தலுக்கு :

முடி உதிர்தலுக்கு :

உங்கள் முடி மெலிந்து காணப்படுவதோடு, கொட்டவும் தொடங்குகிறதா? தினமும் இந்த கற்பூர எண்ணெயை நாம் பயன்படுத்துவதன் மூலம்...இத்தகைய பிரச்சனைகளுக்கு நம்மால் முடிவை கொண்டு வர முடியும்.

உங்கள் உச்சந்தலையை இந்த கற்பூர எண்ணெயை கொண்டு தினமும் மசாஜ் செய்துவர...முடி உதிர்தல் உங்களை விட்டு நீங்கும். கற்பூரத்தை இன்னொரு வழியிலும் நம்மால் பயன்படுத்த முடிகிறது.

அது என்னவென்றால்...கற்பூர எண்ணெயை, அரை கப் மேயனைஸுடன் (mayonnaise) சேர்த்து உச்சந்தலையை மசாஜ் செய்வதன் மூலமாகவும் கூந்தல் உதிர்வதனை நம்மால் தடுக்க முடிகிறது.

குதிகால் வெடிப்பினை போக்க:

குதிகால் வெடிப்பினை போக்க:

உங்களுடைய குதிகால் வரண்டு போவதுடன், வெடிப்பும் ஏற்படுகிறது என்றால்...கற்பூர எண்ணெயை நாம் பயன்படுத்துதன் மூலமாக பயனடையலாம்.

கற்பூர எண்ணெயை ஒரு சில துளிகள் எடுத்துகொண்டு, சுடு தண்ணீரோடு சேர்த்து...உங்கள் கால்களை நன்றாக ஊற வைக்க வேண்டும்.

இவ்வாறு முப்பது நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். அதேபோல், தினமும் தூங்க செல்லும் முன், கற்பூர எண்ணெயை கொண்டு உங்கள் பாதங்களை மசாஜ் செய்வதன் மூலமாகவும் குதிகால் வெடிப்பு பிரச்சனைக்கு குணமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Overall Beauty Benefits Of Camphor

Overall Beauty Benefits Of Camphor
Story first published: Wednesday, June 7, 2017, 12:31 [IST]
Desktop Bottom Promotion